இ-பேப்பர்

தலையங்கம்

படங்கள்

வீடியோ

கல்வி

மாவட்ட மசாலா

முகப்பு

தமிழகம்

இந்தியா

உலகம்

குற்றம்

விளையாட்டு

மருத்துவம்

ரீல்மா

ஆன்மிகம்

வேலைவாய்ப்பு

தொழில்

முகப்பு

›

குற்றம்

திருத்தணியில் பைக் திருட்டு அதிகரிப்பு: புகார் மீது போலீசார் அலட்சியம்

6/6/2025 3:46:10 PM
தனியார் பாலில் கலப்படம் பிரதமர் மோடியிடம் புகார் : அமைச்சர் ராஜேந்திர பாலாஜி பரபரப்பு பேட்டி எதிர்கட்சிகளின் ஜனாதிபதி வேட்பாளர் மீராகுமார் மனு தாக்கல்

திருத்தணி: திருத்தணி பகுதியில் பைக் திருட்டுக்கள் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. இதுபற்றி புகார் கொடுத்தால் போலீசார் நடவடிக்கை எடுப்பது இல்லை என்று பொதுமக்கள் கூறுகின்றனர். திருத்தணி சாய்பாபா நகரில் வசிப்பவர் கிறிஸ்டோபர். இவர் மடம் கிராம விஏஓவாக இருக்கிறார். இவர் நேற்று முன்தினம் தனது பைக்கை வீட்டின் முன் நிறுத்திவிட்டு சாப்பிட சென்றார். பின்னர் அவர் வந்தபோது பைக்கை காணவில்லை. திருத்தணி அருகே பிஜிஎன்.கண்டிகை பகுதியை சேர்ந்தவர் மகேஷ். இவர் நேற்று திருத்தணி பஸ்  நிலையம் அருகே சன்னதி தெருவில் பைக்கை நிறுத்திவிட்டு அங்குள்ள ஓட்டலுக்கு சாப்பிட சென்றார். பின்னர் அவர் வந்தபோது பைக்கை காணவில்லை என்றதும் திடுக்கிட்டார். இதுபற்றி பாதிக்கப்பட்டவர்கள் திருத்தணி போலீசில் புகார் செய்துள்ளனர்.

இதுபற்றி பொதுமக்கள் கூறியதாவது: திருத்தணி நகர் மற்றும் சுற்றுப்புற ஊர்களில் அடிக்கடி பைக் திருட்டுப்போனது. இதை தடுக்க கண்காணிப்பு கேமரா பொருத்த முடிவு செய்த போலீசார், பொதுமக்கள், வியாபாரிகளிடம் பணம் வசூலித்தனர். திருத்தணி பஸ் நிலையம், பைபாஸ் சாலை, சன்னதி தெரு உள்பட முக்கிய பகுதிகள் என பல இடங்களில் கண்காணிப்பு கேமராக்கள் பொருத்தப்பட்டது. பிறகு இவற்றை பராமரிக்காமல் விட்டுவிட்டனர்.
தற்போது திருத்தணி பகுதியில் அடிக்கடி பைக் திருட்டு நடைபெறுகிறது. இதுவரை சுமார் 300க்கு மேற்பட்ட பைக்குகள் திருடப்பட்டுள்ளது. இதுபற்றி புகார் கொடுத்தால் போலீசார் நடவடிக்கை எடுப்பது கிடையாது. கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சிகளையும் ஆய்வு செய்து பார்ப்பது கிடையாது. போலீசாரின் நடவடிக்கை மிகவும் மெத்தனமான உள்ளது. எனவே, இவ்விஷயத்தில் எஸ்பி தலையிட்டு நடவடிக்கை எடுக்க வேண்டும். ஒழுங்காக பணி செய்யாத போலீஸ்காரர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். பைக் திருட்டை கண்டுபிடிக்க தனிப்படை அமைக்க வேண்டும்.

மேலும் சில
  • கர்ப்பிணி மனைவிக்கு அரிவாள் வெட்டு : கணவன் அதிரடி கைது



  • ‘நீ எனக்கு என்ன தரப்போற..’ உதவித்தொகை கேட்ட பெண்ணிடம் கிராம நிர்வாக அதிகாரி செக்ஸ் டார்ச்சர்



  • 3 நாய்களை கொன்று வீசிவிட்டு மாஜி துணை கலெக்டர் வீட்டில் 15 பவுன் நகைகள் கொள்ளை



  • மீஞ்சூரில் இன்று கழுத்தறுத்து வாலிபர் கொலை



  • ரூ.1 லட்சத்துக்கு வாங்கி 10ம் வகுப்பு மாணவி பலாத்காரம்?: புரோட்டா மாஸ்டருக்கு போலீஸ் வலை



  • போலீசார் மெத்தனத்தால் விபரீதம் பெண் வெட்டி கொலை



  • பஸ்சில் கட்டுக்கட்டாக வெளிநாட்டு பணம் சிக்கியது: கானா நாட்டு ஆசாமி கைது



  • 10 பேரை ஏமாற்றி திருமணம் மணக்கோலத்தில் சிக்கிய ‘கல்யாண ராணி’



  • தாழம்பூரில் உறவினரை மிரட்டியவர்களை தட்டி கேட்டவர் கொலை: 4 பேருக்கு வலை



  • கோடநாடு கொலை, கொள்ளை வழக்கு: கோவை சிறையில் அடையாள அணிவகுப்பு



Facebook

Twitter

Shriya Beats Sunny Leone
சன்னிலியோனை ஓரம் கட்டிய ஸ்ரேயா
  • எஸ்ஏ பொறியியல் கல்லூரியில் கருத்தரங்கு
  • பொன்னேரி நூலக வார விழா
  • பிரியதர்ஷினி கல்லூரியில் முதல் வருட மாணவர்களுக்கு வரவேற்பு
  • பட்டதாரி ஆசிரியர் தேர்வில் வெயிட்டேஜ் மதிப்பெண் ரத்து செய்ய வேண்டும்: ராமதாஸ் வலியுறுத்தல்
தலையங்கம் படங்கள் வீடியோ தமிழகம் இந்தியா ரீல்மா விளையாட்டு மாவட்ட மசாலா குற்றம் உலகம் கல்வி வேலை வாய்ப்பு தொழில் மருத்துவம் ஆன்மீகம் இ-பேப்பர் தினகரன் Facebook Twitter
Copyright 2016 All Rights Reserved to Kal Publications
No.229 Kutchery Road, Mylapore, Chennai - 600 004. Ph: 91-44-42209191
Website Advertisement
Ph: 91-44-42209191 Extn:21102, 21118
Newspaper Advertisement
Ph: +91 44 44676767
தொடர்புக்கு : [email protected] | செய்திகளை அனுப்ப : [email protected]