இ-பேப்பர்

தலையங்கம்

படங்கள்

வீடியோ

கல்வி

மாவட்ட மசாலா

முகப்பு

தமிழகம்

இந்தியா

உலகம்

குற்றம்

விளையாட்டு

மருத்துவம்

ரீல்மா

ஆன்மிகம்

வேலைவாய்ப்பு

தொழில்

முகப்பு

›

தமிழகம்

படத்தில் பணியாற்றிய வேலுபிரபாகரன்- ஷெர்லி கைப்பிடித்தனர் 60 வயது இயக்குனர்-35 வயது நடிகை திடீர் திருமணம்: சிறப்பு காட்சியில் பரபரப்பு

6/3/2025 5:19:09 PM
3 சதவீத ஜி.எஸ்.டி. விதிப்பால் ஒரு பவுன் தங்கம் ரூ.36,000 வரை உயரும் : உற்பத்தியாளர்கள் எதிர்ப்பு தனியார் பள்ளிகள் கட்டண விவரத்தை சிபிஎஸ்இயிடம் சமர்பிக்க வேண்டும் : மத்திய அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர் உத்தரவு

சென்னை: 60 வயது இயக்குனர் வேலுபிரபாகரன், 35 வயது நடிகை ஷெர்லியை இன்று காலை திடீர் திருமணம் செய்தார்.நாளைய மனிதன், அதிசய மனிதன், அசுரன், ராஜாளி, கடவுள், சிவன், காதல் அரங்கம் உள்ளிட்ட பல்வேறு படங்களை இயக்கியவர் வேலு பிரபாகரன். தற்போது ‘ஒரு இயக்குன ரின் காதல் டைரி’ படத்தை இயக்கி நடித்திருக்கிறார். இப்படத்தின் சிறப்பு காட்சி இன்று காலை சென்னையில் திரையிடப்பட்டது. முன்னதாக அரங்கிற்கு ேவலு பிரபாகரன் வந்தார். அவருடன் நடிகை ஷெர்லி வந்தார். இவர் வேலுபிரபாகரன் இயக்கிய ‘காதல் அரங்கம்’ படத்தில் கதாநாயகியாக நடித்தவர்.

சிறப்பு காட்சிக்கு வந்திருந்த பத்திரிகையாளர்கள் முன்னிலையில் திடீரென்று ஷெர்லியை மணந்துகொள்ளப்போவதாக வேலுபிரபாகரன் அறிவித்தார். அதற்கு ஷெர்லியும் சம்மதம் தெரிவித்தார். இருவரும் மோதிரம் மாற்றிக்கொண்டு திருமணம் செய்துகொண்டனர். வேலுபிரபாகரனுக்கு 60 வயது ஆகிறது. ஷெர்லிக்கு 35 வயது ஆகிறது. திருமணம்பற்றி வேலுபிரபாகரன் கூறும்போது,’60 வயதாகும் எனக்கு ஒரு வாழ்க்கை துணை தேவைப் பட்டது. ஷெர்லியிடம் தெரிவித்தபோது அவர் திருமணம் செய்துகொள்ள சம்மதித்தார். இது நியாயமான முடிவு என்று எனக்கு தோன்றியது. ஷெர்லி சம்மதத்துடன் இந்த திருமணம் நடந்துள்ளது. முறைப்படி திருமணத்தை பதிவு செய்வேன். அடுத்து கடவுள் 2ம் பாகம் படம் இயக்க உள்ளேன்’ என்றார்.ஷெர்லி கூறும்போது,’காதல் அரங்கம் என்ற படத்தில்தான் நான் நடித்தேன் பிறகு வெளி நாடு சென்றுவிட்டேன். வேலுபிரபாகரனின் நேர்மை எனக்கு பிடித்தது. அவரை மணக்க சம்மதித்தேன். இனி படங்களில் நடிக்க மாட்டேன்’ என்றார்.


மேலும் சில
  • தவறான ஆபரேஷனால் பெண் சாவு? எஸ்ஆர்எம் மருத்துவமனை முற்றுகை



  • மூன்று அணியாக ஆளும்கட்சி எம்எல்ஏக்கள் : தமிழக சட்டசபை ஜூன் 14ல் கூடுகிறது



  • வீடுகள் ஒதுக்கீட்டிற்கு பணம் கேட்பதாக கூறி அமைச்சர் வேலுமணி வீட்டை இரவில் பெண்கள் முற்றுகை



  • தமிழகத்தில் கட்சியை வலுப்படுத்த நடவடிக்கை காங். நிர்வாகிகளுடன் ராகுல் ஆலோசனை: சென்னை சத்தியமூர்த்தி பவனில் நடந்தது



  • கோவையில் 4 பேரை கொன்ற யானை டாப்சிலிப் வனத்தில் விடுவிப்பு



  • இந்தியாவின் அதிநவீன ஜிஎஸ்எல்வி ராக்கெட் ஜிசாட்-19 செயற்கைகோளுடன் 5ல் விண்ணில் பயணம்: இன்று மாலை கவுன்டவுன் அறிவிப்பு



  • தங்கம் பவுனுக்கு 248 உயர்ந்தது



  • பழுதாகி நின்ற அரசு பஸ் மீது லாரி மோதல் 3 பேர் உடல் நசுங்கி பரிதாப சாவு



  • நெல்லை தொடர்ந்து, பருத்தியும் கருகியது விரக்தியில் விவசாயி தீக்குளித்து சாவு



  • கோவை அருகே இன்று அதிகாலை யானை தாக்கி சிறுமி உள்பட 4 பேர் பலி



Facebook

Twitter

Shriya Beats Sunny Leone
சன்னிலியோனை ஓரம் கட்டிய ஸ்ரேயா
  • எஸ்ஏ பொறியியல் கல்லூரியில் கருத்தரங்கு
  • பொன்னேரி நூலக வார விழா
  • பிரியதர்ஷினி கல்லூரியில் முதல் வருட மாணவர்களுக்கு வரவேற்பு
  • பட்டதாரி ஆசிரியர் தேர்வில் வெயிட்டேஜ் மதிப்பெண் ரத்து செய்ய வேண்டும்: ராமதாஸ் வலியுறுத்தல்
தலையங்கம் படங்கள் வீடியோ தமிழகம் இந்தியா ரீல்மா விளையாட்டு மாவட்ட மசாலா குற்றம் உலகம் கல்வி வேலை வாய்ப்பு தொழில் மருத்துவம் ஆன்மீகம் இ-பேப்பர் தினகரன் Facebook Twitter
Copyright 2016 All Rights Reserved to Kal Publications
No.229 Kutchery Road, Mylapore, Chennai - 600 004. Ph: 91-44-42209191
Website Advertisement
Ph: 91-44-42209191 Extn:21102, 21118
Newspaper Advertisement
Ph: +91 44 44676767
தொடர்புக்கு : [email protected] | செய்திகளை அனுப்ப : [email protected]