இ-பேப்பர்

தலையங்கம்

படங்கள்

வீடியோ

கல்வி

மாவட்ட மசாலா

முகப்பு

தமிழகம்

இந்தியா

உலகம்

குற்றம்

விளையாட்டு

மருத்துவம்

ரீல்மா

ஆன்மிகம்

வேலைவாய்ப்பு

தொழில்

முகப்பு

›

தமிழகம்

தங்கம் பவுனுக்கு 248 உயர்ந்தது

6/3/2025 5:16:27 PM
3 சதவீத ஜி.எஸ்.டி. விதிப்பால் ஒரு பவுன் தங்கம் ரூ.36,000 வரை உயரும் : உற்பத்தியாளர்கள் எதிர்ப்பு தனியார் பள்ளிகள் கட்டண விவரத்தை சிபிஎஸ்இயிடம் சமர்பிக்க வேண்டும் : மத்திய அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர் உத்தரவு

சென்னை : தங்கம் விலை கடந்த மாதம் ஏற்றம், இறக்கத்தில் காணப்பட்டது. மேலும், திடீரென விலை உயர்வதும், குறைவதுமான போக்கும் காணப்பட்டது. இந்த நிலையில், இந்த மாதம் 1ம் தேதி ஒரு பவுன் தங்கம் ரூ.22,272க்கு விற்கப்பட்டது. நேற்று ஒரு பவுன் தங்கம் ரூ.22,176க்கு விற்பனையானது. இந்த நிலையில் இன்று காலை  தங்கம் விலை கடுமையாக உயந்தது. கிராமுக்கு ரூ.31 அதிகரித்து ஒரு கிராம் ரூ.2,803க்கும், பவுனுக்கு ரூ.248 உயர்ந்து ஒரு பவுன் ரூ.22,424க்கும் விற்பனையானது.

ஒரே நாளில் தங்கம் விலை பவுனுக்கு ரூ.248 உயர்ந்துள்ளது நகை வாங்குவோரை அதிர்ச்சியடைய செய்துள்ளது. இந்த மாதத்தில் திருமணம் உள்ளிட்ட சுபமுகூர்த்த தினங்களில் அதிக அளவில் நடைபெறுவது வழக்கம். இந்த நேரத்தில் தங்கம் விலை உயர்ந்துள்ளது பெற்றோர்களையும் கவலையடைய செய்துள்ளது. நாளை ஞாயிற்றுக்கிழமை என்பதால் தங்கம் மார்க்கெட்டுக்கு விடுமுறை. இதனால், இன்றைய விலையிலேயே தங்கம் விற்பனையாகும் என்பது குறிப்பிடத்தக்கது.

இது குறித்து சென்னை வைரம், தங்கம் வியாபாரிகள் சங்க செயலாளர் சாந்தகுமார்,” ஜி.எஸ்.டி. வரியால் தங்கம் விலை உயர்ந்துள்ளது. இன்று டெல்லியில் ஜி.எஸ்.டி. கூட்டம் நடக்கிறது. இந்த கூட்டத்தில் எடுக்கும் முடிவை பொறுத்து தங்கம் விலை உயருமா? அல்லது குறையுமா? என்பது தெரியவரும். ஜி.எஸ்.டி. வரி உயர்ந்தால் தங்கம் விலை உயர வாய்ப்புள்ளது” என்றார்.


மேலும் சில
  • தவறான ஆபரேஷனால் பெண் சாவு? எஸ்ஆர்எம் மருத்துவமனை முற்றுகை



  • மூன்று அணியாக ஆளும்கட்சி எம்எல்ஏக்கள் : தமிழக சட்டசபை ஜூன் 14ல் கூடுகிறது



  • வீடுகள் ஒதுக்கீட்டிற்கு பணம் கேட்பதாக கூறி அமைச்சர் வேலுமணி வீட்டை இரவில் பெண்கள் முற்றுகை



  • தமிழகத்தில் கட்சியை வலுப்படுத்த நடவடிக்கை காங். நிர்வாகிகளுடன் ராகுல் ஆலோசனை: சென்னை சத்தியமூர்த்தி பவனில் நடந்தது



  • படத்தில் பணியாற்றிய வேலுபிரபாகரன்- ஷெர்லி கைப்பிடித்தனர் 60 வயது இயக்குனர்-35 வயது நடிகை திடீர் திருமணம்: சிறப்பு காட்சியில் பரபரப்பு



  • கோவையில் 4 பேரை கொன்ற யானை டாப்சிலிப் வனத்தில் விடுவிப்பு



  • இந்தியாவின் அதிநவீன ஜிஎஸ்எல்வி ராக்கெட் ஜிசாட்-19 செயற்கைகோளுடன் 5ல் விண்ணில் பயணம்: இன்று மாலை கவுன்டவுன் அறிவிப்பு



  • பழுதாகி நின்ற அரசு பஸ் மீது லாரி மோதல் 3 பேர் உடல் நசுங்கி பரிதாப சாவு



  • நெல்லை தொடர்ந்து, பருத்தியும் கருகியது விரக்தியில் விவசாயி தீக்குளித்து சாவு



  • கோவை அருகே இன்று அதிகாலை யானை தாக்கி சிறுமி உள்பட 4 பேர் பலி



Facebook

Twitter

Shriya Beats Sunny Leone
சன்னிலியோனை ஓரம் கட்டிய ஸ்ரேயா
  • எஸ்ஏ பொறியியல் கல்லூரியில் கருத்தரங்கு
  • பொன்னேரி நூலக வார விழா
  • பிரியதர்ஷினி கல்லூரியில் முதல் வருட மாணவர்களுக்கு வரவேற்பு
  • பட்டதாரி ஆசிரியர் தேர்வில் வெயிட்டேஜ் மதிப்பெண் ரத்து செய்ய வேண்டும்: ராமதாஸ் வலியுறுத்தல்
தலையங்கம் படங்கள் வீடியோ தமிழகம் இந்தியா ரீல்மா விளையாட்டு மாவட்ட மசாலா குற்றம் உலகம் கல்வி வேலை வாய்ப்பு தொழில் மருத்துவம் ஆன்மீகம் இ-பேப்பர் தினகரன் Facebook Twitter
Copyright 2016 All Rights Reserved to Kal Publications
No.229 Kutchery Road, Mylapore, Chennai - 600 004. Ph: 91-44-42209191
Website Advertisement
Ph: 91-44-42209191 Extn:21102, 21118
Newspaper Advertisement
Ph: +91 44 44676767
தொடர்புக்கு : [email protected] | செய்திகளை அனுப்ப : [email protected]