இ-பேப்பர்

தலையங்கம்

படங்கள்

வீடியோ

கல்வி

மாவட்ட மசாலா

முகப்பு

தமிழகம்

இந்தியா

உலகம்

குற்றம்

விளையாட்டு

மருத்துவம்

ரீல்மா

ஆன்மிகம்

வேலைவாய்ப்பு

தொழில்

முகப்பு

›

விளையாட்டு

பிசிசிஐ சமாதானம் செய்ததால்தான் கும்ப்ளேவை கோஹ்லி ஏற்று கொண்டார் : முன்னாள் செயலாளர் பரபரப்பு தகவல்

6/2/2025 4:50:47 PM
சோனியா காந்தி தலைமையில் காங்கிரஸ் காரிய கமிட்டி இன்று கூடியது: ராகுலை தலைவராக்குவது குறித்து ஆலோசனை தமிழகத்தில் ஆட்சி மாற்றம் ஏற்பட்டால் மக்களுக்கு நல்லது: மு.க.ஸ்டாலின் பரபரப்பு பேட்டி

மும்பை: இந்திய கிரிக்கெட் அணியின் தலைமை பயிற்சியாளராக கடந்த ஆண்டு ஜுன் மாதம் கும்ப்ளே நியமிக்கப்பட்டார். அவரது ஓராண்டு பதவிக்காலம் சாம்பியன்ஸ் டிராபி தொடருடன் முடிவுக்கு வருகிறது. கும்ப்ளேவுக்கு பணி நீட்டிப்பு வழங்கப்படும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், பயிற்சியாளர் பதவிக்கு இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு வாரியம் (பிசிசிஐ) திடீரென விண்ணப்பங்களை வரவேற்றது. இந்திய அணியின் கேப்டன் கோஹ்லி-கும்ப்ளே இடையே ஏற்பட்ட மோதலே இதற்கு காரணமாக கூறப்படுகிறது. கும்ப்ளேவை பயிற்சியாளராக தேர்வு செய்த பணிகளில் ஈடுபட்டவர்களில் ஒருவர் பிசிசிஐ முன்னாள் செயலாளர் அஜய் ஷிர்கே. கோஹ்லி-கும்ப்ளே மோதல் விவகாரம் தொடர்பாக புதிய பரபரப்பு தகவல் ஒன்றை அஜய் ஷிர்கே தற்போது வெளியிட்டுள்ளார்.

இது குறித்து அவர் கூறுகையில், ‘கும்ப்ளேவை பயிற்சியாளராக நியமித்ததற்கு ஆரம்பம் முதலே கோஹ்லி எதிர்ப்பு தெரிவித்து வந்தார். இந்திய அணியின் முன்னாள் வீரர்களான சச்சின் டெண்டுல்கர், சவுரவ் கங்குலி, விவிஎஸ் லட்சுமணன் ஆகியோர் அடங்கிய கிரிக்கெட் ஆலோசனை குழு கும்ப்ளேவை ஒருமனதாக பயிற்சியாளராக தேர்வு செய்து விட்டதால், அந்த முடிவை ஏற்றுக்கொள்ளும்படி பிசிசிஐ கோஹ்லியை சமாதானம் செய்தது. அப்போதைய பிசிசிஐ தலைவர் அனுராக் தாக்கூர்தான் இது தொடர்பாக கோஹ்லியிடம் பேச்சுவார்த்தை நடத்தினார். கிரிக்கெட் ஆலோசனை குழுவின் பரிந்துரையை புறக்கணிக்க முடியாது என அவர் கூறியதின் பேரில்தான் கும்ப்ளேவை பயிற்சியாளராக கோஹ்லி ஏற்று கொண்டார். பயிற்சியாளர் பதவிக்கு பிசிசிஐ விண்ணப்பங்களை வரவேற்றது நல்ல முடிவுதான். பயிற்சியாளரை நியமிப்பது என்பது பிசிசிஐயின் தனிப்படை உரிமை சார்ந்தது’ என்றார்.

மேலும் சில
  • நன்றாக விளையாடியது சிறப்பான உணர்வை தருகிறது ஆட்ட நாயகன் யுவராஜ் சிங் மகிழ்ச்சி



  • யுவராஜ் சிங்கின் இன்னிங்ஸ்தான் ஆட்டத்தின் போக்கை மாற்றியது : கேப்டன் கோஹ்லி பாராட்டு



  • வெஸ்ட் இண்டீஸ் கிரிக்கெட் வாரிய பெயர் மாற்றம்



  • பயிற்சியாளர் பதவிக்கு சேவாக், டாம் மூடி விண்ணப்பம்



  • அதிசயம் நிகழ்ந்தால் மட்டுமே நீடிக்க வாய்ப்பு இந்திய அணியின் பயிற்சியாளராக கும்ப்ளேவின் கடைசி ‘அசைன்மென்ட்’ சாம்பியன்ஸ் டிராபி?: கேப்டன் கோஹ்லியுடன் மோதலால் சிக்கல்



  • 2019 உலக கோப்பை வரை டோனி விளையாடுவார்: ஸ்டீபன் பிளமிங் நம்பிக்கை



  • இன்று தொடங்குகிறது சாம்பியன்ஸ் டிராபி உலக கோப்பை ஹீரோயிசத்தை மீண்டும் காட்டுமா வங்கதேசம்?: வலுவான இங்கிலாந்துடன் பலப்பரீட்சை



  • முன்னாள் உலக நம்பர்-1 கோல்ப் வீரர் டைகர் உட்ஸ் அமெரிக்காவில் கைது



  • சாம்பியன்ஸ் டிராபி பயிற்சி போட்டி இந்தியா-வங்கதேசம் இன்று பலப்பரீட்சை: ரோகித் சர்மா உறுதி: யுவராஜ் சிங் சந்தேகம்



  • சாம்பியன்ஸ் டிராபியை அச்சுறுத்தும் மழை: பாடம் கற்றுக்கொள்ளாத ஐசிசி



Facebook

Twitter

Shriya Beats Sunny Leone
சன்னிலியோனை ஓரம் கட்டிய ஸ்ரேயா
  • எஸ்ஏ பொறியியல் கல்லூரியில் கருத்தரங்கு
  • பொன்னேரி நூலக வார விழா
  • பிரியதர்ஷினி கல்லூரியில் முதல் வருட மாணவர்களுக்கு வரவேற்பு
  • பட்டதாரி ஆசிரியர் தேர்வில் வெயிட்டேஜ் மதிப்பெண் ரத்து செய்ய வேண்டும்: ராமதாஸ் வலியுறுத்தல்
தலையங்கம் படங்கள் வீடியோ தமிழகம் இந்தியா ரீல்மா விளையாட்டு மாவட்ட மசாலா குற்றம் உலகம் கல்வி வேலை வாய்ப்பு தொழில் மருத்துவம் ஆன்மீகம் இ-பேப்பர் தினகரன் Facebook Twitter
Copyright 2016 All Rights Reserved to Kal Publications
No.229 Kutchery Road, Mylapore, Chennai - 600 004. Ph: 91-44-42209191
Website Advertisement
Ph: 91-44-42209191 Extn:21102, 21118
Newspaper Advertisement
Ph: +91 44 44676767
தொடர்புக்கு : [email protected] | செய்திகளை அனுப்ப : [email protected]