இ-பேப்பர்

தலையங்கம்

படங்கள்

வீடியோ

கல்வி

மாவட்ட மசாலா

முகப்பு

தமிழகம்

இந்தியா

உலகம்

குற்றம்

விளையாட்டு

மருத்துவம்

ரீல்மா

ஆன்மிகம்

வேலைவாய்ப்பு

தொழில்

முகப்பு

›

தமிழகம்

நெல்லை தொடர்ந்து, பருத்தியும் கருகியது விரக்தியில் விவசாயி தீக்குளித்து சாவு

6/2/2025 3:51:04 PM
சோனியா காந்தி தலைமையில் காங்கிரஸ் காரிய கமிட்டி இன்று கூடியது: ராகுலை தலைவராக்குவது குறித்து ஆலோசனை தமிழகத்தில் ஆட்சி மாற்றம் ஏற்பட்டால் மக்களுக்கு நல்லது: மு.க.ஸ்டாலின் பரபரப்பு பேட்டி

திருவாரூர்: திருவாரூர்  மாவட்டம் குடவாசல் தாலுகா காப்பணாமங்கலத்தை சேர்ந்தவர் ரமேஷ் (45). விவசாயி. நடப்பாண்டில் இவர் தனது ஒரு ஏக்கர் நிலத்தில் நெல் சாகுபடி செய்திருந்த நிலையில் மாநிலம் முழுவதும் ஏற்பட்ட  கடும் வறட்சியின் காரணமாக இவரது நெற்பயிரும்  கருகியது.
இந்நிலையில் கடந்த மாதம் கத்திரி வெயில் துவங்கிய போது குடவாசல்  பகுதியில் ஓரளவு நல்ல மழை பெய்தது. இதனை பயன்படுத்தி  வறட்சியைத்  தாங்கும் பருத்தி பயிரை ரமேஷ்  சாகுபடி செய்தார். இருப்பினும் அந்த  பயிர் ஒரு மாத கால பயிராக வளர்ந்து வந்த நிலையில் அதன் பின்னர் மழை  பெய்யாததால் பருத்தியும் கருகியது.

இதனால் வங்கியில்  பெற்ற கடனை எப்படி செலுத்துவது என்ற வேதனையில் இருந்து வந்த ரமேஷ், மனைவி மற்றும் குழந்தைகள் தூங்கிய  பிறகு நள்ளிரவில் வீட்டின் கொல்லை புறத்திற்கு சென்று உடலில்   மண்ணெண்ணையை ஊற்றி தீ வைத்து கொண்டார். அவரது  அலறல் சத்தம் கேட்டு மனைவி மற்றும் அக்கம்பக்கத்தில்  இருந்தவர்கள் ஓடி சென்று காப்பாற்ற முயன்றனர். இருப்பினும் அவர்  உடல் முழுவதும் கருகி சம்பவ இடத்திலேயே இறந்தார். இதுகுறித்து  குடவாசல் போலீசார் வழக்குப்பதிவு செய்து ரமேஷ் உடலை கைப்பற்றி பிரேத  பரிசோதனைக்காக திருவாரூர் அரசு மருத்துவ கல்லூரி  மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

மேலும் சில
  • காரைக்கால் அம்மையார் கோயிலில் மாங்கனி திருவிழா ஜூலை 5ல் துவக்கம்



  • கடன் தள்ளுபடி அறிவிக்காவிட்டால் கோட்டை முற்றுகை போராட்டம்: விவசாய சங்கங்கள் முடிவு



  • தஞ்சை, முத்துப்பேட்டையில் மதுக்கடைகளுக்கு எதிராக சாலை மறியல், முற்றுகை



  • திருச்செந்தூரில் நாளை விசாகத் திருவிழா



  • கோரிக்கைகளை வலியுறுத்தி சென்னையில் 32 நாள் தொடர் போராட்டம்: அய்யாக்கண்ணு அறிவிப்பு



  • 10ம் வகுப்பு சிபிஎஸ்இ தேர்வில் ஏபிஎஸ் வித்யாமந்திர் பள்ளி சாதனை



  • டெல்டாவில் கொட்டியது மழை



  • திருவள்ளூர் மாவட்டத்தில் 13 பிடிஓக்கள் அதிரடி மாற்றம்



  • ஏடிஎம்களில் பணத்தட்டுப்பாடு: மக்கள் கடும் அவதி



  • அதிமுக ஆட்சியில் ஒரு பாலமாவது கட்டியது உண்டா? துரைமுருகன் கேள்வி



Facebook

Twitter

Shriya Beats Sunny Leone
சன்னிலியோனை ஓரம் கட்டிய ஸ்ரேயா
  • எஸ்ஏ பொறியியல் கல்லூரியில் கருத்தரங்கு
  • பொன்னேரி நூலக வார விழா
  • பிரியதர்ஷினி கல்லூரியில் முதல் வருட மாணவர்களுக்கு வரவேற்பு
  • பட்டதாரி ஆசிரியர் தேர்வில் வெயிட்டேஜ் மதிப்பெண் ரத்து செய்ய வேண்டும்: ராமதாஸ் வலியுறுத்தல்
தலையங்கம் படங்கள் வீடியோ தமிழகம் இந்தியா ரீல்மா விளையாட்டு மாவட்ட மசாலா குற்றம் உலகம் கல்வி வேலை வாய்ப்பு தொழில் மருத்துவம் ஆன்மீகம் இ-பேப்பர் தினகரன் Facebook Twitter
Copyright 2016 All Rights Reserved to Kal Publications
No.229 Kutchery Road, Mylapore, Chennai - 600 004. Ph: 91-44-42209191
Website Advertisement
Ph: 91-44-42209191 Extn:21102, 21118
Newspaper Advertisement
Ph: +91 44 44676767
தொடர்புக்கு : [email protected] | செய்திகளை அனுப்ப : [email protected]