இ-பேப்பர்

தலையங்கம்

படங்கள்

வீடியோ

கல்வி

மாவட்ட மசாலா

முகப்பு

தமிழகம்

இந்தியா

உலகம்

குற்றம்

விளையாட்டு

மருத்துவம்

ரீல்மா

ஆன்மிகம்

வேலைவாய்ப்பு

தொழில்

முகப்பு

›

விளையாட்டு

இன்று தொடங்குகிறது சாம்பியன்ஸ் டிராபி உலக கோப்பை ஹீரோயிசத்தை மீண்டும் காட்டுமா வங்கதேசம்?: வலுவான இங்கிலாந்துடன் பலப்பரீட்சை

6/1/2025 5:02:09 PM
3 சதவீத ஜி.எஸ்.டி. விதிப்பால் ஒரு பவுன் தங்கம் ரூ.36,000 வரை உயரும் : உற்பத்தியாளர்கள் எதிர்ப்பு தனியார் பள்ளிகள் கட்டண விவரத்தை சிபிஎஸ்இயிடம் சமர்பிக்க வேண்டும் : மத்திய அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர் உத்தரவு

லண்டன்: மினி உலக கோப்பை என வர்ணிக்கப்படும் ஐசிசி சாம்பியன்ஸ் டிராபி கிரிக்கெட் தொடர் இங்கிலாந்தில் இன்று கோலாகலமாக  தொடங்குகிறது. ‘கட் ஆப்’ தேதியான கடந்த 2015 செப்டம்பர் 30ம் தேதியன்று ஒரு நாள் தரவரிசையில் டாப்-8 இடங்களில் இருந்த அணிகள் கலந்து  கொள்கின்றன. அவை தலா 4 அணிகள் வீதம் 2 பிரிவுகளாக பிரிக்கப்பட்டுள்ளன. ‘ஏ’ பிரிவில் ஆஸ்திரேலியா, வங்கதேசம், இங்கிலாந்து,  நியூசிலாந்து அணிகளும், ‘பி’ பிரிவில் இந்தியா, பாகிஸ்தான், தென் ஆப்ரிக்கா, இலங்கை அணிகளும் இடம்பெற்றுள்ளன. 12 லீக், 2 அரையிறுதி, ஒரு  இறுதி போட்டி என மொத்தம் 15 போட்டிகள் நடைபெறுகின்றன. இறுதி போட்டி வரும் 18ம் தேதி நடக்கிறது.

 இந்த தொடருக்கான மொத்த பரிசு தொகை 29 கோடியாகும். சாம்பியன் பட்டம் வெல்லும் அணிக்கு 14 கோடியும், இறுதி போட்டியில்  தோல்வியடையும் அணிக்கு 7 கோடியும் பரிசாக கிடைக்கும். அரையிறுதியில் தோல்வி அடையும் இரு அணிகளுக்கு தலா ₹3 கோடி வழங்கப்படும்.  லீக் சுற்றில் ஒவ்வொரு பிரிவிலும் 3வது இடத்தை பிடிக்கும் இரு அணிகளுக்கு தலா 58 லட்சம் கிடைக்கும். கடைசி இடத்துக்கு தள்ளப்படும் இரு  அணிகள் தலா ₹39 லட்சத்தை பெறும்.  லண்டன் கென்னிங்டன் ஓவல் மைதானத்தில் இன்று நடைபெறும் முதல் போட்டியில் இங்கிலாந்து-வங்கதேச அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன.  கத்துக்குட்டி என்ற அடையாளத்தை மெல்ல மெல்ல இழந்து வரும் வங்கதேசம் முன்னணி அணிகளுக்கு பல முறை அதிர்ச்சியளித்துள்ளது.

கடந்த  2015 உலக கோப்பை லீக் சுற்றில் இங்கிலாந்தை 15 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி அதிர்ச்சியளித்த வங்கதேசம் மீண்டும் அந்த ‘ஹீரோயிசத்தை’  வெளிப்படுத்துமா? என்ற எதிர்பார்ப்பு நிலவுகிறது. எனினும் சமீபத்தில் நடந்த தென் ஆப்ரிக்காவுக்கு எதிரான ஒரு நாள் ெதாடரை 2-1 என கைப்பற்றிய  மகிழ்ச்சியில் இங்கிலாந்து களமிறங்கும். சொந்த மண் என்பது கூடுதல் பலம். இந்திய நேரப்படி மதியம் 3 மணிக்கு போட்டி தொடங்குகிறது.

மேலும் சில
  • நன்றாக விளையாடியது சிறப்பான உணர்வை தருகிறது ஆட்ட நாயகன் யுவராஜ் சிங் மகிழ்ச்சி



  • யுவராஜ் சிங்கின் இன்னிங்ஸ்தான் ஆட்டத்தின் போக்கை மாற்றியது : கேப்டன் கோஹ்லி பாராட்டு



  • வெஸ்ட் இண்டீஸ் கிரிக்கெட் வாரிய பெயர் மாற்றம்



  • பயிற்சியாளர் பதவிக்கு சேவாக், டாம் மூடி விண்ணப்பம்



  • பிசிசிஐ சமாதானம் செய்ததால்தான் கும்ப்ளேவை கோஹ்லி ஏற்று கொண்டார் : முன்னாள் செயலாளர் பரபரப்பு தகவல்



  • அதிசயம் நிகழ்ந்தால் மட்டுமே நீடிக்க வாய்ப்பு இந்திய அணியின் பயிற்சியாளராக கும்ப்ளேவின் கடைசி ‘அசைன்மென்ட்’ சாம்பியன்ஸ் டிராபி?: கேப்டன் கோஹ்லியுடன் மோதலால் சிக்கல்



  • 2019 உலக கோப்பை வரை டோனி விளையாடுவார்: ஸ்டீபன் பிளமிங் நம்பிக்கை



  • முன்னாள் உலக நம்பர்-1 கோல்ப் வீரர் டைகர் உட்ஸ் அமெரிக்காவில் கைது



  • சாம்பியன்ஸ் டிராபி பயிற்சி போட்டி இந்தியா-வங்கதேசம் இன்று பலப்பரீட்சை: ரோகித் சர்மா உறுதி: யுவராஜ் சிங் சந்தேகம்



  • சாம்பியன்ஸ் டிராபியை அச்சுறுத்தும் மழை: பாடம் கற்றுக்கொள்ளாத ஐசிசி



Facebook

Twitter

Shriya Beats Sunny Leone
சன்னிலியோனை ஓரம் கட்டிய ஸ்ரேயா
  • எஸ்ஏ பொறியியல் கல்லூரியில் கருத்தரங்கு
  • பொன்னேரி நூலக வார விழா
  • பிரியதர்ஷினி கல்லூரியில் முதல் வருட மாணவர்களுக்கு வரவேற்பு
  • பட்டதாரி ஆசிரியர் தேர்வில் வெயிட்டேஜ் மதிப்பெண் ரத்து செய்ய வேண்டும்: ராமதாஸ் வலியுறுத்தல்
தலையங்கம் படங்கள் வீடியோ தமிழகம் இந்தியா ரீல்மா விளையாட்டு மாவட்ட மசாலா குற்றம் உலகம் கல்வி வேலை வாய்ப்பு தொழில் மருத்துவம் ஆன்மீகம் இ-பேப்பர் தினகரன் Facebook Twitter
Copyright 2016 All Rights Reserved to Kal Publications
No.229 Kutchery Road, Mylapore, Chennai - 600 004. Ph: 91-44-42209191
Website Advertisement
Ph: 91-44-42209191 Extn:21102, 21118
Newspaper Advertisement
Ph: +91 44 44676767
தொடர்புக்கு : [email protected] | செய்திகளை அனுப்ப : [email protected]