இ-பேப்பர்

தலையங்கம்

படங்கள்

வீடியோ

கல்வி

மாவட்ட மசாலா

முகப்பு

தமிழகம்

இந்தியா

உலகம்

குற்றம்

விளையாட்டு

மருத்துவம்

ரீல்மா

ஆன்மிகம்

வேலைவாய்ப்பு

தொழில்

முகப்பு

›

குற்றம்

கிரிக்கெட் விளையாட்டு தகராறில் மூதாட்டி அடித்துக்கொலை? : பக்கத்து வீட்டுக்காரரிடம் விசாரணை

6/1/2025 4:51:34 PM
சோனியா காந்தி தலைமையில் காங்கிரஸ் காரிய கமிட்டி இன்று கூடியது: ராகுலை தலைவராக்குவது குறித்து ஆலோசனை தமிழகத்தில் ஆட்சி மாற்றம் ஏற்பட்டால் மக்களுக்கு நல்லது: மு.க.ஸ்டாலின் பரபரப்பு பேட்டி

ஆவடி: கிரிக்கெட் விளையாட்டு தகராறில்மூதாட்டியை அடித்துக்கொலை செய்ததாக பக்கத்து வீட்டுக்காரரிடம் போலீசார் விசாரணை நடத்துகின்றனர்.ஆவடியை அடுத்த மோரை, புதிய கன்னியம்மன் நகரை சேர்ந்தவர் தனலட்சுமி (80). இவர் மகள் சிந்தாமணி வீட்டில் வசித்து வருகிறார். சிந்தாமணியின்  கணவர் ரகு, கடந்த சில வருடங்களுக்கு முன் இறந்துவிட்டார். இவர்களுக்கு சூர்யா (11), நந்தினி (9) என்ற 2 குழந்தைகள் உள்ளனர்.சிந்தாமணி வீடு அருகே கூலி தொழிலாளி கருணாகரன் (56) குடும்பத்துடன் வசித்து வருகிறார்.நேற்றிரவு 7 மணியளவில் சிந்தாமணியின் 2 குழந்தைகள் அப்பகுதியை சேர்ந்த சிறுவர், சிறுமிகளுடன் ெதருவில் கிரிக்கெட் விளையாடியுள்ளனர்.  அப்போது ஒரு சிறுவன் அடித்த பந்து கருணாகரனின் வீட்டுக்குள் விழுந்துள்ளது. இதனால் ஆத்திரமடைந்த கருணாகரன், கிரிக்கெட் விளையாடிய  சிறுவர், சிறுமிகளை அசிங்கமாகத் திட்டியதாக தெரிகிறது.

இதுபற்றி சூர்யா, நந்தினி ஆகியோர் தாய் சிந்தாமணியிடம் நடந்த விஷயத்தை கூறி அழுதுள்ளனர். இதையடுத்து சிந்தாமணி, அவரது தனலட்சுமி,  உறவினர் ரமேஷ் ஆகியோர்  சென்று கருணாகரனிடம் ‘குழந்தைகளை ஏன் திட்டினீர்கள்?’ எனக் கேட்டுள்ளனர். அப்போது ரமேஷுக்கும்  கருணாகரனுக்கும் கடும் வாக்குவாதம் ஏற்பட்டு கைகலப்பு உருவானது. இதை  தனலட்சுமி தடுத்துள்ளார். இதில் ஆத்திரம் அடைந்த கருணாகரன், தனலட்சுமியை அடித்து கீழே தள்ளிவிட்டுள்ளார். இதில் தனலட்சுமி மயக்கமடைந்தார். உடனடியாக அவரை  உறவினர்கள் மீட்டு, ஆவடியில் உள்ள அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். அங்கு தனலட்சுமியை சோதனை செய்த டாக்டர்கள், அவர் வரும்  வழியிலேயே இறந்துவிட்டதாக தெரிவித்தனர். தனலட்சுமியின் சாவு குறித்து போலீசாருக்குத் தகவல் தெரிவிக்காமல் சடலத்தை வீட்டுக்கு கொண்டு  வந்தனர். இரவோடு இரவாக உடலை அடக்கம் செய்ய முயற்சித்தனர்.

இதுகுறித்து அறிந்ததும் ஆவடி டேங்க் பேக்டரி இன்ஸ்பெக்டர் டில்லிபாபு, எஸ்ஐக்கள் நாசர், காந்தி ஆகியோர் போலீசாருடன் சம்பவ இடத்துக்கு  விரைந்து சென்றனர். அடக்கம் செய்ய தயாராக இருந்த தனலட்சுமியின் சடலத்தை மீட்டு, கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.இதுபற்றி போலீசார் வழக்குப்பதிவு செய்து கருணாகரனிடம் விசாரித்து வருகின்றனர்.


மேலும் சில
  • மனைவியை அடித்துக் கொன்று தூக்கில் தொங்கவிட்ட கணவர் கைது



  • 3 பெண்கள் கொலை வழக்கில் 2 கொள்ளையர்களுக்கு தூக்கு



  • மாணவி பலாத்காரம்: வாலிபர் கைது



  • திருச்சி ஏர்போர்ட்டில் ரூ.36 லட்சம் வெளிநாட்டு கரன்சி பறிமுதல்: 3 பேர் சிக்கினர்



  • கள்ளத் தொடர்பு விவகாரம் மைத்துனி அடித்து கொலை: தங்கை கணவருக்கு வலைவீச்சு



  • தந்தை, மகளை கார் ஏற்றி கொல்ல முயற்சி: ஈரோட்டில் 3 பேர் கைது



  • திருத்தணியில் பைக் திருட்டு அதிகரிப்பு: புகார் மீது போலீசார் அலட்சியம்



  • டெல்லியைப் போல் சேலம் அருகே கொடூரம் ஓடும் பஸ்சில் மாணவி பாலியல் பலாத்காரம்: டிரைவர்கள், கண்டக்டர் வெறிச்செயல்



  • தினமும் ரூ.500 வருமானம்’ சுவிங்கம் ஓட்டி உண்டியலில் பணத்தை திருடிய வாலிபர்



  • குடிபோதையில் வந்ததால் தந்தை சரமாரி அடித்துக்கொலை : போலீசில் மகன் சரணடைந்தார்



Facebook

Twitter

Shriya Beats Sunny Leone
சன்னிலியோனை ஓரம் கட்டிய ஸ்ரேயா
  • எஸ்ஏ பொறியியல் கல்லூரியில் கருத்தரங்கு
  • பொன்னேரி நூலக வார விழா
  • பிரியதர்ஷினி கல்லூரியில் முதல் வருட மாணவர்களுக்கு வரவேற்பு
  • பட்டதாரி ஆசிரியர் தேர்வில் வெயிட்டேஜ் மதிப்பெண் ரத்து செய்ய வேண்டும்: ராமதாஸ் வலியுறுத்தல்
தலையங்கம் படங்கள் வீடியோ தமிழகம் இந்தியா ரீல்மா விளையாட்டு மாவட்ட மசாலா குற்றம் உலகம் கல்வி வேலை வாய்ப்பு தொழில் மருத்துவம் ஆன்மீகம் இ-பேப்பர் தினகரன் Facebook Twitter
Copyright 2016 All Rights Reserved to Kal Publications
No.229 Kutchery Road, Mylapore, Chennai - 600 004. Ph: 91-44-42209191
Website Advertisement
Ph: 91-44-42209191 Extn:21102, 21118
Newspaper Advertisement
Ph: +91 44 44676767
தொடர்புக்கு : [email protected] | செய்திகளை அனுப்ப : [email protected]