இ-பேப்பர்

தலையங்கம்

படங்கள்

வீடியோ

கல்வி

மாவட்ட மசாலா

முகப்பு

தமிழகம்

இந்தியா

உலகம்

குற்றம்

விளையாட்டு

மருத்துவம்

ரீல்மா

ஆன்மிகம்

வேலைவாய்ப்பு

தொழில்

முகப்பு

›

குற்றம்

மகேந்திரா சிட்டியில் உள்ள நிறுவனத்தில் சாப்ட்வேர் இன்ஜினியர் அடித்துகொலை? : போலீசில் மனைவி பரபரப்பு புகார்

5/31/2017 3:20:00 PM
3 சதவீத ஜி.எஸ்.டி. விதிப்பால் ஒரு பவுன் தங்கம் ரூ.36,000 வரை உயரும் : உற்பத்தியாளர்கள் எதிர்ப்பு தனியார் பள்ளிகள் கட்டண விவரத்தை சிபிஎஸ்இயிடம் சமர்பிக்க வேண்டும் : மத்திய அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர் உத்தரவு

செங்கல்பட்டு: மகேந்திரா சிட்டியில் உள்ள சாப்ட்வேர் நிறுவனத்தில் பணியாற்றிவந்த இன்ஜினியர் மர்மமான முறையில் இறந்தார். அவரை யாராவது  அடித்துக்கொன்றார்களா என்று போலீசார் விசாரித்து வருகின்றனர்.திண்டிவனம் அடுத்த மயிலம் சாலையை சேர்ந்தவர் அருணாச்சலம். இவரது மகன் இளையராஜா (35). இவர் செங்கல்பட்டு அடுத்த மகேந்திராசிட்டியில்  உள்ள தனியார் சாப்ட்வேர் நிறுவனத்தில் இன்ஜினியராக பணியாற்றினார். கம்பெனிக்கு சொந்தமான அறையில் தங்கியிருந்தார். இவரது மனைவி  ரேவதி. தம்பதிக்கு 2 மகள்கள் உள்ளனர்.
கடந்த 26ம் தேதி வேலையை முடித்துவிட்டு இளையராஜா, சொந்த ஊருக்கு சென்றார். அங்கு 2 நாட்கள் இருந்துவிட்டு அங்கிருந்த நேற்று முன்தினம்,  மகேந்திராசிட்டிக்கு வந்தார். மாலையில் வேலை முடிந்ததும் தனது அறைக்கு சென்றார். நேற்று இளையராஜா வேலைக்கு செல்லவில்லை என்றதும்  அவரை பற்றி சக ஊழியர்கள் விசாரித்துள்ளனர். இந்நிலையில் இன்று அதிகாலை கம்பெனியில் உள்ள ஒரு அறையில் மூக்கு, வாயில் ரத்தம் வழிந்த நிலையில் இளையராஜா இறந்து கிடந்தார். இதை  பார்த்ததும் இரவு பணியில் இருந்த சக ஊழியர்கள் அதிர்ச்சி அடைந்தனர். உடனடியாக செங்கல்பட்டு தாலுகா போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர்.  இதையடுத்து இன்ஸ்பெக்டர் சக்திவேல், எஸ்ஐ தாமோதரன் தலைமையில் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்தனர்.

அதற்குள் கம்பெனியின் நிர்வாகம் சார்பில், இளையராஜாவை மீட்டு, செங்கல்பட்டு அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். ‘’எதற்காக இங்கிருந்து  உடலை எடுத்து சென்றீர்கள்’ என்று நிர்வாகத்திடம் போலீசார் கேட்டனர். அதற்கு நிர்வாகத்தினர், ‘வாய், மூக்கில் இருந்து ரத்தம் வழிந்தது. அவர்  பிழைத்துக்கொள்வார் என்றுதான் சேர்த்தோம்’’ என்றனர். இதன்பிறகு போலீசார் மருத்துவமனைக்கு சென்று விசாரணை நடத்தினர்.இதுபற்றி அறிந்ததும் இளையராஜாவின் மனைவி மற்றும் உறவினர்கள் மகேந்திரசிட்டிக்கு விரைந்தனர். இளையராஜா சாவு பற்றி விசாரித்ததுடன்  நிர்வாகத்தினரிடம் கடும் வாக்குவாதம் செய்தனர். அங்கிருந்து மருத்துவமனைக்கு சென்று, கணவரின் உடலை பார்த்து மனைவி, உறவினர்கள் கதறி  அழுதனர்.

இதுபற்றி செங்கல்பட்டு தாலுகா போலீசில் ரேவதி புகார் செய்தார். அதில், ‘’ கணவரின் சாவில் மர்மம் உள்ளது. இதுபற்றி விசாரித்து நடவடிக்கை  எடுக்க வேண்டும்’ என்று தெரிவித்துள்ளார். இதன் அடிப்படையில் வழக்குப்பதிவு செய்துள்ள போலீசார், இளையராஜா அடித்து கொலை  செய்யப்பட்டாரா, வேறு ஏதேனும் காரணமா என்ற கோணங்களில் விசாரித்து வருகின்றனர்.

மேலும் சில
  • தினமும் ரூ.500 வருமானம்’ சுவிங்கம் ஓட்டி உண்டியலில் பணத்தை திருடிய வாலிபர்



  • குடிபோதையில் வந்ததால் தந்தை சரமாரி அடித்துக்கொலை : போலீசில் மகன் சரணடைந்தார்



  • 2வது மாடியில் இருந்து தரதரவென இழுத்துவந்து ஓபிஎஸ் அணி நிர்வாகி சரமாரி வெட்டிக் கொலை



  • கிரிக்கெட் விளையாட்டு தகராறில் மூதாட்டி அடித்துக்கொலை? : பக்கத்து வீட்டுக்காரரிடம் விசாரணை



  • ஆம்பூர் அருகே அதிர்ச்சி சம்பவம் 14 வயது சிறுமி கர்ப்பம் 60 வயது வியாபாரி கைது: கரு கலைத்த போலி டாக்டர்கள் சிக்கினர்



  • செங்குன்றம், சோழவரம் பகுதிகளில் கஞ்சா, அபின் விற்பனை அமோகம்



  • கிரேனில் சிக்கி தொழிலாளி பலி: டிரைவர் கைது



  • ஆழித்தேரோட்ட நெரிசலில் 35 பவுன் நகை பறிப்பு



  • திருச்சி ஏர்போர்ட்டில் 7 கிலோ தங்கம் பறிமுதல்: 7 பேர் சிக்கினர்



  • பெயிண்டருக்கு சரமாரி அடி



Facebook

Twitter

Shriya Beats Sunny Leone
சன்னிலியோனை ஓரம் கட்டிய ஸ்ரேயா
  • எஸ்ஏ பொறியியல் கல்லூரியில் கருத்தரங்கு
  • பொன்னேரி நூலக வார விழா
  • பிரியதர்ஷினி கல்லூரியில் முதல் வருட மாணவர்களுக்கு வரவேற்பு
  • பட்டதாரி ஆசிரியர் தேர்வில் வெயிட்டேஜ் மதிப்பெண் ரத்து செய்ய வேண்டும்: ராமதாஸ் வலியுறுத்தல்
தலையங்கம் படங்கள் வீடியோ தமிழகம் இந்தியா ரீல்மா விளையாட்டு மாவட்ட மசாலா குற்றம் உலகம் கல்வி வேலை வாய்ப்பு தொழில் மருத்துவம் ஆன்மீகம் இ-பேப்பர் தினகரன் Facebook Twitter
Copyright 2016 All Rights Reserved to Kal Publications
No.229 Kutchery Road, Mylapore, Chennai - 600 004. Ph: 91-44-42209191
Website Advertisement
Ph: 91-44-42209191 Extn:21102, 21118
Newspaper Advertisement
Ph: +91 44 44676767
தொடர்புக்கு : [email protected] | செய்திகளை அனுப்ப : [email protected]