கிரேனில் சிக்கி தொழிலாளி பலி: டிரைவர் கைது
5/31/2017 3:14:20 PM
ஆவடி: ஆவடி அருகே காட்டூரில் மகளிர் தொழிற்பேட்டையில் உள்ள ஒரு கம்பெனியில் பீகாரை சேர்ந்த தசரத்குமார் (27) வேலை செய்தார். இவர் கம்பெனியில் இருந்து ஒரு இரும்பு பிளேட்டை நேற்று மதியம் கிரேனில் ஏற்றிக்கொண்டு வெளியே வந்துள்ளது. அப்போது இரும்பு பிளேட்டை பிடித்தபடி சென்றுள்ளார். திடீரென கிரேனில் இருந்து நிலைதடுமாறி கீழே விழுந்த அவரது தலை கிரேனின் சக்கரத்தில் சிக்கி நசுங்கியது. இதில் சம்பவ இடத்திலேயே தசரத்குமார் பரிதாபமாக இறந்தார்.
இதுகுறித்து தகவலறிந்ததும் பூந்தமல்லி போக்குவரத்து போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்தனர். தசரத்குமாரின் சடலத்தை கைப்பற்றி, கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதுசம்பந்தமாக கிரேன் டிரைவர் வெள்ளைச்சாமி (29) போலீசார் கைது செய்து விசாரித்து வருகின்றனர்.