ஆழித்தேரோட்ட நெரிசலில் 35 பவுன் நகை பறிப்பு
5/30/2017 3:41:56 PM
திருவாரூர்: திருவாரூர் தியாகராஜ சுவாமி கோயிலில் நேற்று ஆழித்தேரோட்டம் நடந்தது. இதில் லட்சக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டனர். கூட்ட நெரிசலை பயன்படுத்தி பல ெபண்களிடம் மர்ம நபர்கள் நகை பறித்து சென்றுள்ளனர்.
மாங்குடி ஆடியம்மாளிடம் (52) 3 பவுன் செயின், மன்னார்குடி கனகவள்ளியிடம் (52) 3 பவுன் செயின், சின்னத்தாயிடம் (55) ஐந்தரை பவுன் செயின், திருவாரூர் தமயந்தியிடம் (67) 3 பவுன் செயின், சொர்ணாம்பாளிடம் (70) 7 பவுன் செயின் ஆகியவற்றை மர்ம நபர்கள் திருடிச்சென்றனர்.இதுதவிர மேலும் சில பெண்களிடமும் செயின் பறிப்பு நடந்துள்ளது. மொத்தம் 35 பவுன் நகைகள் பறிக்கப்பட்டுள்ளன. இதுபற்றி திருவாரூர் டவுன் போலீசார் வழக்குப்பதிந்து விசாரித்து வருகின்றனர்.