இ-பேப்பர்

தலையங்கம்

படங்கள்

வீடியோ

கல்வி

மாவட்ட மசாலா

முகப்பு

தமிழகம்

இந்தியா

உலகம்

குற்றம்

விளையாட்டு

மருத்துவம்

ரீல்மா

ஆன்மிகம்

வேலைவாய்ப்பு

தொழில்

முகப்பு

›

குற்றம்

திருச்சி ஏர்போர்ட்டில் 7 கிலோ தங்கம் பறிமுதல்: 7 பேர் சிக்கினர்

5/30/2017 3:39:02 PM
மத்திய பிரதேசத்தில் விவசாயிகள் போராட்டம்: முதல்வர் சவுகான் உண்ணாவிரதம் ஜூலை 1ம் தேதி ஜிஎஸ்டி அமல்: ஜெட்லி தலைமையில் டெல்லியில் நாளை ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டம்

திருச்சி: சிங்கப்பூர் மற்றும் மலேசியாவில் இருந்து திருச்சி வரும் விமானங்களில் தங்கம் கடத்தி வருவதாக மத்திய வருவாய் புலனாய்வு பிரிவு  அதிகாரிகளுக்கு ரகசிய தகவல் கிடைத்தது. தகவலின் பேரில் சுங்கதுறை அதிகாரிகள் 10க்கும் மேற்பட்டோர், திருச்சி விமானநிலையத்துக்கு வந்த  அனைத்து விமானங்களிலும் அதிரடி சோதனை நடத்தினர்.
சிங்கப்பூரில் இருந்து இன்று அதிகாலை திருச்சி விமானநிலையத்திற்கு டைகர் ஏர்வேஸ் விமானம் வந்தது. இதில் வந்த பயணிகளிடம் அதிகாரிகள்  தீவிர சோதனை நடத்தினர். சோதனையின் போது பயணிகள் 4 பேரின் நடவடிக்கையில் சந்தேகம் அடைந்த சுங்கதுறை அதிகாரிகள் அவர்களையும்,  அவர்களது உடைமைகளையும் பலத்த சோதனைக்கு உட்படுத்தினர்.

சோதனையில் உடல் மற்றும் உடைமைகளில், பல கோணங்களில் தங்கக்கட்டிகள் கடத்திக் கொண்டுவரப்பட்டது தெரியவந்தது.  4  பயணிகளிடமிருந்தும் ரூ.1.5 கோடி மதிப்பிலான தங்கத்தை பறிமுதல் செய்தனர். இவர்கள் அளித்த தகவலின் பேரில் சுங்கதுறை அதிகாரிகள் ஏர்போர்ட்  வளாகத்தில் நின்று கொண்டிருந்த 3 பேரை பிடித்து விசாரணை நடத்தினர்.
விசாரணையில் 3 பேரும் விமானத்தில் இருந்து கடத்தி வரப்படும் தங்கத்தை பெற காத்திருந்தது தெரியவந்தது. அவர்களிடமிருந்து ரூ.1 கோடி  மதிப்பிலான 3 கிலோ தங்கம் பறிமுதல் செய்யப்பட்டது. அவர்கள் தங்கம் கடத்த பயன்படுத்திய காரும் பறிமுதல் செய்யப்பட்டது.

ரூ.2.5 கோடி மதிப்பிலான 7 கிலோ தங்கம் பிடிப்பட்டிருப்பது சுங்க துறை அதிகாரிகளை அதிர்ச்சியடைய செய்துள்ளது. கடத்தல் தங்கத்தை பறிமுதல்  செய்த அதிகாரிகள், சிக்கியவர்களிடம் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். சென்னை, மதுரை விமானநிலையம் வழியாக அதிகளவில் தங்கம்  கடத்தி வருவது அதிகரித்து வந்த நிலையில் திருச்சியில் 7 கிலோ தங்கம் பிடிப்பட்டிருப்பதும், இதுவே திருச்சி விமானநிலைய வரலாற்றில் அதிக  அளவிலான கடத்தல் தங்கம் சிக்கியிருப்பதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.

மேலும் சில
  • மாத்திரை, பால் பவுடரில் கலந்து அபுதாபிக்கு கடத்த முயன்ற ரூ.20 கோடி போதை பறிமுதல்: சென்னையில் ஆப்பிரிக்காவை சேர்ந்தவர் கைது



  • காதல் திருமணம் செய்ததால் ஆத்திரம் வாயில் விஷம் ஊற்றி கொன்று இளம்பெண் கிணற்றில் வீச்சு: 2 ஆண்டுக்கு பின் உடல் கண்டுபிடிப்பு



  • தம்பதி கொலை வழக்கில் 10 பேருக்கு ஆயுள்



  • பஸ்சில் பாலியல் பலாத்காரம் 2 டிரைவர்கள், கண்டக்டருக்கு ஆண்மை பரிசோதனை செய்ய முடிவு: சிறுமியிடம் ரகசிய வாக்குமூலம்



  • உ.பியில் பயங்கரம் தொழிலதிபர், மனைவி மகன் சுட்டுக்கொலை: மர்ம நபர்கள் வெறிச்செயல்



  • வெளிநாட்டு வேலை ஆசை காட்டி 61 லட்சம் மோசடி: தம்பதி கைது



  • விமானத்தில் போதைப்பொருள் மதுரையில் சென்னை பயணி கைது



  • வாலிபர் அடித்து கொலை



  • மனைவியை அடித்துக் கொன்று தூக்கில் தொங்கவிட்ட கணவர் கைது



  • 3 பெண்கள் கொலை வழக்கில் 2 கொள்ளையர்களுக்கு தூக்கு



Facebook

Twitter

Shriya Beats Sunny Leone
சன்னிலியோனை ஓரம் கட்டிய ஸ்ரேயா
  • எஸ்ஏ பொறியியல் கல்லூரியில் கருத்தரங்கு
  • பொன்னேரி நூலக வார விழா
  • பிரியதர்ஷினி கல்லூரியில் முதல் வருட மாணவர்களுக்கு வரவேற்பு
  • பட்டதாரி ஆசிரியர் தேர்வில் வெயிட்டேஜ் மதிப்பெண் ரத்து செய்ய வேண்டும்: ராமதாஸ் வலியுறுத்தல்
தலையங்கம் படங்கள் வீடியோ தமிழகம் இந்தியா ரீல்மா விளையாட்டு மாவட்ட மசாலா குற்றம் உலகம் கல்வி வேலை வாய்ப்பு தொழில் மருத்துவம் ஆன்மீகம் இ-பேப்பர் தினகரன் Facebook Twitter
Copyright 2016 All Rights Reserved to Kal Publications
No.229 Kutchery Road, Mylapore, Chennai - 600 004. Ph: 91-44-42209191
Website Advertisement
Ph: 91-44-42209191 Extn:21102, 21118
Newspaper Advertisement
Ph: +91 44 44676767
தொடர்புக்கு : [email protected] | செய்திகளை அனுப்ப : [email protected]