இ-பேப்பர்

தலையங்கம்

படங்கள்

வீடியோ

கல்வி

மாவட்ட மசாலா

முகப்பு

தமிழகம்

இந்தியா

உலகம்

குற்றம்

விளையாட்டு

மருத்துவம்

ரீல்மா

ஆன்மிகம்

வேலைவாய்ப்பு

தொழில்

முகப்பு

›

உலகம்

ஜெர்மனி பிரதமர் மெர்க்கெல்- மோடி சந்திப்பு வர்த்தகம், தீவிரவாத தடுப்பு குறித்து ஆலோசனை

5/30/2017 3:37:51 PM
ஜிஎஸ்டி அமல் எதிரொலி வாரத்திற்கு 3 நாட்கள் முட்டை விலை நிர்ணயம் : 40 ஆண்டு கால முறையில் மாற்றம் 28 சதவீத ஜிஎஸ்டிக்கு எதிர்ப்பு பட்டாசு ஆலை ஸ்டிரைக் துவங்கியது

பெர்லின்: ஜெர்மனியில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள பிரதமர் நரேந்திர மோடி, அந்நாட்டு பிரதமர் ஏஞ்சலா மெர்க்கெல்லை இன்று சந்தித்தார். வர்த்தகம்,  தீவிரவாத தடுப்பு உள்ளிட்டவை குறித்து இருவரும் பேசினர்.பிரதமர் நரேந்திர மோடி அரசுமுறை பயணமாக ஜெர்மனி, ஸ்பெயின் பிரான்ஸ், ரஷ்யா ஆகிய நாடுகளில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளார்.  முதல்கட்டமாக நேற்று ஜெர்மனி தலைநகர் பெர்லின் சென்றடைந்தார். அங்கு பிரதமருக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. இன்று அந்நாட்டு  பிரதமர் ஏஞ்சலா மெர்க்கெல்லை சந்தித்தார்.

 வர்த்தகம், முதலீடு, பாதுகாப்பு, தீவிரவாத தடுப்பு, தொழில்நுட்ப மேம்பாடு, உள்கட்டமைப்பு வசதிகள், புதுப்பிக்கத்தக்க எரிசக்தி, மருத்துவம்,  போக்குவரத்து போன்றவை குறித்து இருநாட்டு தலைவர்களும் பேச்சுவார்த்தை நடத்தினர். இந்த துறைகளில் இருநாடுகளும் இணைந்து செயல்படுவது  குறித்து பேசினார். இந்தியா-ஜெர்மனி அரசுகளின் ஆலோசனை கூட்டத்தில், நரேந்திர மோடி, ஏஞ்சலா மெர்க்கல் ஆகியோர் கலந்து கொண்டனர். ஐரோப்பிய நாடுகளை  குறிவைத்து சமீபத்தில் நடைபெறும் தீவிரவாத தாக்குதல்கள், பயங்கரவாதத்தை தடுப்பது, இருநாடுகள் இடையேயான முதலீடு, ஐரோப்பிய  கூட்டமைப்புடன் தடையற்ற வர்த்தக ஒப்பந்தம் உள்ளிட்டவை குறித்து இந்த கூட்டத்தில் முக்கிய முடிவுகள் எடுக்கப்பட்டன. முதலீடு தொடர்பாக  இருநாடுகள் இடையே பல்வேறு ஒப்பந்தங்கள் கையெழுத்தாகின.   

இக்கூட்டத்தில் ஜெர்மனியின் பிரபல நிறுவனங்களை சேர்ந்த பிரதிநிதிகள் பலர் பங்கேற்றனர். இந்தியாவில் முதலீடு செய்ய வருமாறு  தொழிலதிபர்களுக்கு பிரதமர் மோடி அழைப்பு விடுத்தார். ஜெர்மனி பயணத்தை முடித்துக்கொண்டு ஸ்பெயின் நாட்டுக்கு பிரதமர் மோடி இன்று இரவு  புறப்பட்டு செல்கிறார்.

மேலும் சில
  • அமெரிக்கா செல்ல விரும்பினால் நெருக்கமான குடும்ப உறவினர்களை கொண்டிருப்பவர்களுக்கு மட்டுமே விசா



  • தீவிரவாத செயல்பாடுகளை முற்றிலுமாக ஒழிக்க வேண்டும் : பாகிஸ்தானுக்கு மோடி, டிரம்ப் எச்சரிக்கை



  • முதல்முறையாக வெள்ளை மாளிகையில் விருந்து மோடி-டிரம்ப் இன்று பேச்சு :எச்1பி விசா விதிகள் தளர்த்தப்படுமா?



  • வாஷிங்டனில் உற்சாக வரவேற்பு பிரதமர் மோடி, அதிபர் டிரம்ப் நாளை பேச்சு : வெள்ளை மாளிகை விருந்தில் பங்கேற்பு; எச்1பி விசா விவகாரம் பேசப்படுமா?



  • பாகிஸ்தானில் பயங்கரம் டேங்கர் லாரி வெடித்து 120 பேர் பலி



  • ராக்கெட் இயந்திர சோதனை நடத்திய வடகொரியா: அமெரிக்கா தகவல்



  • பிலிப்பைன்சில் அட்டூழியம் பள்ளிக்குள் புகுந்து மாணவர்களை சிறைபிடித்த ஐஎஸ் தீவிரவாதிகள்: மீட்கும் பணியில் ராணுவம் மும்முரம்



  • லண்டனில் அடுக்குமாடி குடியிருப்பில் ஏற்பட்ட தீயை அணைப்பதில் தாமதம் : பலி எண்ணிக்கை அதிகரிக்கும் என அச்சம்



  • லண்டனில் 27 மாடி குடியிருப்பு கட்டிடத்தில் பயங்கர தீ



  • இலங்கை இறுதிக்கட்ட போரின்போது சரணடைந்தவர்களின் பெயர்கள் விரைவில் வெளியிடப்படும்: அதிபர் சிறிசேன தகவல்



Facebook

Twitter

Shriya Beats Sunny Leone
சன்னிலியோனை ஓரம் கட்டிய ஸ்ரேயா
  • எஸ்ஏ பொறியியல் கல்லூரியில் கருத்தரங்கு
  • பொன்னேரி நூலக வார விழா
  • பிரியதர்ஷினி கல்லூரியில் முதல் வருட மாணவர்களுக்கு வரவேற்பு
  • பட்டதாரி ஆசிரியர் தேர்வில் வெயிட்டேஜ் மதிப்பெண் ரத்து செய்ய வேண்டும்: ராமதாஸ் வலியுறுத்தல்
தலையங்கம் படங்கள் வீடியோ தமிழகம் இந்தியா ரீல்மா விளையாட்டு மாவட்ட மசாலா குற்றம் உலகம் கல்வி வேலை வாய்ப்பு தொழில் மருத்துவம் ஆன்மீகம் இ-பேப்பர் தினகரன் Facebook Twitter
Copyright 2016 All Rights Reserved to Kal Publications
No.229 Kutchery Road, Mylapore, Chennai - 600 004. Ph: 91-44-42209191
Website Advertisement
Ph: 91-44-42209191 Extn:21102, 21118
Newspaper Advertisement
Ph: +91 44 44676767
தொடர்புக்கு : [email protected] | செய்திகளை அனுப்ப : [email protected]