இ-பேப்பர்

தலையங்கம்

படங்கள்

வீடியோ

கல்வி

மாவட்ட மசாலா

முகப்பு

தமிழகம்

இந்தியா

உலகம்

குற்றம்

விளையாட்டு

மருத்துவம்

ரீல்மா

ஆன்மிகம்

வேலைவாய்ப்பு

தொழில்

முகப்பு

›

இந்தியா

ஜனாதிபதி தேர்தலில் எதிர்கட்சிகள் சார்பில் பொது வேட்பாளர் : சரத் யாதவ் நம்பிக்கை

5/2/2025 5:13:54 PM
கத்திரி வெயில் தொடங்கியது : காலை முதலே சுட்டெரிக்கிறது : வீட்டிற்குள் முடங்கிய மக்கள் ‘இதைவிட ஒசந்தது எதுவுமில்லை’ பிஎஸ்என்எல். 4 அதிரடி திட்டங்கள்: தினமும் 3ஜிபி, அளவில்லா அழைப்புகள்

புதுடெல்லி: உத்தரபிரதேசம் உள்ளிட்ட 5 மாநில தேர்தல் முடிவுகள் அண்மையில் வெளியாகின. இவற்றில் 4 மாநிலங்களை பாஜ கைப்பற்றியுள்ளது. இந்த சூழலில் ஜூலையில் ஜனாதிபதி தேர்தல் வர உள்ளது. பாஜ வெற்றியின் மூலமாக ஜனாதிபதி தேர்தலில் அக்கட்சியின் சார்பில் நிறுத்தப்படும் வேட்பாளரை தேர்வு செய்வதற்கான ஆதரவு பாஜவுக்கு பெருகியுள்ளது. இதற்கிடையில் எதிர்கட்சிகள் சார்பில் பொது வேட்பாளர் நிறுத்தப்பட்டு ஒற்றுமையுடன் வாக்களித்தால் மட்டுமே பாஜ வேட்பாளரை தோற்கடிக்க முடியும் என்ற நிலை ஏற்பட்டுள்ளது. இது தொடர்பாக சோனியாவை சந்தித்து நிதிஷ் குமார், சீதாராம் யெச்சூரி உள்ளிட்ட தலைவர்கள் ஆலோசனை நடத்தினர்.

இந்த சூழலில் ஜனாதிபதி தேர்தலில் எதிர்கட்சிகள் சார்பில் பொது வேட்பாளர் நிறுத்தப்பட வாய்ப்புள்ளதாக ஜனதா தள தலைவர் சரத் யாதவ் நம்பிக்கை தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் கூறுகையில், உ.பி. உள்ளிட்ட 5 மாநில தேர்தலிலும், டெல்லி மாநகராட்சி தேர்தலிலும் மதசார்பற்ற வாக்குகள் பிரிந்ததால்தான் பாஜ வெற்றி பெற முடிந்தது. பாஜ பெற்ற ஓட்டுகளை விட சமாஜ்வாடி, பகுஜன்சமாஜ், காங்கிரஸ் ஆகியவை மொத்தமாக வாங்கிய ஓட்டுகள் அதிகம். நாட்டை பாஜ ஆக்கிரமிப்பதை தடுக்க வேண்டிய அவசியம் ஏற்பட்டுள்ளது.

ஜனாதிபதி தேர்தலில் எதிர்கட்சிகள் பொது வேட்பாளரை நிறுத்தி ஒற்றுமையுடன் பாஜவுக்கு எதிராக வாக்களித்தால் அது ஒரு தொடக்கமாக அமையும். இதன் அடிப்படையில் பொது வேட்பாளரை எதிர்கட்சிகள் ஒன்றாக அறிவிக்கும் என்ற நம்பிக்கை உள்ளது என்றார். யார் அந்த பொது வேட்பாளர் என்ற கேட்ட போது, முதலில் எதிர்கட்சிகள் ஒன்று சேர வேண்டும் பின்னர் தான் அதுகுறித்து முடிவு செய்ய இயலும் என்றார்.

மேலும் சில
  • அந்தமானில் இந்திய ராணுவம் நடத்திய பிரமோஸ் ஏவுகணை சோதனை வெற்றி



  • நீட் தேர்வில் தமிழகத்துக்கு விலக்கு: ஓபிஎஸ் கோரிக்கை



  • தினகரனுக்கு நெருக்கமான உளவுத்துறை அதிகாரி உட்பட 19 ஐபிஎஸ் அதிகாரிகள் அதிரடி மாற்றம்



  • உ.பி.யில் பசுவுக்கு ஆம்புலன்ஸ் சேவை தொடக்கம் : இறந்த மகனை தந்தை தோளில் தூக்கி சென்ற அவலம்



  • டிஎஸ்பி மிரட்டல் பெண் போலீஸ் தற்கொலை முயற்சி



  • காஷ்மீரில் மீண்டும் பாக். அத்துமீறல்: 48 மணி நேரத்திற்குள் 2வது முறையாக தாக்குதல்



  • உத்தரகண்டில் ஓட்டு இயந்திரத்தில் தில்லுமுல்லு தேர்தல் ஆணையத்திற்கு ஐகோர்ட் நோட்டீஸ்



  • செருப்பால் அடிக்க வேண்டும் என அரியானாவில் காங். தலைவர்களை அவமதித்து பேசிய பாஜ எம்பி



  • காஷ்மீரில் பதற்றம் எதிரொலி : அனந்தநாக் இடைதேர்தல் ரத்து



  • மக்களுக்கான வளர்ச்சி என்பதை மறந்து விட்டு மத்திய, மாநில பாஜ அரசுகள் வகுப்புவாதத்தை தூண்டுகின்றன : அகிலேஷ் குற்றச்சாட்டு



Facebook

Twitter

Shriya Beats Sunny Leone
சன்னிலியோனை ஓரம் கட்டிய ஸ்ரேயா
  • எஸ்ஏ பொறியியல் கல்லூரியில் கருத்தரங்கு
  • பொன்னேரி நூலக வார விழா
  • பிரியதர்ஷினி கல்லூரியில் முதல் வருட மாணவர்களுக்கு வரவேற்பு
  • பட்டதாரி ஆசிரியர் தேர்வில் வெயிட்டேஜ் மதிப்பெண் ரத்து செய்ய வேண்டும்: ராமதாஸ் வலியுறுத்தல்
தலையங்கம் படங்கள் வீடியோ தமிழகம் இந்தியா ரீல்மா விளையாட்டு மாவட்ட மசாலா குற்றம் உலகம் கல்வி வேலை வாய்ப்பு தொழில் மருத்துவம் ஆன்மீகம் இ-பேப்பர் தினகரன் Facebook Twitter
Copyright 2016 All Rights Reserved to Kal Publications
No.229 Kutchery Road, Mylapore, Chennai - 600 004. Ph: 91-44-42209191
Website Advertisement
Ph: 91-44-42209191 Extn:21102, 21118
Newspaper Advertisement
Ph: +91 44 44676767
தொடர்புக்கு : [email protected] | செய்திகளை அனுப்ப : [email protected]