காஷ்மீரில் பதற்றம் எதிரொலி : அனந்தநாக் இடைதேர்தல் ரத்து
5/2/2025 5:10:40 PM
ஸ்ரீநகர்: காஷ்மீரில் ஆளும் பிடிபி எம்பி தாரிக் ஹமீது தனது பதவியை ராஜினாமா செய்து விட்டு காங்கிரசுக்கு தாவினார். இதனால் ஏற்பட்ட காலியிடம் காரணமாக ஸ்ரீநகர் மக்களவை தொகுதிக்கு கடந்த ஏப்ரல் 9ம் தேதி இடைதேர்தல் நடைபெற்றது. இதில் தேசிய மாநாட்டு கட்சியின் தலைவர் பரூக் அப்துல்லா வெற்றி பெற்றார். தேர்தலின் போது ஏற்பட்ட வன்முறையில் 8 பேர் கொல்லப்பட்டனர். இதையடுத்து கடந்த ஏப்ரல் 12ம் தேதி நடைபெற இருந்த அனந்த நாக் மக்களவை இடை தேர்தல் மே 25ம் தேதிக்கு ஒத்தி வைக்கப்பட்டது.
இங்கு எம்பியாக இருந்த மெகபூபா சட்டமன்ற தேர்தலில் வெற்றி பெற்று முதல்வரானதை தொடர்ந்து இந்த தொகுதி காலியாக உள்ளது. இந்த சூழலில் கடந்த சில நாட்களாக காஷ்மீரில் பதற்றமான சூழல் நிலவி வருகிறது. வன்முறை சம்பவங்கள், துப்பாக்கி சூடு, எல்லையில் அத்துமீறல் ஆகிய காரணங்களால் சட்டம் ஒழுங்கு பாதிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து மே 25ம் தேதி நடைபெற இருந்த அனந்தநாக் இடைதேர்தல் ரத்து செய்யப்பட்டுள்ளதாக தேர்தல் ஆணையம் இன்று அறிவித்துள்ளது.