இ-பேப்பர்

தலையங்கம்

படங்கள்

வீடியோ

கல்வி

மாவட்ட மசாலா

முகப்பு

தமிழகம்

இந்தியா

உலகம்

குற்றம்

விளையாட்டு

மருத்துவம்

ரீல்மா

ஆன்மிகம்

வேலைவாய்ப்பு

தொழில்

முகப்பு

›

குற்றம்

சேலத்தில் ஜன்னல் கம்பியை அறுத்து துணிகரம் வியாபாரி வீட்டில் 720 பவுன் கொள்ளை

5/2/2025 2:52:14 PM
கத்திரி வெயில் தொடங்கியது : காலை முதலே சுட்டெரிக்கிறது : வீட்டிற்குள் முடங்கிய மக்கள் ‘இதைவிட ஒசந்தது எதுவுமில்லை’ பிஎஸ்என்எல். 4 அதிரடி திட்டங்கள்: தினமும் 3ஜிபி, அளவில்லா அழைப்புகள்

சேலம்: கொலை மிரட்டல் கடிதத்தால் பரபரப்பு சேலத்தில் பிளைவுட் வியாபாரி வீட்டின் ஜன்னல் கம்பியை அறுத்து பீரோவில் இருந்த 720 பவுன் நகை மற்றும் ₹2 லட்சம் பணத்தை மர்ம நபர்கள் கொள்ளையடித்துச் சென்ற துணிகர சம்பவம் நடந்துள்ளது. அதோடு எலுமிச்சை, குங்குமம் போன்ற பூஜை பொருட்களோடு ெகாலை மிரட்டல் கடிதமும் எழுதி வைத்துச் சென்றது பெரும் பரபரப்போடு பீதியை ஏற்படுத்தி உள்ளது.

சேலம் கிச்சிப்பாளையம் அங்காளம்மன் கோயில் தெருவை சேர்ந்தவர் அத்தியப்பன் (74). செவ்வாய்ப்ேபட்டையில் பிளைவுட் கடை நடத்தி வந்த இவர், குழந்தைகள் இல்லாத நிலையில் முதல் மனைவி இறந்ததால் அதேபகுதியை சேர்ந்த விஜயலட்சுமி (40) என்பவரை இரண்டாம் திருமணம் செய்தார். இவர்களுக்கு ஒரு மகளும், ஒரு மகனும் உள்ளனர். கடந்த ஒன்றரை வருடங்களுக்கு முன்பு அத்தியப்பன் இறந்து விட்டார். இதனால் விஜயலட்சுமியின் தம்பி பாஸ்கர், அக்காவுக்கு துணையாக மனைவி குழந்தையுடன் அவரது வீட்டில் தங்கியுள்ளார்.
கடந்த 2 நாட்களுக்கு முன்பு, இவர்கள் அனைவரும் திருப்பதிக்கு சுவாமி தரிசனம் செய்ய புறப்பட்டுச் சென்றனர்.

 அங்கு சுவாமி தரிசனம் செய்து விட்டு இன்று காலை, அனைவரும் காரில் சேலம் வந்தனர். டிரைவருக்கு பணம் கொடுப்பதற்காக விஜயலட்சுமி பீரோவை திறக்க சென்றார். அப்ேபாது பீரோ திறந்திருப்பதை கண்டு திடுக்கிட்டார். பீரோவில் இருந்த 720 பவுன் நகை மற்றும் ₹2 லட்சம் பணம் மாயமாகி இருந்தது. மேலும், நகை வைக்கப்பட்டிருந்த இடத்தில் குங்குமம், மஞ்சள், எலுமிச்சம் பழம் உள்ளிட்ட ெபாருட்கள் வைக்கப்பட்டிருந்தது. வீட்டுவாசலுக்கு வெளியே ஒரு துண்டுச்சீட்டு இருந்தது. அதற்கு கீழும் குங்குமம், எலுமிச்சம் பழம் வைக்கப்பட்டிருந்தது.

அந்த துண்டுச் சீட்டில் நகை மாயமானது குறித்து யாரிடமாவது சொன்னால் குடும்பத்தோடு ஒழித்து விடுவேன் என்று எழுதியிருந்ததை கண்டு விஜயலட்சுமி குடும்பத்தினர் அதிர்ச்சியில் உறைந்தனர். இதுபற்றி தகவல் அறிந்து, சம்பவ இடத்திற்கு கிச்சிப்பாளையம் போலீசார் வந்து விசாரணை நடத்தினர். இதில் வீட்டின் பின்பக்கம் உள்ள கழிவறை ஜன்னல் கம்பியை அறுத்து கொள்ளையர்கள் புகுந்திருப்பது தெரியவந்தது. விஜயலட்சுமி குடும்பத்தினர் குறித்து நன்கு அறிந்தவர்களே இந்த கொள்ளையில் ஈடுபட்டிருக்க வேண்டும் என்று கூறப்படுகிறது.

அவர்கள் திருப்பதி செல்வதை கண்காணித்து, வீட்டின் பின்பக்க ஜன்னல் கம்பியை அறுத்து, துணிகர கொள்ளையில் ஈடுபட்டது தெரியவந்துள்ளது. இதற்கிடையே கொள்ளை நடந்த வீட்டில் மோப்பநாய் மேகா வரவழைக்கப்பட்டு சோதனை நடந்தது. ஆனால் மோப்பநாய் வீட்டை விட்டு, வெளியேறாமல் அங்கேயே படுத்துக் கொண்டது. இதனால் கொள்ளையர்கள் வீட்டில் நடமாடும் நபர்களாக இருக்கலாம் என்ற சந்தேகம் போலீசாருக்கு எழுந்துள்ளது. இதுகுறித்து கிச்சிப்பாளையம் போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். மக்கள் நடமாட்டம் நிறைந்த பகுதியில் நடந்த இந்த கொள்ளை சம்பவம், சேலத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

மேலும் சில
  • ஊத்துக்கோட்டை அருகே பயங்கரம்: போதையில் தூங்கிய வாலிபரை கழுத்தறுத்து கொன்ற கொடூரம்: நண்பர் கைது



  • புவனகிரி அருகே அதிகாலையில் துணிகரம்: சென்னை டிரைவரை தாக்கி ரூ.15 லட்சம் கார் கடத்தல்



  • சேலம் தொழிலதிபர் வீட்டில் கொள்ளை தம்பியின் மைத்துனர் கைது



  • கொரட்டூரில் பரபரப்பு அதிகாரி வீட்டை உடைத்து நகை, பணம் கொள்ளை



  • கீழ்ப்பாக்கத்தில் காரை மறித்து 1.5 கிலோ தங்கம் கொள்ளை; 5 கிலோ வெள்ளியும் அபேஸ்



  • கல்லூரி மாணவர் கொலை போலீஸ்காரர் கைது



  • டாஸ்மாக் கொள்ளை: 5 பேர் கைது



  • கோயில் உண்டியல் கொள்ளை



  • செங்குன்றம் அருகே காவலாளி கழுத்தறுத்து கொலை



  • மீஞ்சூர் பைபாஸ் சாலையில் ஆட்டோவை கடத்திய வாலிபர் கைது: போலீசாருக்கு பாராட்டு



Facebook

Twitter

Shriya Beats Sunny Leone
சன்னிலியோனை ஓரம் கட்டிய ஸ்ரேயா
  • எஸ்ஏ பொறியியல் கல்லூரியில் கருத்தரங்கு
  • பொன்னேரி நூலக வார விழா
  • பிரியதர்ஷினி கல்லூரியில் முதல் வருட மாணவர்களுக்கு வரவேற்பு
  • பட்டதாரி ஆசிரியர் தேர்வில் வெயிட்டேஜ் மதிப்பெண் ரத்து செய்ய வேண்டும்: ராமதாஸ் வலியுறுத்தல்
தலையங்கம் படங்கள் வீடியோ தமிழகம் இந்தியா ரீல்மா விளையாட்டு மாவட்ட மசாலா குற்றம் உலகம் கல்வி வேலை வாய்ப்பு தொழில் மருத்துவம் ஆன்மீகம் இ-பேப்பர் தினகரன் Facebook Twitter
Copyright 2016 All Rights Reserved to Kal Publications
No.229 Kutchery Road, Mylapore, Chennai - 600 004. Ph: 91-44-42209191
Website Advertisement
Ph: 91-44-42209191 Extn:21102, 21118
Newspaper Advertisement
Ph: +91 44 44676767
தொடர்புக்கு : [email protected] | செய்திகளை அனுப்ப : [email protected]