கல்லூரி மாணவர் கொலை போலீஸ்காரர் கைது
4/28/2017 3:02:18 PM
வானூர்: புதுவை லாஸ்பேட்டை ஆனந்தா நகரைச் சேர்ந்த சந்திரசேகர் மகன் சுதாகர் (21). பாலிடெக்னிக் மாணவரான இவர் கடந்த 25ம்தேதி நண்பர்களுடன் வெளியே சென்றார். அவரை உறவினர்கள் தேடிய நிலையில் நாவற்குளத்தில் தலையில் கல்லை போட்டு சுதாகர் படுகொலை செய்யப்பட்டு கிடந்தார். ஆரோவில் போலீசார் வழக்குபதிந்து விசாரணை நடத்தியதில் துப்புதுலங்கியது. இதையடுத்து லாஸ்பேட்டை நெசவாளர் நகரை சேர்ந்த ராஜேஷ் (21), பாபா கார்த்திக் (22) ஆகியோர் கைது செய்யப்பட்டனர்.
தொடர் விசாரணையில் இக்கொலையில் நாவற்குளத்தை சேர்ந்த போலீஸ்காரர் ஜெயராமிற்கும் (27) தொடர்பு இருப்பது உறுதியானது. இதையடுத்து நேற்று மாலை அவரையும் ஆரோவில் போலீசார் கைது செய்தனர். கைதான 3 பேரும் வானூர் கோர்ட்டில் ஆஜர்படுத்தப்பட்டு கடலூர் மத்திய சிறையில் அடைக்கப்பட்டனர். ஆரோவில் காவல்துறையிடம் இருந்து டிஜிபிக்கு அறிக்கை வந்தவுடன் ஜெயராம் மீது ஓரிருநாளில் துறைரீதியான நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிகிறது.