கோயில் உண்டியல் கொள்ளை
4/28/2017 2:28:00 PM
திருவள்ளூர்: திருவள்ளூர் அடுத்த வேப்பம்பட்டு கிராமத்தில் உள்ள வெங்கடேச பெருமாள் கோயில் முன்பக்க கிரீல் கேட் பூட்டு உடைக்கப்பட்டு இருந்தது. உள்ளே சென்று பார்த்தபோது, உண்டியலை பெயர்த்து எடுத்து சென்றது தெரிந்தது. இதுகுறித்து அப்பகுதி மக்கள் போலீசாருக்கு தகவல் கொடுத்தனர்.
சம்பவ இடத்துக்கு விரைந்து வந்த எஸ்ஐ தேவிகா தலைமையிலான போலீசார் விசாரணை நடத்தினர். இதில், அம்மனின் 2 பவுன் தாலி பொட்டு மற்றும் உண்டியல் பணம் கொள்ளைபோனது தெரியவந்தது. புகாரின்பேரில் போலீசார் வழக்குப்பதிந்து விசாரிக்கின்றனர்.