இ-பேப்பர்

தலையங்கம்

படங்கள்

வீடியோ

கல்வி

மாவட்ட மசாலா

முகப்பு

தமிழகம்

இந்தியா

உலகம்

குற்றம்

விளையாட்டு

மருத்துவம்

ரீல்மா

ஆன்மிகம்

வேலைவாய்ப்பு

தொழில்

முகப்பு

›

குற்றம்

மீஞ்சூர் பைபாஸ் சாலையில் ஆட்டோவை கடத்திய வாலிபர் கைது: போலீசாருக்கு பாராட்டு

4/28/2017 2:21:09 PM
கத்திரி வெயில் தொடங்கியது : காலை முதலே சுட்டெரிக்கிறது : வீட்டிற்குள் முடங்கிய மக்கள் ‘இதைவிட ஒசந்தது எதுவுமில்லை’ பிஎஸ்என்எல். 4 அதிரடி திட்டங்கள்: தினமும் 3ஜிபி, அளவில்லா அழைப்புகள்

ஆவடி: ஆவடி அருகே நள்ளிரவில் வியாபாரி வீட்டு முன் நிறுத்திய இருந்த சரக்கு ஆட்டோவை ஒரு வாலிபர் கடத்தினார். அவரை மீஞ்சூர் பைபாஸ் சாலையில் ரோந்து போலீசார் சுற்றி வளைத்து கைது செய்தனர்.ஆவடி அருகே முத்தாபுதுப்பேட்டை, பாலவேடு கிராமத்தை சேர்ந்தவர் மாரிசாமி (40). மளிகை கடை வியாபாரி. இவருக்கு சொந்தமாக சரக்கு ஆட்டோ ஒன்று உள்ளது. கடைக்கு தேவையான பொருட்களை வாங்கிவர மாரிசாமி பயன்படுத்தி வந்தார்.இந்நிலையில், தனது ஆட்டோவை நேற்று முன்தினம் இரவு வீட்டு முன் மாரிசாமி நிறுத்தி வைத்திருந்தாராம். இந்த ஆட்டோவை நள்ளிரவில் மர்ம நபர் ஒருவர் கடத்தி சென்றுள்ளார். இதுகுறித்து முத்தாபுதுப்பேட்டை காவல்நிலையத்தில் மாரிசாமி புகார் அளித்தார்.
இந்நிலையில், வண்டலூர்-மீஞ்சூர் வெளிவட்ட பைபாஸ் சாலையில் ரோந்து போலீசார் நிறுத்த சொல்லியும் நிற்காமல் சென்ற சரக்கு ஆட்டோவை பைக்கில் விரட்டி சென்று மடக்கி பிடித்தனர்.

இன்ஸ்பெக்டர் சார்லஸ், எஸ்ஐ நவரத்தினம் நடத்திய விசாரணையில், வியாபாரி மாரிசாமியின் ஆட்டோவை கடத்தி சென்றதும் கடத்தியவர் திருவள்ளூர் அருகே வெங்கல், அம்பிகை நகரை சேர்ந்த ரபீக் (30) என்பதும் தெரியவந்தது. மேலும், தனது கூட்டாளிகளுடன் சேர்ந்து 5க்கும் மேற்பட்ட ஆட்டோக்களை திருடியதாக ரபீக் கூறியுள்ளார்.
இதையடுத்து ரபீக்கை கைது செய்து, அவர் திருடிய 4 ஆட்டோக்களை பறிமுதல் செய்ய மதுரைக்கு போலீசார் விரைந்து உள்ளனர். ஆட்டோவை கடத்திய வாலிபரை விரட்டி பிடித்த 2 ரோந்து போலீசாருக்கும் உயர் அதிகாரிகள் பாராட்டி வெகுமதி அளித்தனர்.

மேலும் சில
  • ஊத்துக்கோட்டை அருகே பயங்கரம்: போதையில் தூங்கிய வாலிபரை கழுத்தறுத்து கொன்ற கொடூரம்: நண்பர் கைது



  • புவனகிரி அருகே அதிகாலையில் துணிகரம்: சென்னை டிரைவரை தாக்கி ரூ.15 லட்சம் கார் கடத்தல்



  • சேலம் தொழிலதிபர் வீட்டில் கொள்ளை தம்பியின் மைத்துனர் கைது



  • கொரட்டூரில் பரபரப்பு அதிகாரி வீட்டை உடைத்து நகை, பணம் கொள்ளை



  • கீழ்ப்பாக்கத்தில் காரை மறித்து 1.5 கிலோ தங்கம் கொள்ளை; 5 கிலோ வெள்ளியும் அபேஸ்



  • சேலத்தில் ஜன்னல் கம்பியை அறுத்து துணிகரம் வியாபாரி வீட்டில் 720 பவுன் கொள்ளை



  • கல்லூரி மாணவர் கொலை போலீஸ்காரர் கைது



  • டாஸ்மாக் கொள்ளை: 5 பேர் கைது



  • கோயில் உண்டியல் கொள்ளை



  • செங்குன்றம் அருகே காவலாளி கழுத்தறுத்து கொலை



Facebook

Twitter

Shriya Beats Sunny Leone
சன்னிலியோனை ஓரம் கட்டிய ஸ்ரேயா
  • எஸ்ஏ பொறியியல் கல்லூரியில் கருத்தரங்கு
  • பொன்னேரி நூலக வார விழா
  • பிரியதர்ஷினி கல்லூரியில் முதல் வருட மாணவர்களுக்கு வரவேற்பு
  • பட்டதாரி ஆசிரியர் தேர்வில் வெயிட்டேஜ் மதிப்பெண் ரத்து செய்ய வேண்டும்: ராமதாஸ் வலியுறுத்தல்
தலையங்கம் படங்கள் வீடியோ தமிழகம் இந்தியா ரீல்மா விளையாட்டு மாவட்ட மசாலா குற்றம் உலகம் கல்வி வேலை வாய்ப்பு தொழில் மருத்துவம் ஆன்மீகம் இ-பேப்பர் தினகரன் Facebook Twitter
Copyright 2016 All Rights Reserved to Kal Publications
No.229 Kutchery Road, Mylapore, Chennai - 600 004. Ph: 91-44-42209191
Website Advertisement
Ph: 91-44-42209191 Extn:21102, 21118
Newspaper Advertisement
Ph: +91 44 44676767
தொடர்புக்கு : [email protected] | செய்திகளை அனுப்ப : [email protected]