இ-பேப்பர்

தலையங்கம்

படங்கள்

வீடியோ

கல்வி

மாவட்ட மசாலா

முகப்பு

தமிழகம்

இந்தியா

உலகம்

குற்றம்

விளையாட்டு

மருத்துவம்

ரீல்மா

ஆன்மிகம்

வேலைவாய்ப்பு

தொழில்

முகப்பு

›

மாவட்ட மசாலா

தாசில்தாரை சிறைப்பிடித்த விஏஓக்கள்: திருக்கழுக்குன்றத்தில் நள்ளிரவு பரபரப்பு

4/19/2017 4:14:15 PM
பழநி அருகே ஆயிரம் ஆண்டு பழமையான நாணயங்கள் கண்டெடுப்பு தினை, சோளம், பசுந்தீவனங்களுடன் சின்னதம்பி யானைக்கு சமைக்கப்பட்ட உணவு: பயிற்சிக்கு பின்னர் வனத்தில் நடமாடவிட முடிவு

திருக்கழுக்குன்றம்- திருக்குழுக்குன்றம் தாசில்தாரை விஏஓக்கள் சிறைப்பிடித்ததால் பரபரப்பு ஏற்பட்டது. காஞ்சிபுரம் மாவட்டம் திருக்கழுக்குன்றம் தாசில்தாராக மனோகரன் பணியாற்றி வருகிறார். இவர், விஏஓக்களை மிரட்டி தவறான சான்றிதழ்கள் வழங்க நிர்ப்பந்தித்து வந்ததாக கூறப்படுகிறது. கடந்த 13ம் தேதி புதுப்பட்டினம் கிராமத்தில் உள்ள ஒரு இடத்தில் கூட்டுப்பட்டாவில் சம்பந்தமில்லாத நபரை சேர்த்து பட்டா வழங்கும்படி புதுப்பட்டினம் விஏஓ (பொறுப்பு) மணிக்கு தாசில்தார் மனோகரன் நிர்ப்பந்தம் செய்ததாக தெரிகிறது. அதற்கு அவர், ‘தவறான சான்றிதழ் வழங்க முடியாது’ என்று மறுத்துவிட்டாராம். இதனால் ஆத்திரம் அடைந்த தாசில்தாரர், ‘ உயரதிகாரியான நான் சொல்லும் சான்றிதழை நீங்கள் வழங்கிதான் ஆக வேண்டும். இல்லையென்றால் துறைரீதியாக நடவடிக்கை எடுப்பேன்’ என்று மிரட்டியதாக கூறப்படுகிறது. இதுகுறித்து, சக விஏஓக்களிடம் மணி கூறி வருத்தப்பட்டு உள்ளார்.

இந்நிலையில், விஏஓக்கள் அனைவரும் நேற்றிரவு, திருக்கழுக்குன்றம் தாலுகா அலுவலகத்தில் திரண்டனர். தாசில்தார் அலுவலகத்துக்குள் புகுந்து, தாசில்தாரை வெளியே விடாமல் சிறைபிடித்ததால் பரபரப்பு ஏற்பட்டது. நள்ளிரவு வரை சிறைப்பிடித்து வைத்ததால் மேலும் பரபரப்பு ஏற்பட்டது.
இதுபற்றி தகவல் கிடைத்ததும் மாமல்லபுரம் டிஎஸ்பி எட்வர்ட், திருக்கழுக்குன்றம் போலீஸ் இன்ஸ்பெக்டர் அனுமந்தன் ஆகியோர் நள்ளிரவு 12.30 மணியளவில் தாசில்தார் அலுவலகத்துக்கு விரைந்தனர். சம்பந்தப்பட்ட விஏஓக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தி, தாசில்தாரை விடுவித்தனர்.
எனினும் விஏஓக்கள் போராட்டம் இரவு முழுவதும் தொடர்ந்தது. இன்று காலையிலும் இந்த போராட்டம் நீடித்தது. காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள அனைத்து தாலுகாக்களில் இருந்தும் சுமார் நூற்றுக்கும் மேற்பட்ட விஏஓக்கள், இந்த போராட்டத்தில் கலந்து கொண்டனர். தாசில்தார் மனோகரன் மீது உயரதிகாரிகள் துறைரீதியான நடவடிக்கை எடுக்க வேண்டும். அதற்கான உத்தரவாதம் அளிக்கும்வரை இந்த போராட்டம் தொடரும்’ என்றனர். இதனால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.


மேலும் சில
  • புழல் 23வது வார்டில் கழிவுநீர், குப்பை தேக்கத்தால் தொற்றுநோய் பீதியில் மக்கள்



  • பள்ளிப்பட்டு பேரூராட்சிக்கு புதிய செயல் அலுவலர்



  • பொதட்டூர்பேட்டையில் மாணவர்களுக்கு நிலவேம்பு கசாயம்



  • ஊனமாஞ்சேரியில் மனுநீதி நாள் முகாம்: 152 பேருக்கு நலத்திட்ட உதவிகள்



  • செங்குன்றம் சார்பதிவாளர் ஆபீசில் புரோக்கர்கள் கடும் கெடுபிடி



  • தனியார் பிடியில் இருந்த முருகன் கோயிலை அறநிலையத்துறை மீட்டது



  • இறையருள் அறக்கட்டளை முப்பெரும் விழா



  • திருவள்ளூர் மாவட்டத்திலும் டாஸ்மாக் 4 நாள் லீவு



  • திருவள்ளூர் மாவட்டத்தில் 29 எஸ்ஐக்களுக்கு பயிற்சி



  • முன்னாள் மத்திய அமைச்சர் கண்ணப்பன் மனைவி மரணம்: ஸ்டாலின் தொலைபேசியில் ஆறுதல்



Facebook

Twitter

Shriya Beats Sunny Leone
சன்னிலியோனை ஓரம் கட்டிய ஸ்ரேயா
  • எஸ்ஏ பொறியியல் கல்லூரியில் கருத்தரங்கு
  • பொன்னேரி நூலக வார விழா
  • பிரியதர்ஷினி கல்லூரியில் முதல் வருட மாணவர்களுக்கு வரவேற்பு
  • பட்டதாரி ஆசிரியர் தேர்வில் வெயிட்டேஜ் மதிப்பெண் ரத்து செய்ய வேண்டும்: ராமதாஸ் வலியுறுத்தல்
தலையங்கம் படங்கள் வீடியோ தமிழகம் இந்தியா ரீல்மா விளையாட்டு மாவட்ட மசாலா குற்றம் உலகம் கல்வி வேலை வாய்ப்பு தொழில் மருத்துவம் ஆன்மீகம் இ-பேப்பர் தினகரன் Facebook Twitter
Copyright 2018 All Rights Reserved to Kal Publications
No.229 Kutchery Road, Mylapore, Chennai - 600 004. Ph: 91-44-42209191
Website Advertisement
Ph: 91-44-42209191 Extn:21102, 21118
Newspaper Advertisement
Ph: +91 44 44676767
தொடர்புக்கு : [email protected] | செய்திகளை அனுப்ப : [email protected]