இ-பேப்பர்

தலையங்கம்

படங்கள்

வீடியோ

கல்வி

மாவட்ட மசாலா

முகப்பு

தமிழகம்

இந்தியா

உலகம்

குற்றம்

விளையாட்டு

மருத்துவம்

ரீல்மா

ஆன்மிகம்

வேலைவாய்ப்பு

தொழில்

முகப்பு

›

மருத்துவம்

செரிமானத்தை தூண்டும் மாங்காய்

4/17/2017 2:52:40 PM
கொரோனாவால் பயணங்கள் முடங்கிய நிலையில் உள்நாட்டு விமானங்கள் 100% இயக்கம் சனிக்கிழமை 6வது மெகா தடுப்பூசி முகாம்: அமைச்சர் மா.சுப்பிரமணியன் தகவல்

நமக்கு எளிதில், அருகில் கிடைக்க கூடிய மூலிகைகள், இல்லத்தில் உள்ள அஞ்சறை பெட்டியில் வைத்திருக்கும் உணவுப் பொருட்களை கொண்டு பாதுகாப்பான பக்கவிளைவில்லாத மருத்துவத்தை பார்த்து வருகிறோம். அந்தவகையில் மாங்காய், மாவிலையின் நன்மைகள் குறித்து அறியலாம்.
மா பல்வேறு மருத்துவ குணங்களை கொண்டது. மாங்காய், மாம்பழம், இலை, பட்டை, பூ என அனைத்தும் மருந்தாகிறது. மாவிலைகள் தொண்டைக்கட்டு, வலி, வீக்கத்தை சரிசெய்யும். மாவிலைகளை காயவைத்து தேனீராக்கி குடிப்பதால் உள் உறுப்புகளில் ஏற்படும் அழற்சி, வீக்கம் குணமாகும். மாவிலையை புகையாக்கும்போது கொசுக்கள் வராது. மாங்காயை பயன்படுத்தி ஜீரண கோளாறுகளை போக்கும் மருந்து தயரிக்கலாம். தேவையான பொருட்கள்: மாங்காய், இஞ்சி, ஏலக்காய், ஜாதிக்காய், ஜாதிபத்ரி, புதினா, வெல்லம். செய்முறை: மாங்காய் துண்டுகளுடன், இஞ்சி, ஜாதிபத்ரி, ஜாதிக்காய் பொடி, ஏலக்காய் சேர்த்து நீர்விடவும். இதனுடன் வெல்லம், ஒரு ஸ்பூன் புதினா சாறு சேர்த்து கொதிக்க வைக்கவும். இதை வடிகட்டி குடித்துவர செரிமான கோளாறு சரியாகும்.

பல்வேறு மருத்துவ குணங்களை கொண்ட மாங்காய் புளிப்பு சுவை உடையது. பசியை தூண்டக் கூடியது. குறைவாக சாப்பிடும்போது வயிற்று வலியை சரிசெய்யும். அதிகமாக சாப்பிட்டால் வயிற்று வலி ஏற்படும். உள் உறுப்புகளை தூண்டக் கூடியது. வயிற்று கோளாறுகளுக்கு அற்புத மருந்தாகிறது. ருசியை தரக்கூடியது. இளம்தாய் மார்கள் மாங்காயை விரும்பி சாப்பிடுவார்கள். மாவிலையை பயன்படுத்தி தொண்டை வலியை போக்கும் மருந்து தயாரிக்கலாம். தேவையான பொருட்கள்: மாவிலை, இஞ்சி, பனங்கற்கண்டு. செய்முறை: 6 மாவிலைகளை சுத்தப்படுத்தி துண்டுகளாக்கி எடுக்கவும். இதனுடன் சிறிது இஞ்சி, பனங்கற்கண்டு சேர்த்து, ஒரு டம்ளர் நீர்விட்டு கொதிக்க வைக்க வேண்டும். இதை வடிகட்டி குடித்துவர தொண்டைக்கட்டு, வலி, இருமல் விலகிப்போகும். வாய்ப்புண், நாக்கில் ஏற்படும் புண்கள் ஆறும். மாவிலை நோய் கிருமிகளை தடுக்கும் தன்மை உடையது.
மாம்பருப்பை பயன்படுத்தி வயிற்றுப்போக்கை கட்டுப்படுத்தும் மருந்து தயாரிக்கலாம். தேவையான பொருட்கள்: மாம்பருப்பு, பனங்கற்கண்டு.

செய்முறை: மாம்பருப்பை நசுக்கி, பனங்கற்கண்டு சேர்த்து ஒரு டம்ளர் அளவுக்கு நீர்விட்டு கொதிக்க வைக்கவும். இதை வடிகட்டி குடித்துவர வயிற்றுப்போக்கு சரியாகும். மாதவிலக்கின்போது ஏற்படும் அதிக ரத்தப்போக்கை கட்டுப்படுத்தும். உணவுடன் மாங்காய் சேரும்போது அதிக சுவை ஏற்படும். மாங்காயை அதிகமாக சாப்பிட்டால் வயிற்றுப்போக்கு ஏற்படும் என்பதால் அளவுடன் சாப்பிட வேண்டும். முக்கனிகளில் முதன்மைபெறும் மா பல்வேறு மருத்துவ குணங்களை கொண்டது. இதை நாம் பயன்படுத்தி நன்மை பெறலாம். வெயிலில் சென்று வருவதால் முகத்தில் ஏற்படும் சுருக்கம், கருமையை போக்கும் மருத்துவம் குறித்து பார்க்கலாம். வெயில் தோலில் படுவதால் சுருக்கம், கருமை, வறண்ட நிலை உண்டாகிறது. இப்பிரச்னைகளுக்கு அதிமதுரம் மருந்தாகிறது. அதிமதுரப் பொடியை பாலோடு கலந்து பூசிவர வெகு சீக்கரத்தில் கருமைநிறம், சுருக்கம் மாறும். தோல் இயல்பான நிலைக்கு திரும்பும்.

மேலும் சில
  • பாலின உணர்வை தூண்டும் மல்லிகை மருத்துவம்



  • சளி, இருமலுக்கு இஞ்சி, வெற்றிலை



  • உடல் உஷ்ணத்தை போக்கும் மருத்துவம்



  • செரிமானத்தை தூண்டும் மருத்துவம்



  • கோடை கால பிரச்னைகளுக்கு தீர்வாகும் எலுமிச்சை



  • கோடைகால பிரச்னைகளை போக்கும் மருத்துவம்



  • உடலுக்கு குளிர்ச்சி தரும் வெள்ளரி, மாங்காய்



  • வெயிலின் தாக்கத்தை போக்கும் மருத்துவம்



  • உஷ்ணத்தை தணிக்கும் தர்பூசணி



  • தும்மல் பிரச்னையை போக்கும் மருத்துவம்



Facebook

Twitter

Shriya Beats Sunny Leone
சன்னிலியோனை ஓரம் கட்டிய ஸ்ரேயா
  • எஸ்ஏ பொறியியல் கல்லூரியில் கருத்தரங்கு
  • பொன்னேரி நூலக வார விழா
  • பிரியதர்ஷினி கல்லூரியில் முதல் வருட மாணவர்களுக்கு வரவேற்பு
  • பட்டதாரி ஆசிரியர் தேர்வில் வெயிட்டேஜ் மதிப்பெண் ரத்து செய்ய வேண்டும்: ராமதாஸ் வலியுறுத்தல்
தலையங்கம் படங்கள் வீடியோ தமிழகம் இந்தியா ரீல்மா விளையாட்டு மாவட்ட மசாலா குற்றம் உலகம் கல்வி வேலை வாய்ப்பு தொழில் மருத்துவம் ஆன்மீகம் இ-பேப்பர் தினகரன் Facebook Twitter
Copyright 2018 All Rights Reserved to Kal Publications
No.229 Kutchery Road, Mylapore, Chennai - 600 004. Ph: 91-44-42209191
Website Advertisement
Ph: 91-44-42209191 Extn:21102, 21118
Newspaper Advertisement
Ph: +91 44 44676767
தொடர்புக்கு : [email protected] | செய்திகளை அனுப்ப : [email protected]