இ-பேப்பர்

தலையங்கம்

படங்கள்

வீடியோ

கல்வி

மாவட்ட மசாலா

முகப்பு

தமிழகம்

இந்தியா

உலகம்

குற்றம்

விளையாட்டு

மருத்துவம்

ரீல்மா

ஆன்மிகம்

வேலைவாய்ப்பு

தொழில்

முகப்பு

›

சினிமா(ரீல்மா)

தேசிய விருது சர்ச்சை தொடர்கிறது;ஏ.ஆர்.முருகதாஸ் மீது பிரியதர்ஷன் தாக்கு: படம் பார்க்காமல் விமர்சிப்பதா?

4/12/2025 4:05:40 PM
ஹைட்ரோ கார்பன் திட்டம் எதிர்த்து நெடுவாசலில் போராட்டம் நீடிப்பு: 70 கிராம மக்கள் நாளை முக்கிய முடிவு தமிழகத்தில் மதவாதத்தை திணிக்கும் பாஜவின் முயற்சி நிச்சயம் நிறைவேறாது: மு.க.ஸ்டாலின் பரபரப்பு பேட்டி

64வது தேசிய விருதுகள் சமீபத்தில் அறிவிக்கப்பட்டன. சிறந்த நடிகராக அக்‌ஷய்குமார்,  தேர்வு குழு சிறப்பு விருது மோகன்லால் உள்ளிட்ேடாருக்கு வழங்கப்பட்டது. தேர்வு குழு தலைவராக பிரியதர்ஷன் இருப்பதால் தனது நண்பர்களான இருவருக்கும் விருது தந்திருப்பதாகவும், தங்கல் படத்தில் சிறப்பாக நடிப்பை வெளியிட்ட ஆமிர்கானுக்கு விருது வழங்கப்படாதது பாரபட்சம் எனவும் விமர்சனம் எழுந்தது. இயக்குனர் ஏ.ஆர்.முருகதாஸும் இதுகுறித்து கடுமையாக விமர்சித்திருந்தார். பொருத்தமானவர்களுக்கு விருது வழங்கப்படவில்லை. பாரபட்சமாக வழங்கப்பட்டிருப்பதாக கருத்து தெரிவித்திருந்தார். இதுகுறித்து ஏற்கனவே பதில் அளித்திருந்த பிரியதர்ஷன், ‘ஆமிர்கானுக்கு கடந்த 2008ம் ஆண்டு தாரே ஜமீன் பர் படத்துக்கு தேசிய விருது வழங்கியபோது அதை அவர் பெற மறுத்துவிட்டார். மீண்டும் அவருக்கு விருது அறிவிக்கப்பட்டால் அதையும் ஏற்க மறுத்து விடுவார். இதனால் விருது வீணாவதைவிட சிறப்பான நடிப்பை வெளியிட்டிருக்கும் வேறு நடிகருக்கு வழங்கலாம் என்று முடிவு செய்யப்பட்டது. மேலும் தங்கல் படத்தில் நடித்த நடிகை ஒருவருக்கு விருது அறிவிக்கப்பட்டிருக்கிறது’ என்றார். ஏ.ஆர்.முருகதாஸின் விமர்சனம் குறித்து கருத்து தெரிவிக்காமலிருந்த பிரியதர்ஷன் தற்போது அவருக்கு சூடான பதில் அளித்திருக்கிறார். ‘விமர்சனம் செய்பவர்களிடம் நான் குறிப்பாக பார்ப்பது என்னவென்றால் அவர்கள் யாருமே விருது பெற்ற படங்களை பார்க்காதவர்கள். மராத்தி, வங்காள மொழிப்படங்களில் அற்புதமான கருத்துக்கள் அடங்கியிருந்தன.
இயக்குனர் முருகதாஸும் விருது பெற்ற படங்கள் ஒன்றைகூட பார்த்திருக்க மாட்டார். அப்படியிருக்கும்போது அவர் எப்படி தேசிய விருது தேர்வை விமர்சிக்கலாம். தனிப்பட்ட ஒருவரின் கருத்துக்கு எந்த மதிப்பும் கிடையாது. அது தீர்ப்பில் எந்த மாற்றத்தையும் கொண்டு வராது’ என்றார்.

மேலும் சில
  • அரபு நடிகை என்ட்ரி



  • மஞ்சு விவாகரத்து, காவ்யா மறுமணம் ஏன்? மவுனம் கலைத்தார் திலீப்



  • சினிமா போட்டியில் சூடுபிடிக்கிறது: டோனி வசூலை மிஞ்சுமா சச்சின் படம்



  • ஹரிப்பிரியாவை கவர்ச்சியில் வீழ்த்த மேக்னா முடிவு



  • நாளை முதல் குடிக்கமாட்டேன் சத்தியமடி தங்கம்.... ராம்கோபால் வர்மா புதுவிளையாட்டு



  • ரேவதி இயக்கும் படம்: தமன்னா திடீர் விலகல்



  • லாரன்ஸ் - ஆர்யாவுடன் மோதும் தனுஷ்



  • பள்ளி மாணவியான ‘கான்வென்ட்’ வெண்பா



  • தங்கையுடன் கும்மாளம் போட்ட டாப்ஸி



  • இளையராஜாவுடன் பிரச்னை காலம் தீர்த்து வைக்கும்: எஸ்.பி.பி நம்பிக்கை



Facebook

Twitter

Arab actress Entry
அரபு நடிகை என்ட்ரி
  • எஸ்ஏ பொறியியல் கல்லூரியில் கருத்தரங்கு
  • பொன்னேரி நூலக வார விழா
  • பிரியதர்ஷினி கல்லூரியில் முதல் வருட மாணவர்களுக்கு வரவேற்பு
  • பட்டதாரி ஆசிரியர் தேர்வில் வெயிட்டேஜ் மதிப்பெண் ரத்து செய்ய வேண்டும்: ராமதாஸ் வலியுறுத்தல்
தலையங்கம் படங்கள் வீடியோ தமிழகம் இந்தியா ரீல்மா விளையாட்டு மாவட்ட மசாலா குற்றம் உலகம் கல்வி வேலை வாய்ப்பு தொழில் மருத்துவம் ஆன்மீகம் இ-பேப்பர் தினகரன் Facebook Twitter
Copyright 2016 All Rights Reserved to Kal Publications
No.229 Kutchery Road, Mylapore, Chennai - 600 004. Ph: 91-44-42209191
Website Advertisement
Ph: 91-44-42209191 Extn:21102, 21118
Newspaper Advertisement
Ph: +91 44 44676767
தொடர்புக்கு : [email protected] | செய்திகளை அனுப்ப : [email protected]