இறையருள் அறக்கட்டளை முப்பெரும் விழா
4/10/2025 2:08:36 PM
செங்கல்பட்டு- செங்கை இறையருள் அறக்கட்டளை ஆண்டு விழா, தெய்வ சேக்கிழார் திருமுறை விழா, புரவலர் சான்றிதழ் வழங்கும் விழா என முப்பெரும் விழா செங்கல்பட்டில் நேற்று நடந்தது. அறக்கட்டளை அறங்காவலர் வெங்கட்ராமன் தலைமை வகித்தார். தலைவர் லோகநாதன் வரவேற்றார். மதுராந்தகம் அடுத்த குருகுலத்தில் உள்ள திருக்குறள் பீடத்தின் ஆதீனம் குருபழனி அடிகள் சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு, தேமொழியார் சுவாமிகள் அரங்கத்தை திறந்து வைத்து சொற்பொழிவாற்றினார். அதை தொடர்ந்து, வள்ளலாளர் தொண்டர்களுக்கு புரவலர் சான்றிதழ் வழங்கினார். நிகழ்ச்சியில், திருவாசக முற்றோதல் மகளிர் வழிபாட்டு குழுவினர் சார்பில் பல்வேறு தலைப்புகளில் சொற்பொழிவு நடந்தது. சேக்கிழார் சீர்பரவுவார் விருது செங்கழுனி சரவணனுக்கும், திருப்பணி செம்மல் விருது மணி என்பருக்கும் வழங்கப்பட்டது. விழாவில் 2 ஆயிரம் பேருக்கு அன்னதானம் வழங்கப்பட்டது. திருக்கழுக்குன்றம் வேதகிரீஸ்வரர் கோயிலின் ஓதுவாமூர்த்தி சொக்கலிங்கம், சென்னை கிளை அருள்ஞான பெருவொளி நிர்வாகி பொன்னம்பலம், அருள்ஞான பெருவொளி அறக்கட்டளை அறங்காவலர் பத்மினி உள்பட பலர் கலந்து கொண்டனர்.