இ-பேப்பர்

தலையங்கம்

படங்கள்

வீடியோ

கல்வி

மாவட்ட மசாலா

முகப்பு

தமிழகம்

இந்தியா

உலகம்

குற்றம்

விளையாட்டு

மருத்துவம்

ரீல்மா

ஆன்மிகம்

வேலைவாய்ப்பு

தொழில்

முகப்பு

›

தமிழகம்

உச்சக்கட்டத்தில் உள்கட்சி மோதல்; அதிமுகவில் இருந்து சசிகலா, டிடிவி நீக்கம் - ஓபிஎஸ் அணி அதிரடி நடவடிக்கை

2/17/2017 4:42:41 PM
500 மதுக்கடைகள் மூடல்: பெண்கள் டூவீலர் வாங்க 50 சதவீத மானியம் - முதல்வர் எடப்பாடி உத்தரவு மே 15ம் தேதிக்குள் உள்ளாட்சி தேர்தல் - உயர்நீதிமன்றத்தில் தேர்தல் ஆணையம் தகவல்

சென்னை- அதிமுக உள்கட்சி மோதல் உச்சக்கட்டம் அடைந்துள்ளது. கட்சி பொதுச் செயலாளர் சசிகலா, துணை பொதுச் செயலாளர் தினகரன், வெங்கடேஷ் ஆகியோரை கட்சியில் இருந்து நீக்கியுள்ளதாக ஓபிஎஸ் அணியில் உள்ள அவைத் தலைவர் மதுசூதனன் அறிவித்துள்ளார். ஜெயலலிதா மறைவுக்குப் பின் அதிமுக கட்சி 2 ஆக உடைந்துள்ளது. சசிகலாவுக்கு எதிராக ஓ.பன்னீர்செல்வம் திடீரென போர்க்கொடி தூக்கிய பின்பு, அதிமுக எம்பிக்கள், எம்எல்ஏக்கள், முன்னாள் அமைச்சர்கள் என முக்கிய நிர்வாகிகள் பலர் அவருக்கு ஆதரவு தெரிவித்தனர். கட்சியின் அவைத்தலைவர் மதுசூதனன், செய்தி தொடர்பாளர் பொன்னையன் உள்ளிட்ட மூத்த நிர்வாகிகளும் பன்னீர்செல்வத்தை ஆதரித்தனர். இதனால் ஆத்திரம் அடைந்த அதிமுக பொதுச்செயலாளர் சசிகலா அதிரடி நடவடிக்கை மேற்கொண்டார்.

முதலில் பன்னீர்செல்வம், பொன்னையன், மதுசூதனன், அமைச்சர் மாபா பாண்டியராஜன் உள்ளிட்டோரின் பதவிகள் பறிக்கப்பட்டது. தொடர்ந்து சசிகலா சிறைக்கு செல்வதற்கு முன் அவசர, அவசரமாக பன்னீர்செல்வம் உள்பட 20 பேரை கட்சியில் இருந்து நீக்கினார். ஆனால், சசிகலா தற்காலிக பொதுச் செயலாளராக தேர்ந்தெடுக்கப்பட்டதே செல்லாது என பன்னீர்செல்வம் அணியினர் திட்டவட்டமாக தெரிவித்தனர். இது தொடர்பாக, பன்னீர்செல்வம் அணியின் சார்பில் தேர்தல் கமிஷனிடம் நேற்று மனு அளிக்கப்பட்டது. இந்த பரபரப்பான சூழ்நிலையில் இன்று திடீரென பன்னீர்செல்வம் அணியினர் அடுத்த நடவடிக்கையை மேற்கொண்டனர். அதிமுகவில் இருந்து சசிகலா, டிடிவி தினகரன், டாக்டர் வெங்கடேஷ் ஆகியோரை நீக்கியுள்ளதாக அறிவித்தனர்.

இது பற்றி, மதுசூதனன் வெளியிட்ட அறிக்கையில், ‘‘ஜெயலலிதாவுக்கு துரோகம் செய்து, கட்சியில் இருந்து அவரால் பல ஆண்டுகள் நீக்கி வைக்கப்பட்டிருந்த டிடிவி.தினகரன், டாக்டர் எஸ்.வெங்கடேஷ் ஆகியோரை எவ்வித அதிகாரமும் இல்லாமல் மீண்டும் கட்சியில் சேர்த்ததாக வெளியிட்ட அறிவிப்பு ரத்து செய்யப்படுகிறது’’ என்று கூறியுள்ளார். மேலும், சசிகலாவையும் கட்சியில் இருந்து நீக்கி மதுசூதனன் அறிவிப்பு வெளியிட்டுள்ளதாக கூறப்படுகிறது. பன்னீர்செல்வம் அணியினரின் இந்த நடவடிக்கை அதிமுக தொண்டர்களிடையே பரபரப்பு ஏற்படுத்தி உள்ளது. அதேசமயம், சசிகலாவின் நியமனம் குறித்து தேர்தல் கமிஷன் இன்னும் எந்த முடிவும் எடுக்காத நிலையில், எது உண்மையான அதிமுக என்ற குழப்பமும் தொண்டர்களிடம் ஏற்பட்டுள்ளது.

மேலும் சில
  • எம்எல்ஏக்கள் குறித்து டுவிட்டரில் கருத்து: நடிகர் கமலை கைது செய்ய வேண்டும் - போலீசில் இந்திய தேசிய லீக் புகார்



  • எடப்பாடியை ஆதரித்த எம்எல்ஏக்கள் மீது மக்கள் கோபம்: சொந்த தொகுதிகளுக்கு செல்ல முடியவில்லை - போலீஸ் பாதுகாப்பு கேட்பதால் பரபரப்பு



  • மு.க.ஸ்டாலின் மற்றும் எம்எல்ஏக்களை தாக்கிய போலீஸ் அதிகாரிகளை சஸ்பெண்ட் செய்ய வேண்டும் - திருநாவுக்கரசர் பேட்டி



  • எர்ணாவூர் சிறுமி கொலையில் குற்றவாளிகளை பிடிக்கக்கோரி மக்கள் திடீர் சாலை மறியல் - பெண் உள்பட 5 பேரை பிடித்து விசாரணை



  • ‘யார் வந்தாலும் பரவாயில்லை’ ஓட்டு போட்ட மக்களுக்கு நல்லது செய்ய வேண்டும் - நடிகர் விஷால் பேட்டி



  • ஒரு கோடி ரூபாய் வாடகை பாக்கி: கடைக்கு சீல், கோயில் நிலம் மீட்பு - பாரிமுனையில் பரபரப்பு



  • 7 தமிழர்கள் விடுதலைக்காக மத்திய, மாநில அரசுகளுக்கு அனைத்து தரப்பினரும் அழுத்தம் தர வேண்டும் - ராமதாஸ் வலியுறுத்தல்



  • திமுக உண்ணாவிரதத்தில் பெருந்தலைவர் மக்கள் கட்சி பங்கேற்பு - என்.ஆர்.தனபாலன்



  • திருவாலங்காடு ஒன்றியத்தில் 8 மாணவ, மாணவிகளுக்கு வாந்தி,பேதி



  • அசாதாரண அரசியல் சூழல் குறித்து சிபிஎம் கட்சியின் மக்கள் சந்திப்பு இயக்கம் கிளை வாரியாக இன்றுமுதல் நடக்கிறது



Facebook

Twitter

பஞ்சாப் மாடல் கோலிவுட்டில் என்ட்ரி
  • எஸ்ஏ பொறியியல் கல்லூரியில் கருத்தரங்கு
  • பொன்னேரி நூலக வார விழா
  • பிரியதர்ஷினி கல்லூரியில் முதல் வருட மாணவர்களுக்கு வரவேற்பு
  • பட்டதாரி ஆசிரியர் தேர்வில் வெயிட்டேஜ் மதிப்பெண் ரத்து செய்ய வேண்டும்: ராமதாஸ் வலியுறுத்தல்
தலையங்கம் படங்கள் வீடியோ தமிழகம் இந்தியா ரீல்மா விளையாட்டு மாவட்ட மசாலா குற்றம் உலகம் கல்வி வேலை வாய்ப்பு தொழில் மருத்துவம் ஆன்மீகம் இ-பேப்பர் தினகரன் Facebook Twitter
Copyright 2016 All Rights Reserved to Kal Publications
No.229 Kutchery Road, Mylapore, Chennai - 600 004. Ph: 91-44-42209191
Website Advertisement
Ph: 91-44-42209191 Extn:21102, 21118
Newspaper Advertisement
Ph: +91 44 44676767
தொடர்புக்கு : [email protected] | செய்திகளை அனுப்ப : [email protected]