இ-பேப்பர்

தலையங்கம்

படங்கள்

வீடியோ

கல்வி

மாவட்ட மசாலா

முகப்பு

தமிழகம்

இந்தியா

உலகம்

குற்றம்

விளையாட்டு

மருத்துவம்

ரீல்மா

ஆன்மிகம்

வேலைவாய்ப்பு

தொழில்

முகப்பு

›

தமிழகம்

நெல்லை, தூத்துக்குடியில் மேலும் 4 எம்எல்ஏக்கள் ஓபிஎஸ் அணிக்கு தாவ திட்டம்; பரபரப்பு தகவல்கள்

2/9/2025 5:08:12 PM
உத்தரபிரதேசத்தில் முதல் கட்ட தேர்தல் 73 தொகுதிகளில் விறுவிறுப்பான வாக்குப்பதிவு; மக்கள் ஆர்வத்துடன் வரிசையில் நின்று வாக்களித்தனர் ஜெயலலிதாவின் சொத்துக்களை சசிகலா குடும்பம் அபகரிக்க விடமாட்டோம்; ஓ.பன்னீர்செல்வம் பரபரப்பு பேட்டி

தூத்துக்குடி- நெல்லை, தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள 2 எம்எல்ஏக்கள் ஓ.பன்னீர்செல்வத்திற்கு ஆதரவு தெரிவித்துள்ள நிலையில் இவ்விரு மாவட்டத்தை சேர்ந்த மேலும் 4 அதிமுக எம்எல்ஏக்களும் ஆதரவு தெரிவிக்க இருப்பதாக பரபரப்பு தகவல்கள் வெளியாகிவுள்ளன. முதல்வர் பன்னீர் செல்வத்துக்கு  மனோகரன்,  எஸ்.பி.சண்முகநாதன், மாணிக்கம், ஆறுகுட்டி, மனோரஞ்சிதம், ஆகிய 5 எம்எல்ஏக்கள் ஆதரவு தெரிவித்துள்ளனர். இந்நிலையில் நெல்லை, தூத்துக்குடி மாவட்டத்தை சேர்ந்த மேலும் 4 அதிமுக எம்எல்ஏக்களும் ஓபிஎஸ் அணிக்கு செல்ல முடிவு செய்துள்ளனர். நெல்லை மாவட்டத்தை பொறுத்தவரை மொத்தமுள்ள 10 தொகுதிகளில் சங்கரன்கோவில், தென்காசி, வாசுதேவநல்லூர், ராதாபுரம், அம்பை ஆகிய 5 தொகுதிகளில் அதிமுக வெற்றி பெற்றது. இதில் தற்போது வாசுதேவநல்லூர் எம்எல்ஏ ஓபிஎஸ்க்கு ஆதரவு தெரிவித்துள்ளார். நெல்லை மாவட்டத்தில் மேலும் 2 எம்எல்ஏக்கள் ஓ.பிஎஸ்-க்கு ஆதரவு தெரிவிக்கவுள்ளதாக தெரிகிறது. இதுதவிர நெல்லை மாவட்டத்தை சேர்ந்த அதிமுகவின் முக்கிய நிர்வாகிகள் சிலரும் ஓபிஎஸ்-க்கு ஆதரவு தெரிவித்துள்ளனர்.

இதேபோல் தூத்துக்குடி மாவட்டத்தை பொறுத்தவரை உள்ள 6 தொகுதிகளில் கோவில்பட்டி, விளாத்திகுளம், ஓட்டப்பிடாரம், ஸ்ரீவைகுண்டம் ஆகிய 4 தொகுதிகளில் அதிமுக வெற்றி பெற்றது. இதில் ஸ்ரீவைகுண்டம் எம்எல்ஏ சண்முகநாதன் ஓபிஎஸ் அணியில் உள்ளார். இதுதவிர 2 எம்எல்ஏக்களும் ஓபிஎஸ் அணிக்கு செல்வ முடிவு செய்துள்ளதாக தெரிகிறது. தூத்துக்குடி மாவட்டத்தை பொறுத்தவரை சண்முகநாதன் அதிமுகவில் செல்வாக்கு மிக்கவர். இவர் மாவட்ட செயலாளர், அமைச்சர் என பதவிகளை வகித்தவர். எனவே அவரது ஆதரவாளர்களாக உள்ள செயற்குழு, பொதுக்குழு உறுப்பினர்கள், ஒன்றிய செயலாளர்கள், நகர செயலாளர்கள்,பகுதி, கிளை செயலாளர்கள் என பலர் உள்ளனர். அவர்களும் கூண்டோடு ஓபிஎஸ் பக்கம் வருவதற்கு திட்டமிட்டுள்ளதாக தெரிகிறது. இதனால் நெல்லை, தூத்துக்குடி மாவட்டத்தில் மேலும் 4 எம்எல்ஏக்கள் மற்றும் அவரது ஆதரவாளர்கள் கூண்டோடு ஓபிஎஸ் அணிக்கு செல்லலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. இது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

மேலும் சில
  • புதுவையில் முதன் முறையாக நாளை ஜல்லிக்கட்டு போட்டி



  • சேலம் மாஜி எம்எல்ஏக்கள் 4 பேர் ஓபிஎஸ்க்கு ஆதரவு



  • தமிழகத்தில் அரசியல் நெருக்கடியால் கேரள, கர்நாடக அரசுகள் அத்துமீறல்; பி.ஆர்.பாண்டியன் குற்றச்சாட்டு



  • கவர்னர் முடிவெடுக்க போதிய அவகாசம் தேவை; பொன்.ராதாகிருஷ்ணன் பேட்டி



  • ‘முசிறி, மண்ணச்சநல்லூர் எம்எல்ஏக்களை காணவில்லை’ முன்னாள் டிஜிபி நட்ராஜை மீட்க கோரிக்கை



  • ரேஷன் கடைகளில் அரிசியை குறைத்து கோதுமை வழங்க நடவடிக்கை - தமிழக அரசு அறிவிப்பு



  • சசிகலாவின் முயற்சியை ஜெ ஆன்மா மன்னிக்காது; சங்கரன்கோவில் மாஜி பெண் எம்எல்ஏ ஆவேசம்



  • வங்கி அதிகாரி டார்ச்சரால் விவசாயி தற்கொலை; விவசாயிகள் விஷம் குடிக்கும் போராட்டம்



  • சாத்தூர் அருகே பட்டாசு ஆலையில் பயங்கர வெடி விபத்து; 2 தொழிலாளர்கள் உடல் சிதறி பலி



  • வெளிநாட்டில் பதுங்கியுள்ள காஞ்சி. ரவுடியின் ரூ.21கோடி சொத்து முடக்கம்; அமலாக்கத்துறை நடவடிக்கை



Facebook

Twitter

பாம்புடன் போஸ் கொடுத்த நடிகை கைது
  • எஸ்ஏ பொறியியல் கல்லூரியில் கருத்தரங்கு
  • பொன்னேரி நூலக வார விழா
  • பிரியதர்ஷினி கல்லூரியில் முதல் வருட மாணவர்களுக்கு வரவேற்பு
  • பட்டதாரி ஆசிரியர் தேர்வில் வெயிட்டேஜ் மதிப்பெண் ரத்து செய்ய வேண்டும்: ராமதாஸ் வலியுறுத்தல்
தலையங்கம் படங்கள் வீடியோ தமிழகம் இந்தியா ரீல்மா விளையாட்டு மாவட்ட மசாலா குற்றம் உலகம் கல்வி வேலை வாய்ப்பு தொழில் மருத்துவம் ஆன்மீகம் இ-பேப்பர் தினகரன் Facebook Twitter
Copyright 2016 All Rights Reserved to Kal Publications
No.229 Kutchery Road, Mylapore, Chennai - 600 004. Ph: 91-44-42209191
Website Advertisement
Ph: 91-44-42209191 Extn:21102, 21118
Newspaper Advertisement
Ph: +91 44 44676767
தொடர்புக்கு : [email protected] | செய்திகளை அனுப்ப : [email protected]