சைதாப்பேட்டை நீதிமன்றம் அருகே ஆட்டோ, பைக் மோதி 2 பேர் படுகாயம்
12/2/2025 3:19:33 PM
சென்னை, -சென்னை ஆதம்பாக்கத்தை சேர்ந்தவர் செல்வம் (55). ஆட்டோ டிரைவரான இவர் இன்று காலை சைதாப்பேட்டை நீதிமன்றம் அருகில் சென்று கொண்டிருந்தார். சாலையின் நடுவே சென்று கொண்டிருக்கும்போது ஆட்டோவில் இன்டிகேட்டர் போடாமல் ஆட்டோவை திருப்பியதாக தெரிகிறது. இதை கவனிக்காமல் அவ்வழியாக வந்த பைக் ஆட்டோ மீது வேகமாக மோதியுள்ளது. இதில் பைக்கில் இருந்த வாலிபர் தூக்கி வீசப்பட்டார். ஆட்டோவும் பைக்கும் நொறுங்கியது. விபத்தில் ஆட்டோ டிரைவர், பைக்கில் வந்த வாலிபர் ஆகியோர் படுகாயமடைந்தனர்.
இதுகுறித்து தகவல் அறிந்ததும் சம்பவ இடத்துக்கு வந்த கிண்டி போக்குவரத்து போலீசார், காயமடைந்த இருவரையும் மீட்டு ராயப்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து போலீசார் நடத்திய விசாரணையில், பைக்கில் வந்த வாலிபர் அணிஷ்குமார் என தெரியவந்தது.விபத்து குறித்து கிண்டி போக்குவரத்து புலனாய்வு பிரிவு போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்துகின்றனர். இதனிடையே ராயப்பேட்டை அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த அணிஷ்குமார், மேல் சிகிச்சைக்காக தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.