இ-பேப்பர்

தலையங்கம்

படங்கள்

வீடியோ

கல்வி

மாவட்ட மசாலா

முகப்பு

தமிழகம்

இந்தியா

உலகம்

குற்றம்

விளையாட்டு

மருத்துவம்

ரீல்மா

ஆன்மிகம்

வேலைவாய்ப்பு

தொழில்

முகப்பு

›

தமிழகம்

புதிய ரூ500 நோட்டு கிடைக்காமல் சில்லரை சிக்கலில் மக்கள் தவிப்பு

12/2/2025 3:18:59 PM
நாடாளுமன்றத்தில் விவாதமின்றி வருமான வரி திருத்த சட்டம் நிறைவேற்றியதற்கு எதிர்ப்பு ; ஜனாதிபதியிடம் 18 கட்சிகள் புகார் 18 பேரை பலிவாங்கிய வெடிவிபத்து வழக்கு சிபிசிஐடிக்கு மாற்றம் ; ஆலையில் நிபுணர்கள் ஆய்வு


சென்னை - புதிய 2000 ரூபாய்   நோட்டுக்கு சில்லரை கிடைக்காமல் மக்கள் தவித்து வருகின்றனர். ரூ.1000, ரூ.500  நோட்டுக்கள் செல்லாது என்று மத்திய அரசு கடந்த 8ம் தேதி இரவு அறிவித்தது. அதைத் தொடர்ந்து  பழைய நோட்டுகளுக்கு பதிலாக புதிய ரூ.2000 மற்றும் ரூ.500 நோட்டுகள்  அறிமுகப்படுத்தப்பட்டது. அன்று முதல் மக்கள்  வங்கிகள் மற்றும் ரிசர்வ் வங்கியில் பழைய நோட்டை  மாற்றி புதிய நோட்டுகள் பெற குவிந்தனர். இந்நிலையில் முதல் நாள் மட்டும் ரூ.2000, ரூ.100, ரூ.50, ரூ.20 ரூ.10 நோட்டுக்கள் ரிசர்வ் வங்கி மற்றும் வங்கிகளில்  வழங்கப்பட்டது. அன்று புதிய 500 ரூபாய் நோட்டுகள் எதுவும் வழங்கப்படவில்லை. மறுநாள் ரூ.500 நோட்டு  வந்துவிடும்  சில்லரைக்கு தட்டுப்பாடு இருக்காது  என நினைத்து மக்கள் புதிய ரூ.2000 நோட்டுகளை மகிழ்ச்சியுடன் வாங்கி சென்றனர். அதை தொடர்ந்து அதிகளவில் மக்களிடம் ரூ.2000 நோட்டுகள் புழக்கத்தில் வந்தன. இப்போது அனைவரிடமும் ரூ.2000 நோட்டுகள் உள்ளது. ஆனால் ரூ.500 நோட்டுகள் இன்னும் புழக்கத்துக்கு வராததால் புதிய ரூ.2000 நோட்டுக்கு சில்லரை கிடைக்காமல் மக்கள் திண்டாடி வருகின்றனர்.

ரூ.500, 1000 நோட்டு செல்லாது என்று அறிவித்து 24 நாட்களாகின்றன. ஆனால் 20 நாட்களுக்கு பிறகுதான் தமிழகத்தில் புதிய ரூ.500 நோட்டுகள் அறிமுகப்படுத்தப்பட்டன. ஆனாலும் அவை எல்லா வங்கிகளிலும் ஏடிஎம்களிலும் கிடைப்பதில்லை. கடந்த நான்கு  நாட்களாக  ரிசர்வ் வங்கி மற்றும் ஒரு சில வங்கிகளில் மட்டும்தான் புதிய ரூ.500  நோட்டுகள் கிடைக்கின்றன.
இன்னுமும் ரூ.500 நோட்டு அதிகளவில் மக்களிடம்  புழக்கத்தில் வராததால் தங்களிடமுள்ள ரூ.2000 நோட்டுக்கு சில்லரை இல்லாமல் மக்கள் கடும் அவதியடைந்து வருகின்றனர். இதனால் தங்கள் தேவைக்காக வங்கிகளில் பணம் எடுக்கும்போது ரூ.2000 கொடுக்கப்பட்டால் வாங்க மறுத்து வருகின்றனர்.

இதே போல் ஏடிஎம்களில் பணம் எடுக்க போகும் போது ‘‘ஒன்லி ரூ.2000’’ என்ற  போர்டு மாட்டப்பட்டு இருந்தால் அந்த ஏடிஎமில் பணம் எடுப்பதை தவிர்த்து  ரூ.100 நோட்டுகள் வரும் ஏடிஎம்களை தேடி செல்கின்றனர்  மக்கள்.  தினமும் கடைகள், மருத்துவமனை, மற்றும் தின கூலிகளாக வேலைகளுக்கு செல்பவர்களுக்கு அதிகபட்சம் கூலி ஒரு நாளைக்கு ரூ.500 ஆக இருக்கும் நிலையில் 4 பேருக்கு ஒரு 2000 ரூபாய் நோட்டை தந்து விடுவதால் அதை வாங்கியவர்கள் சில்லரை கிடைக்காமல் தவித்து வருகின்றனர். இதே போல் பல அத்தியாவசிய செலவுகளுக்கு ரூ.100, ரூ.50, ரூ.20 ரூ.10 நோட்டுகளே அதிகளவில்  தேவைப்படுவதால் புதிய ரூ.2000 நோட்டை முற்றிலும் தவிர்த்து வருகின்றனர் பொதுமக்கள். புதிய ரூ.2000 நோட்டுகளை கையில் வைத்திருக்கும் போது பணம் இருந்தும் எந்த பயனும் இல்லை என்ற நிலையே உள்ளதால் ரூ.2000 நோட்டை அலட்சியமாகவே பார்த்து வருகின்றனர்.

மேலும் சில
  • 3 ஆயிரம் மட்டுமே தரமுடியும் என்றதால் வங்கியை முற்றுகையிட்டு மக்கள் சாலை மறியல்



  • பழைய குற்றவாளிகளின் விவரம் அறிய சென்னை போலீசாருக்கு புதிய ‘மொபைல் ஆப்’



  • சைதாப்பேட்டை நீதிமன்றம் அருகே ஆட்டோ, பைக் மோதி 2 பேர் படுகாயம்



  • மீஞ்சூரில் டிரைவரை தாக்கி காரை கடத்திய 4 பேர் சிக்கினர்



  • முடிச்சூர் பகுதியில் சாலையில் கழிவுநீர் வெள்ளம் ; தூர்வாராத கால்வாயால் அவலம்



  • திருநின்றவூர் பகுதியில் கடைகள் ஆக்கிரமிப்பால் சுருங்கிய சிடிஎச் சாலை ; விபத்தில் உயிரிழப்பு அதிகரிப்பு



  • வீட்டுக்குள் பஸ் புகுந்து விவசாயி படுகாயம்



  • ஸ்மார்ட் போன் கொண்டு செல்வதை தடுக்க தூத்துக்குடி அனல் மின் நிலையத்தில் கடும் சோதனை - போராட்டம் நடத்த தொழிலாளர்கள் முடிவு



  • திருவண்ணாமலை கோயிலில் கார்த்திகை தீப திருவிழா: நாளை கொடியேற்றம் ; 10 நாட்கள் கோலாகலம்



  • காரைக்கால் நகராட்சியில் பெண் ஊழியரிடம் சில்மிஷம் ஆணையருக்கு அடி உதை



Facebook

Twitter

‘அட்ஜெஸ்ட்’ செய்தால்தான் நடிக்க வாய்ப்பு கிைடக்கும் - சன்னி லியோன் உடைக்கும் ரகசியம்
  • எஸ்ஏ பொறியியல் கல்லூரியில் கருத்தரங்கு
  • பொன்னேரி நூலக வார விழா
  • பிரியதர்ஷினி கல்லூரியில் முதல் வருட மாணவர்களுக்கு வரவேற்பு
  • பட்டதாரி ஆசிரியர் தேர்வில் வெயிட்டேஜ் மதிப்பெண் ரத்து செய்ய வேண்டும்: ராமதாஸ் வலியுறுத்தல்
தலையங்கம் படங்கள் வீடியோ தமிழகம் இந்தியா ரீல்மா விளையாட்டு மாவட்ட மசாலா குற்றம் உலகம் கல்வி வேலை வாய்ப்பு தொழில் மருத்துவம் ஆன்மீகம் இ-பேப்பர் தினகரன் Facebook Twitter
Copyright 2016 All Rights Reserved to Kal Publications
No.229 Kutchery Road, Mylapore, Chennai - 600 004. Ph: 91-44-42209191
Website Advertisement
Ph: 91-44-42209191 Extn:21102, 21118
Newspaper Advertisement
Ph: +91 44 44676767
தொடர்புக்கு : [email protected] | செய்திகளை அனுப்ப : [email protected]