அஜீத் குழந்தையுடன் பொழுதைபோக்கும் ஷாம்லி - பட வாய்ப்பு குறைந்தது
12/2/2025 3:11:54 PM
ஷாலினி, ஷாம்லி திரையுலகில் வளர்ந்து வரும்போதே தங்கள் பாதையை மாற்றி அமைத்துக்கொண்டனர். அஜீத்ைத மணந்து இல்லறத்தில் செட்டிலானார் ஷாலினி. அவரது தங்கை ஷாம்லி குழந்தை நட்சத்திரமாக 50க்கும் மேற்பட்ட படங்களில் நடித்து விட்டு ஹீரோயின் வாய்ப்புகளை ஏற்காமல் படிப்பில் கவனம் செலுத்தினார். சிலர் கட்டாயப் படுத்தி அவரை 2009ம் ஆண்டில் ‘ஒயே’ தெலுங்கு படத்தில் ஹீரோயினாக்கினர். மீண்டும் முருங்கை மரம் ஏறிய ஷாம்லி தொடர்ந்து நடிக்க மறுத்துவிட்டார். 6 ஆண்டுக்கு பிறகு இந்த ஆண்டு ஒரு மலையாள படத்திலும், தமிழில் வீர சிவாஜி படத்திலும் நடித்தார். தற்போது கைவசம் படங்கள் எதுவும் இல்லாமல் இருக்கிறார் ஷாம்லி.
வீட்டில் ஓய்விலிருக்கும் ஷாம்லி, அஜீத்-ஷாலினி குழந்தை ஆத்விக்கிற்கு விளையாட்டு காட்டி பொழுதை கழிக்கிறார். அவரை தூக்கிவைத்து கொஞ்சி மகிழ்கிறார். அஜீத்தின் மூத்த மகள் அனவ்ஷ்காவுக்கு தற்போது 8 வயது ஆகிவிட்டது. படிப்பில் படுசுட்டியாக வலம் வந்துக்கொண்டிருக்கிறார். படப்பிடிப்பு இல்லாத நாட்களில் மகளை அஜீத்தான் பள்ளிக்கு அழைத்துச் சென்று விட்டுவிட்டு வருகிறார். தவிர பள்ளியில் நடக்கும் கலை நிகழ்ச்சிகளில் மகள் பங்கேற்கும்போது தந்தை என்ற முறையில் பார்வையாளராக பங்கேற்பதுடன் கேமராவும் கையுமாக நின்றுகொண்டு புகைப்படம் எடுத்து அதை ஆல்பமாக சேகரித்து வருகிறார்.