இ-பேப்பர்

தலையங்கம்

படங்கள்

வீடியோ

கல்வி

மாவட்ட மசாலா

முகப்பு

தமிழகம்

இந்தியா

உலகம்

குற்றம்

விளையாட்டு

மருத்துவம்

ரீல்மா

ஆன்மிகம்

வேலைவாய்ப்பு

தொழில்

முகப்பு

›

தமிழகம்

திருவண்ணாமலை கோயிலில் கார்த்திகை தீப திருவிழா: நாளை கொடியேற்றம் ; 10 நாட்கள் கோலாகலம்

12/2/2025 2:27:13 PM
நாடாளுமன்றத்தில் விவாதமின்றி வருமான வரி திருத்த சட்டம் நிறைவேற்றியதற்கு எதிர்ப்பு ; ஜனாதிபதியிடம் 18 கட்சிகள் புகார் 18 பேரை பலிவாங்கிய வெடிவிபத்து வழக்கு சிபிசிஐடிக்கு மாற்றம் ; ஆலையில் நிபுணர்கள் ஆய்வு


திருவண்ணாமலை, -திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலில் கார்த்திகை தீபதிருவிழா ஆண்டுதோறும் 10 நாட்கள் சிறப்பாக நடைபெறுவது வழக்கம். அதன்படி இந்தாண்டு விழா நாளை (சனிக்கிழமை) கொடியேற்றத்துடன் தொடங்குகிறது. இதையொட்டி அதிகாலை 3 மணிக்கு நடை திறக்கப்பட்டு அண்ணாமலையார், உண்ணாமுலையம்மனுக்கு சிறப்பு அபிஷேகம், ஆராதனை நடக்கும். இதையடுத்து உற்சவர்கள் கோயிலில் இருந்து கொடி மரம் அருகே எழுந்தருள்வார்கள். காலை 7.15 மணிக்கு மேல் 8.30 மணிக்குள் அண்ணாமலையார் கோயில் சுவாமி சன்னதி முன்பு உள்ள 61 அடி உயர தங்க கொடிமரத்தில் சிவாச்சாரியார்கள் வேதமந்திரங்கள் ஓத கொடி ஏற்றப்படும். அதைத்தொடர்ந்து விழா நடைபெறும் 10 நாட்களும் பகல், இரவில் உற்சவ மூர்த்திகள் மாடவீதியில் பவனி வந்து பக்தர்களுக்கு அருள்பாலிப்பார்கள்.

முதல் நாளான நாளை காலை பஞ்சமூர்த்திகள் கண்ணாடி வாகனத்திலும், இரவில் பஞ்சமூர்த்திகள் மூஷிகம், மயில், வெள்ளி அதிகாரநந்தி. ஹம்சம், சிம்மவாகனத்தில் பவனி வருகிறார்கள். 2ம் நாளான நாளை மறுநாள் காலை விநாயகர், சந்திரசேகரர் தங்க சூரியபிறை வாகனத்திலும், இரவில் பஞ்சமூர்த்திகள் வெள்ளி இந்திர வாகனத்திலும் மாடவீதியில் பவனி வருகிறார்கள்.
முக்கிய நிகழ்வுகளில் ஒன்றான 63 நாயன்மார்கள் ஊர்வலம் 6ம் நாள் (8ம்தேதி) நடக்கிறது. அன்று இரவு வெள்ளிரத ஊர்வலமும் நடைபெறுகிறது. இதையடுத்து 7ம் நாள் (9ம்தேதி) தேர்த்திருவிழா நடைபெறுகிறது. அன்று காலை முதல் இரவு வரை தேரோட்டம் நடைபெறும். விநாயகர், முருகர், அண்ணாமலையார், அம்மன், சண்டிகேஸ்வரர் தேர்கள் மாடவீதியில் அடுத்தடுத்து பவனி வரும். இதில் அம்மன் தேரை பெண்களே விரதமிருந்து இழுத்து வருவார்கள். இவ்விழாவில் சுமார் 5 லட்சம் பக்தர்கள் கலந்து கொள்வார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

இவ்விழாவின் உச்சக்கட்டமாக மகாதீபதிருவிழா 10ம்நாள் (12ம்தேதி) நடைபெறுகிறது. அன்று அதிகாலை 4 மணிக்கு கோயிலினுள் பரணிதீபமும், மாலை 6 மணிக்கு கோயிலின் பின்புறமுள்ள 2668 அடி உயர மலையில் மகாதீபமும் ஏற்றப்படும். விழாவை காண சுமார் 20 லட்சம் பக்தர்கள் திருவண்ணாமலைக்கு வருவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.

மேலும் சில
  • 3 ஆயிரம் மட்டுமே தரமுடியும் என்றதால் வங்கியை முற்றுகையிட்டு மக்கள் சாலை மறியல்



  • பழைய குற்றவாளிகளின் விவரம் அறிய சென்னை போலீசாருக்கு புதிய ‘மொபைல் ஆப்’



  • சைதாப்பேட்டை நீதிமன்றம் அருகே ஆட்டோ, பைக் மோதி 2 பேர் படுகாயம்



  • புதிய ரூ500 நோட்டு கிடைக்காமல் சில்லரை சிக்கலில் மக்கள் தவிப்பு



  • மீஞ்சூரில் டிரைவரை தாக்கி காரை கடத்திய 4 பேர் சிக்கினர்



  • முடிச்சூர் பகுதியில் சாலையில் கழிவுநீர் வெள்ளம் ; தூர்வாராத கால்வாயால் அவலம்



  • திருநின்றவூர் பகுதியில் கடைகள் ஆக்கிரமிப்பால் சுருங்கிய சிடிஎச் சாலை ; விபத்தில் உயிரிழப்பு அதிகரிப்பு



  • வீட்டுக்குள் பஸ் புகுந்து விவசாயி படுகாயம்



  • ஸ்மார்ட் போன் கொண்டு செல்வதை தடுக்க தூத்துக்குடி அனல் மின் நிலையத்தில் கடும் சோதனை - போராட்டம் நடத்த தொழிலாளர்கள் முடிவு



  • காரைக்கால் நகராட்சியில் பெண் ஊழியரிடம் சில்மிஷம் ஆணையருக்கு அடி உதை



Facebook

Twitter

‘அட்ஜெஸ்ட்’ செய்தால்தான் நடிக்க வாய்ப்பு கிைடக்கும் - சன்னி லியோன் உடைக்கும் ரகசியம்
  • எஸ்ஏ பொறியியல் கல்லூரியில் கருத்தரங்கு
  • பொன்னேரி நூலக வார விழா
  • பிரியதர்ஷினி கல்லூரியில் முதல் வருட மாணவர்களுக்கு வரவேற்பு
  • பட்டதாரி ஆசிரியர் தேர்வில் வெயிட்டேஜ் மதிப்பெண் ரத்து செய்ய வேண்டும்: ராமதாஸ் வலியுறுத்தல்
தலையங்கம் படங்கள் வீடியோ தமிழகம் இந்தியா ரீல்மா விளையாட்டு மாவட்ட மசாலா குற்றம் உலகம் கல்வி வேலை வாய்ப்பு தொழில் மருத்துவம் ஆன்மீகம் இ-பேப்பர் தினகரன் Facebook Twitter
Copyright 2016 All Rights Reserved to Kal Publications
No.229 Kutchery Road, Mylapore, Chennai - 600 004. Ph: 91-44-42209191
Website Advertisement
Ph: 91-44-42209191 Extn:21102, 21118
Newspaper Advertisement
Ph: +91 44 44676767
தொடர்புக்கு : [email protected] | செய்திகளை அனுப்ப : [email protected]