இ-பேப்பர்

தலையங்கம்

படங்கள்

வீடியோ

கல்வி

மாவட்ட மசாலா

முகப்பு

தமிழகம்

இந்தியா

உலகம்

குற்றம்

விளையாட்டு

மருத்துவம்

ரீல்மா

ஆன்மிகம்

வேலைவாய்ப்பு

தொழில்

முகப்பு

›

குற்றம்

தூத்துக்குடியில் ஓடும் பஸ்சில் பயங்கரம் - 2 மாணவர்களுக்கு சரமாரி கத்திக்குத்து: 4 பேர் கைது

12/2/2025 2:22:46 PM
நாடாளுமன்றத்தில் விவாதமின்றி வருமான வரி திருத்த சட்டம் நிறைவேற்றியதற்கு எதிர்ப்பு ; ஜனாதிபதியிடம் 18 கட்சிகள் புகார் 18 பேரை பலிவாங்கிய வெடிவிபத்து வழக்கு சிபிசிஐடிக்கு மாற்றம் ; ஆலையில் நிபுணர்கள் ஆய்வு




தூத்துக்குடி, -தூத்துக்குடியில் ஓடும் பஸ்சில் 2 மாணவர்களுக்கு கத்திக்குத்து விழுந்தது. இது தொடர்பாக 4 மாணவர்கள் கைது செய்யப்பட்டனர்.தூத்துக்குடி புறநகர் பகுதிகளான பழையகாயல், முள்ளக்காடு, கோவங்காடு உள்ளிட்ட ஊர்களிலிருந்து டவுன் பகுதிக்குள் உள்ள பள்ளிகளில் ஏராளமான மாணவ, மாணவிகள் படித்து வருகின்றனர். கோவங்காடு பகுதியிலிருந்து தூத்துக்குடி நகரத்திற்கு 5ஏ டவுன் பஸ் இயக்கப்படுகிறது. இந்த பஸ்சில் தூத்துக்குடி வடக்கு கடற்கரை ரோட்டில் உள்ள ஒரு பள்ளி மற்றும் லயன்ஸ் டவுனில் உள்ள ஒரு பள்ளியில் கோவங்காடு, முள்ளக்காடு மற்றும் ராஜீவ்நகர் பகுதி மாணவர்கள் படித்து வருகின்றனர்.
இந்த இரு பள்ளிகளிலும் படிக்கும் மாணவர்கள் இரு வேறு சமுதாயத்தைச் சேர்ந்தவர்கள் என்பதால் அவர்களிடையே அடிக்கடி மோதல்கள் நடந்து வருகிறது.

இவர்கள் வரும் 5ஏ டவுன் பஸ்சின் உட்புறம் ஜியாமெட்ரி பாக்ஸ் காம்பசால் தாங்கள் சார்ந்த சமுதாயத்தின் பெயரை வீரம் என்ற அடைமொழியுடன் சேர்த்து எழுத வடக்கு பீச்ரோட்டில் உள்ள பள்ளியின் 9ம் வகுப்பு மாணவர்கள் சிலர் முயற்சித்துள்ளனர். இதற்கு லயன்ஸ் டவுன் பள்ளியில் படிக்கும் 11ம் வகுப்பு மாணவர்கள் எதிர்ப்பு தெரிவித்துள்ளனர். இதனால் 3 நாட்களுக்கு முன்பே அந்த பஸ்சில் இரு பிரிவு மாணவர்களுக்கும் இடையே தகராறு ஏற்பட்டுள்ளது.

இந்நிலையில் இன்று காலை வழக்கம் போல் முத்தையாபுரம் பெட்ரோல் பல்க் சந்திப்பில் 5 ஏ பஸ் வந்தது. இதில் வந்த இரு பிரிவு மாணவர்களுக்கு இடையே மீண்டும் தகராறு ஏற்பட்டது. தகராறு முற்றவே ஒருவரையொருவர் கடுமையாக தாக்கிக் கொண்டனர். இதில் 11ம் வகுப்பு மாணவர்கள் முள்ளக்காட்டைச் சேர்ந்த பொன்திவாகர் (15), அரவிந்தராஜ் (17) ஆகிய 2 பேருக்கும் சரமாரி கத்திக்குத்து விழுந்தது
.
மோதலை உணர்ந்த பஸ்சின் டிரைவர் உடனடியாக பஸ்சை முத்தையாபுரம் போலீஸ் நிலையத்திற்கு ஓட்டி வந்தார்.  படுகாயமடைந்த பொன் திவாகர், அரவிந்தராஜ் 2 பேரையும் தூத்துக்குடி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு போலீசார் கொண்டு சென்று சேர்த்தனர். அவர்களுக்கு அங்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.  போலீசார் விசாரணை நடத்தி மற்றொரு பள்ளியில் 9ம் வகுப்பு படிக்கும் மாணவர்கள் முத்துராஜ் (17), முனீஸ்வரன் (15), முத்துமாரி (16), திருப்பதி (16) ஆகிய 4 பேரை கைது செய்தனர்.மாணவர்கள் கத்திக்குத்து பட்ட சம்பவம் தூத்துக்குடி மற்றும் புறநகர் பகுதிகளில் பெரும் பரபரப்பையும், பதற்றத்தையும் ஏற்படுத்தியுள்ளது. இதையடுத்து கோவங்காடு, முத்தையாபுரம் பகுதிகளில் பாதுகாப்புக்காக போலீசார் நிறுத்தப்பட்டுள்ளனர்.

மேலும் சில
  • போலி நகை அடமானம் வைத்து வங்கியில் 3 லட்சம் ரூபாய் மோசடி - நகை மதிப்பீட்டாளர் கைது



  • கணவனை அடித்து கொன்ற மனைவி போலீசில் சரண்



  • சிறுமிகள் பலாத்கார வழக்கில் மேலும் 3 பேர் கைது



  • வளவநாதீஸ்வரர் கோயில் ஐம்பொன் சிலை திருட்டு: 7பேர் கைது



  • வடபழனியில் கணவர் படுகொலை - கள்ளக்காதலனுடன் நெருக்கம் ஏற்பட்டது எப்படி? ; மனைவி பரபரப்பு வாக்குமூலம்



  • மருத்துவ சீட்டு மோசடி வழக்கில் போலீஸ் விசாரணை முடிந்து மதன் மீண்டும் சிறையில் அடைப்பு



  • மரத்தில் கட்டிவைத்து கர்ப்பிணியை தாக்கிய மாமனார், மாமியார் கைது



  • காலாவதி விசாவுடன் சுற்றிய வெளிநாட்டினர் 2 பேர் கைது



  • பிளம்பரை அடித்து கொன்று தண்டவாளத்தில் சடலம் வீச்சு - மனைவி, கள்ளக்காதலன் உள்பட 3 பேர் கைது ; திருநின்றவூரில் பரபரப்பு



  • திருப்பதி அருகே செம்மரக் கடத்தல் கும்பல் மீது போலீசார் துப்பாக்கி சூடு - ஒருவர் கைது



Facebook

Twitter

‘அட்ஜெஸ்ட்’ செய்தால்தான் நடிக்க வாய்ப்பு கிைடக்கும் - சன்னி லியோன் உடைக்கும் ரகசியம்
  • எஸ்ஏ பொறியியல் கல்லூரியில் கருத்தரங்கு
  • பொன்னேரி நூலக வார விழா
  • பிரியதர்ஷினி கல்லூரியில் முதல் வருட மாணவர்களுக்கு வரவேற்பு
  • பட்டதாரி ஆசிரியர் தேர்வில் வெயிட்டேஜ் மதிப்பெண் ரத்து செய்ய வேண்டும்: ராமதாஸ் வலியுறுத்தல்
தலையங்கம் படங்கள் வீடியோ தமிழகம் இந்தியா ரீல்மா விளையாட்டு மாவட்ட மசாலா குற்றம் உலகம் கல்வி வேலை வாய்ப்பு தொழில் மருத்துவம் ஆன்மீகம் இ-பேப்பர் தினகரன் Facebook Twitter
Copyright 2016 All Rights Reserved to Kal Publications
No.229 Kutchery Road, Mylapore, Chennai - 600 004. Ph: 91-44-42209191
Website Advertisement
Ph: 91-44-42209191 Extn:21102, 21118
Newspaper Advertisement
Ph: +91 44 44676767
தொடர்புக்கு : [email protected] | செய்திகளை அனுப்ப : [email protected]