சிவாஜி, ராஜகுமாரி, நாகேஷ் போன்றவர்கள் சினிமா தியேட்டர்கள் கட்டி நடத்தி வந்தனர். அண்ணாசாலையில் மகள் சாந்தி பெயரில் சிவாஜி நடத்திய திரை அரங்கம் தற்போது இடிக்கப்பட்டு வர்த்தக வளாகத்துடன் கூடிய திரை அரங்கமாக மாற்றப்படுகிறது. பாண்டிபஜாரில் இயங்கி வந்த ராஜகுமாரி தியேட்டர் இருந்த இடத்தில் தற்போது வர்த்தக வளாகம் கட்டப்பட்டள்ளது. அதன் அருகே நகைச்சுவை நடிகர் நாகேஷ் கட்டிய தியேட்டரும் தற்போது கல்யாண மண்டபமாகிவிட்டது. இந்த தியேட்டரை மையமாக வைத்து ‘நாகேஷ் திரையரங்கம்’ பெயரில் புதியபடம் உருவாகிறது.
ஒரே ஷாட்டில் ‘அகடம்’ படத்தை இயக்கி கின்னஸில் இடம்பெற்ற இயக்குனர் இசாக் இப்படத்தை இயக்குகிறார். அவர் கூறும்போது,’திரை அரங்கை மையமாக வைத்து உருவாகும் இதன் கதைக் களம் நகைச்சுவை, காதல், மர்மம் பின்னணியை கொண்டது. ஆரி, ஆஷ்னா சவேரி, மாடல் அழகி மாஷு, லதா, சித்தாரா, காளி வெங்கட் நடிக்கின்றனர். இசை அமைக்கிறார். நாகேஷ் தியேட்டர் மற்றும் சென்னை, புறநகர் பகுதிகளில் படப்பிடிப்பு நடக்கிறது’ என்றார்.