வீரம், வேதாளம் படத்தையடுத்து சிவா இயக்கத்தில் அஜீத் நடிக்கும் புதிய படத்துக்கு ஆஸ்திரியா நாட்டில் படப்பிடிப்பு நடக்கிறது. இன்டர்போல் அதிகாரியாக வேடம் ஏற்றிருக்கும் அஜீத்துக்கு ஜோடியாக காஜல் அகர்வால் நடிக்கிறார். இதன் முதல் கட்ட படப்பிடிப்பு நடந்து முடிந்தது. இந்தியாவில் பல்வேறு நகரங்களில் அடுத்த கட்ட படப்பிடிப்பு நடக்கிறது. அஜீத்துக்கு பொருத்தமான வில்லனை தேர்வு செய்ய தீவிர ஆலோசனையில் ஈடுபட்டு வந்தார் இயக்குனர்.
நான் ஈ நடிகர் சுதீப்பை நடிக்க கேட்டபோது அவர் ஏற்கவில்லை. இதையடுத்து பாலிவுட் நடிகர் ஒருவரை வில்லனாக்க முயற்சி மேற்கொள்ளப்பட்டது. இந்தியில் அதிக பட வாய்ப்புகள் இல்லாமல் இருக்கும் அபிஷேக் பச்சனை நடிக்க வைக்க பேசப்பட்டது. அதே சமயம் விவேக் ஓபராயிடமும் பேச்சு நடக்கிறது. இவர்களில் விவேக் ஓபராய் வில்லனாக நடிக்க ஒப்புக்கொண்டதாக தெரிகிறது. இதுபற்றி அதிகாரபூர்வ அறிவிப்பை படக் குழு விரைவில் வெளியிட உள்ளது. ஏற்கனவே சூர்யா நடித்த ராம் கோபால் வர்மா இயக்கிய ரத்தசரித்திரம் படத்தில் விவேக் ஓபராய் வில்லனாக நடித்திருக்கிறார்.