என்னாச்சி என்று கேட்கும் அளவுக்கு சமீபகாலமாக ஐஸ்வர்யாராயின் நடவடிக்கைகள் திரையுலகினரை குழப்பத்தில் ஆழ்த்தி உள்ளது. அபிஷேக் பச்சனை மணந்தபிறகு நடிக் காமல் ஒதுங்கி இருந்த ஐஸ்வர்யாராய், 5 ஆண்டுகளுக்aகு பிறகு கடந்த வருடம் ஜஸ்பா படத்தில் ரீஎன்ட்ரி ஆனார். அடுத்து சரப்ஜித் படத்தில் நடித்தார். ஐஸ்வர்யாராய் மீண்டும் நடிப்பதற்கு அபிஷேக் பச்சனின் தாயார் ஜெயாபச்சன் எதிர்ப்பு தெரிவித்தார். இதையடுத்து அபிஷேக் பச்சனுடன் ஐஸ்வர்யாராய் தனிக்குடித்தனம் செல்லவுள்ளதாக தகவல் பரவியது.
இந்நிலையில்தான் ரன்பீர் கபூருடன், ஏ தில் ஹை முஷ்கில் படத்தில் ஜோடியாக நடித்திருக் கிறார் ஐஸ்வர்யாராய். ரன்பீருடன் நெருக்கமான பெட்ரூம் காட்சிகளிலும், முத்தக் காட்சிகளிலும் நடித்து பரபரப்பை ஏற்படுத்தினார். இது அமிதாப் குடும்பத்தினருக்கு அதிர்ச்சி அளித்தது. தணிக்கையில் இக்காட்சிகள் வெட்டி எறியப்பட்டன. இதனால் நிம்மதி பெருமூச்சுவிட்ட அமிதாப் குடும்பத்தினருக்கு மற்றொரு அதிர்ச்சி தந்திருக்கிறார் ஐஸ்வர்யாராய். ஆங்கில சினிமா இதழ் ஒன்றுக்கு ரன்பீருடன் ஐஸ்வர்யாராய் போட்டோவுக்கு கொடுத்திருக்கும் நெருக்கமான போஸ்கள்தான் அதிர்ச்சிக்கு காரணம். நாற்காலியில் அமர்ந்திருக்கும் ரன்பீர் கபூர் மடி மீது ஐஸ்வர்யாராய் அமர்ந்தபடி ஒரு போஸும், நின்ற நிலையில் ரன்பீர் கபூருடன் தோளோடு தோள் சேர்த்து இருக்கமாக அணைத்தபடி கொடுத்திருக்கும் போஸும் இணைய தளத்தை கலக்கிக்கொண்டிருக்கிறது. மற்றொரு ஸ்டில்லில் சட்டை மட்டுமே அணிந்திருக்கும் ஐஸ்வர்யாராய் ரன்பீர் கபூரின் மடியில் சாய்ந்தபடி படுகவர்ச்சியாக போஸ் தந்து அதிர வைத்திருக்கிறார். இதனால் அமிதாப் குடும்பம் அவர் மீது கோபத்தில் இருக்கிறதாம்.