பேய் பங்களா கதையில் லட்சுமி பிரியா-பூஜா
ஸ்ரீனிவாசன், லட்சுமி பிரியா, பூஜா நடிக்கும் படம் ‘களம்’. ராபர்ட் ராஜ் இயக்குகிறார். இப்படத்தின் டிரெய்லர் வெளியிடப்பட்டது. படம் பற்றி இயக்குனர் கூறும்போது, ‘மெசேஜுடன் கூடிய மாறுபட்ட ஹாரர் த்ரில்லர். படம் பார்க்க வருபவர்களை இது ஏமாற்றாது. 80 சதவீத படப்பிடிப்பு ஒரு பங்களாவுக்குள் நடந்துள்ளது. முகேஷ் ஜி.ஒளிப்பதிவு. பிரகாஷ் நிக்கி இசை. தயாரிப்பு பி.கே.சந்திரன். சுபீஷ் சந்திரன். இதன் கதை, திரைக்கதை வசன பொறுப்பையும் ஏற்றிருக்கிறார் தயாரிப்பாளர்களில் ஒருவரான சுபீஷ். எஸ்கேப் ஆர்டிஸ்ட் மதன் ரிலீஸ் செய்கிறார்’ என்றார்.