நடிப்புக்கு முழுக்கு அறிவித்த ஹீரோவிடம் வாய்ப்பு பெற ரகுல் தீவிர முயற்சி
கோலிவுட்டில் பெரிய வாய்ப்பில்லாமல் டோலிவுட்டில் நடிக்க சென்ற ரகுல் ப்ரீத் சிங் முன்னணி நடிகைகள் வரிசையில் இடம் பிடித்தார். டாப் ஹீரோக்களுடன் ஜோடி சேர்ந்து நடித்து வரும் அவருக்கு டோலிவுட் முன்னணி ஹீரோ பவன் கல்யாணுடன் ஜோடியாக நடிக்க இதுவரை வாய்ப்பு கிடைக்கவில்லை. அவருடன் ஜோடிபோட ஆவலாக காத்திருப்பதாக சமீபத்தில் ரகுல் ப்ரீத் கூறினார்.இந்நிலையில் சில தினங்களுக்கு முன் பேட்டி அளித்த பவன் கல்யாண்,’நடிப்பில் எனக்கு போரடித்துவிட்டது. இன்னும் 2 அல்லது 3 படங்களுக்கு பிறகு நடிப்புக்கு முழுக்கு போடுவேன். அரசியலில் தீவிரமாக குதிப்பேன்’ என்று குறிப்பிட்டிருந்தார். பவனின் இந்த அறிவிப்பை கேட்டு ஷாக் ஆனார் ரகுல். இன்னும் 2 அல்லது 3 படங்களுக்குள் முழுக்கு போட முடிவு செய்துள்ள பவனுடன் ஜோடியாக நடித்துவிட வேண்டும் என்று தீவிர முயற்சியில் ஈடுபட்டிருக்கிறார் ரகுல். தெரிந்தவர்கள் மூலமாக தூதும் விட்டுக்கொண்டிருக்கிறாராம்.