நடிக்கும் ஆசையில் வரும் இளைஞர்கள் கதை
புதுமுகங்கள் நடிக்கும் படம் ‘பாதை’. இதுபற்றி கதை எழுதி தயாரித்து இயக்கும் ஏ.ஆர்.பிரபு கூறியது:நடிக்கும் ஆசை, இயக்குனர் மற்றும் தயாரிப்பாளர் ஆக வேண்டும் என்ற ஆசையில் சென்னை வரும் இளைஞர்கள், பணம் பறிக்கும் கும்பலிடம் சிக்கி தவிப்பதும், பலர் போதைக்கு அடிமையாகி வாழ்வை தொலைப்பதுமாக நிறைய சம்பவங்கள் கோடம்பாக்கத்தில் நடக்கிறது. இதில் பல வெளியுலகுக்கு தெரியாமல் மறைந்துவிடுகிறது. அதையெல்லாம் வெளிச்சம் போட்டு காட்டும் கதையாக ஸ்கிரிப்ட் உருவாகி இருக்கிறது. புதுமுகங்கள் ஸ்டாலின், லோகு, தர்ஷன், முருகன், அபிஷேக், வினோத், ஜீவிதா, சசிரேகா, மாலதி ஆகியோருடன் முக்கிய வேடமொன்றில் நானும் (ஏ.ஆர்.பிரபு) நடிக்கிறேன். சந்திரன் சாமி ஒளிப்பதிவு.