மஞ்சுவாரியர்-மேனகாவுக்கு அரசியல் வலை
கோலிவுட் ஹீரோயின்கள் அரசியல் ஆர்வம் காட்டி வருவதுடன் தீவிரமாக பிரசாரங்களிலும் ஈடுபடுகின்றனர். காங்கிரஸ் கட்சியில் குஷ்பு, நக்மா இணைந்து பணியாற்றுகின்றனர். நமீதா அரசியலுக்கு வரவுள்ளதாக ஏற்கனவே அறிவித்திருக்கிறார். இந்த மோகம் தற்போது மல்லுவுட்டுக்கும் பரவி உள்ளது. நடிகர் திலீப்பை விவாகரத்து செய்துவிட்டு மீண்டும் நடிக்க வந்திருக்கிறார் மஞ்சுவாரியர். அவரை பா.ஜ.வில் சேர்க்க முயற்சி நடக்கிறது. கேரளாவில் விரைவில் நடக்கவுள்ள சட்டசபை தேர்தலில் அவரை திருவனந்தபுரம் தொகுதியில் தங்களது வேட்பாளராக நிறுத்த பா.ஜ தீவிரமாக ஆலோசித்து வருகிறது.
ரஜினியுடன் ‘நெற்றிக்கண்’ படத்தில் நடித்த மேனகாவையும் வேட்பாளராக நிறுத்த அக்கட்சி முயற்சி மேற்கொண்டிருக்கிறது. மேனகாவின் மகள்தான் நடிகை கீர்த்தி சுரேஷ். ‘ரஜினி முருகன்’ படத்தில் இவர் ஹீரோயினாக நடித்துள்ளார். மேலும் சுரேஷ் கோபி, முகேஷ் உள்ளிட்ட நடிகர்களும் தேர்தலில் போட்டியிட உள்ளார்களாம். மஞ்சுவாரியர் அரசியல் என்ட்ரி வேகமாக பரவியது. இதுபற்றி அவர் காதுக்கு தகவல் சென்றபோது ‘தேர்தலில் போட்டியிடும் எண்ணம் இல்லை’ என்று பதில் அளித்திருக்கிறார். ஆனாலும் அவரை அரசியலுக்கு இழுக்கும் முயற்சி தொடர்கிறது.