நாமக்கல்: சேலம் மாவட்டம் ஓமலூரை சேர்ந்த இன்ஜினியர் கோகுல்ராஜ் (24) கொலை வழக்கில் முக்கிய குற்றவாளியான தீரன்சின்னமலை பேரவை நிறுவனர் யுவராஜ் (39) நாமக்கல் சிபிசிஐடி அலுவலகத்தில் சரண் அடைந்தார். இந்த வழக்கில் 17 பேர் கைது செய்யப்பட்டனர். இவர்களில் 10 பேர் ஜாமீனில் வந்தனர். யுவராஜ் உள்ளிட்ட 7 பேர் குண்டர் சட்டத்தில் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.
இவ்வழக்கு விசாரணை நாமக்கல் தலைமை குற்றவியல் நீதிமன்றத்தில் நேற்று விசாரணைக்கு வந்தது. நீதிபதி மலர்மதி முன் குற்றம் சாட்டப்பட்ட யுவராஜ் உள்பட 17 பேரும் ஆஜர்படுத்தப்பட்டனர். நீதிபதி மலர்மதி, ‘’ கோகுல்ராஜ் கொலை வழக்கு விசாரணை இனி மேல், மாவட்ட முதன்மை நீதிமன்றத்தில் நடைபெறும். அங்கு வழக்கை மாற்றி உள்ளேன். எனவே, 17 ம் தேதி 17 பேரும் மாவட்ட முதன்மை நீதிமன்றத்தில் ஆஜராகவேண்டும்’’ என்றார். இதையடுத்து 1,318 பக்கங்களை கொண்ட குற்றப்பத்திரிகை நகல் வழங்கப்பட்டன. பின்னர் யுவராஜை வேலூர் சிறைக்கு அழைத்து சென்றனர்.