நடிகர் மன்சூர் அலிகான் மகன் வாகனம் மோதி காயம்
சென்னை: நடிகர் மன்சூர் அலிகான் மகன் துக்ளக் (17). நேற்று இரவு தொழுகையை முடித்துவிட்டு அடையாறு சென்றுள்ளார். அதிகாலை 1 மணி அளவில் சர்தார் படேல் சாலை வழியாக பைக்கில் சென்றுள்ளார். அப்போது, பின்னால் வந்த வாகனம் துக்ளக் பைக் மீது பயங்கரமாக மோதியது. இதில், அவர் நண்பருடன் கீழே விழுந்து காயம் அடைந்தார். அடையார் போக்குவரத்து புலனாய்வு பிரிவு போலீசார் சம்பவ இடத்துக்கு வந்து காயம் அடைந்த துக்ளக்கை அருகில் உள்ள மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதற்கிடையில், வழக்குப் பதிவு செய்துள்ள அடையாறு போக்குவரத்து புலனாய்வு பிரிவு போலீசார் விபத்தை ஏற்படுத்தியரை தேடி வருகின்றனர். முதல் கட்டமாக அங்குள்ள கண்காணிப்பு கேமராவை ஆய்வு செய்து வருகின்றனர்.