6 நடிகைகள் மறுத்த வேடத்தை ஏற்ற ஹீரோயின்: மிஷ்கின் தகவல்
ஹீரோயின்களுக்கிடையே கவர்ச்சி அதிகம் காட்டுவது யார் என்ற போட்டி ஒருபக்கம் நடந்தாலும் சவாலான வேடம், ஆக்ஷன் வேடங்களில் நடிக்கவும் அதற்காக சண்டை பயிற்சி, உடல் எடை கூடுவது, குறைப்பது என மெனக்கெடவும் செய்கின்றனர். பாலா, மிஷ்கின், செல்வராகவன் படங்களில் நடிக்கும் நடிகைகளுக்கு வேலை அதிகம். மிஷ்கின் இயக்கிய ‘பிசாசு’ படத்தில் நடித்த பிரயாகா ஒரு காட்சியில் மட்டுமே தனது முகத்தை காட்டினார். மற்ற காட்சிகளில் பேய் வேடத்தில்தான் நடித்தார். அத்துடன் அந்தரத்தில் தொங்கியபடி ஆவேசமாக நடிக்க வேண்டி இருந்தது. புதியவர் ஆதித்யா இயக்கத்தில் அடுத்து மிஷ்கின் எழுதி, தயாரிக்கும் புதிய படத்தில் நடிக்க ஹீரோயின்கள் தேடி வந்தார். 6 ஹீரோயின்களிடம் கதை சொன்னார். யாரும் நடிக்க முன்வரவில்லை. பூர்ணா நடிக்க ஒப்புக்கொண்டிருக்கிறார்.இது பற்றி மிஷ்கின் கூறும்போது, ‘6 ஹீரோயின்கள் இந்த வேடத்தில் நடிக்க மறுத்துவிட்டனர். பூர்ணா நடிக்க ஒப்புக்கொண்டதை வரவேற்கிறேன். சவால் வேடமான இதை ஏற்க அவருக்கு தைரியம் இருக்கிறது. முதலில் நான்தான் ஹீரோவாக நடிக்க எண்ணினேன். ஸ்கிரிப்ட் எழுதி முடித்தபிறகு நடிகர் ராம் பொருத்தமாக இருந்ததால் அவர் ஹீரோவாக நடிக்கிறார். நெகடிவ் வேடத்தில் நான் நடிக்கிறேன். இதற்காக 15 கிலோ எடை குறைக்க உள்ளேன்’ என்றார்.