தொழிலாளர் நலத்துறை வழங்கும் டிப்ளமோ கோர்ஸ்
தமிழ்நாடு தொழிலாளர் நலத்துறை வழங்கும் டிப்ளமோ படிப்புகளுக்கு அட்மிஷன் நடக்கிறது. தொழிலாளர் நலத்துறையின் கீழ் சென்னையில் தமிழ்நாடு தொழிலாளர் கல்வி நிலையம் இயங்கி வருகிறது. இங்கு தொழில்நிறுவனங்களில் உடனடி வேலைவாய்ப்பை பெற்றுத்தரும் டிப்ளமோ, பட்டப்படிப்பு மற்றும் முதுகலை படிப்புகள் நடத்தப்படுகின்றன. ஒவ்வொரு பாடப்பிரிவுக்கும் குறிப்பிட்ட அளவுக்கு மாணவர் சேர்க்கை நடத்தப்படுகிறது.
இக்கல்வி நிலையத்தில் பிஏ தொழிலாளர்கள் மேலாண்மை, எம்ஏ தொழிலாளர்கள் மேலாண்மை, தொழிலாளர்கள் நிர்வாகத்தின் முதுநிலை மாலை நேர டிப்ளமோ (பிஜிடிஎல்ஏ) உள்ளிட்ட பாடப்பிரிவுகள் உள்ளன. பிளஸ் 2 முடித்த மாணவர்கள் பட்டப்படிப்பிலும், இளங்கலை பட்டம் பெற்றவர்கள் முதுநிலை பாடப்பிரிவிலும் சேர விண்ணப்பிக்கலாம்.
இதற்கான விண்ணப்பங்களை ‘இயக்குனர், தமிழ்நாடு தொழிலாளர் கல்வி நிலையம், எண்-5, காமராஜர் சாலை, சென்னை’ என்ற முகவரியில் பெற்றுக்கொள்ளலாம். பூர்த்தி செய்த விண்ணப்பங்களை வரும் 31ம் தேதிக்குள் சமர்ப்பிக்க வேண்டும். மாணவர் சேர்க்கை இடங்கள், கல்விக்கட்டணம், மாணவர் சேர்க்கை தகுதி உள்ளிட்ட விவரங்களை மேற்கண்ட முகவரியில் தெரிந்து கொள்ளலாம்.