தமன்னாவுக்கு திரையுலகுக்குள் நுழைந்த ஆரம்ப கட்டத்தில் பட வாய்ப்புகள் மந்தமாகவே இருந்தது. இதையடுத்து விளம்பர படங்களில் நடித்து வந்தார். மெல்ல அவருக்கு பட வாய்ப்புகள் அதிகரிக்க தொடங்கியது. தமிழ், தெலுங்கு, இந்தி படங்களில் பிஸியாக நடித்து வந்தார். ஒன்று இரண்டு ரவுண்டு வந்தவருக்கு தற்போது மீண்டும் வாய்ப்புகள் குறைய ஆரம்பித்திருக்கிறது. இதையடுத்து தனது கவனத்தை தங்க நகைகள் டிசைனிங் செய்யும் வியாபாரத்தில் திருப்பி இருக்கிறார். ஏற்கனவே இவரது தந்தை நகை வியாபாரி என்பதால் அதில் தமன்னாவுக்கும் அனுபவம் உண்டு. தற்போது ஒயிட் அண்ட் கோல்டு என்ற பெயரில் தானே வடிவமைத்த டிசைன்களை அறிமுகப்படுத்துகிறார்.
இது பற்றி அவர் கூறும்போது, ‘எனது ரசிகர்களுக்காக என் எண்ணத்தில் உருவான டிசைன் நகைகளை உருவாக்குகிறேன். சினிமாவில் நான் அணிந்து வந்த நகைகளை ரசித்து ஆதரவு தந்தவர்கள் அவர்கள். ஒவ்வொருவரும் தாங்கள் அடைய இருந்த இலக்கையே தொழிலாக மேற்கொள்வதென்பது அதிர்ஷ்டம்தான். நடிப்பு, நகை டிசைனிங் பணி இரண்டிலும் நான் இலக்கு வைத்திருந்தேன். இரண்டும அடைந்திருக்கிறேன். அந்தவகையில் நான் 2 முறை லக்கி' என்றார்.