எந்த காலத்திலும் பலமான அணியாக விளங்கும் தென்ஆப்பிரிக்க அணி, இதுவரையில் உலக கோப்பையை வென்றதில்லை என்ற ஏமாற்றம் தொடர்கிறது. இந்த உலக கோப்பையில் அந்த ஏமாற்றத்திற்கு விடை காண்போம் என்ற உறுதியுடன் தென்ஆப்பிரிக்காவில் இருந்து புறப்பட்டு வந்தனர். அரைஇறுதி போட்டிக்கு முன், எங்களை யாரும் தடுத்து நிறுத்தமுடியாது என கேப்டன் டிவில்லியர்ஸ் சூளுரைத்தார். ஆனால் பரபரப்பான கட்டத்தில் தென்ஆப்பிரிக்கா தோல்வி அடைந்தது.
இதனால் கேப்டன் டிவில்லியர்ஸ், டுபிளசிஸ், மோர்கல் ஆகியோர் கண்ணீர் மல்க மைதானத்தை விட்டு வெளியேறினர். கோப்பையுடன் திரும்புவோம் என்று உறுதியுடன் வந்த தென்ஆப்பிரிக்க அணி இந்த முறையும் ஏமாற்றத்துடன் நாடு திரும்புகிறது. தோல்வி குறித்து டிவில்லியர்ஸ் கூறு கையில், உலக கோப்பையுடன் தாயகம் திரும்புவோம் என்ற எதிர்பார்ப்பு நடக்காமல் போய் விட்டது. முடிந்த அளவுக்கு சிறப்பாக செயல்பட்டோம். இதனால் அதிகம் வருத்தப்பட தேவையில்லை. இருப்பினும் இதிலிருந்து மீள சிறிது காலம் தேவைப்படும் என்றார்.