ஆக்லாந்து: தென் ஆப்பிரிக்கா-நியூசிலாந்து அணிகள் மோதிய முதல் அரையிறுதி ஆட்டம் ஆக்லாந்தில் உள்ள ஈடன் பார்க் மைதானத்தில் இன்று நடந்தது. 23 ஆண்டுகளுக்கு முன் இதே மைதானத்தில் இன்சமாம் உல் ஹக்கின் அதிரடியால் பாகிஸ்தானிடம் தோல்வி கண்டு உலக கோப்பையில் இருந்து வெளியேறிய நியூசிலாந்து, இந்த முறை வலுவான அணியாக தென் ஆப்பிரிக்காவை எதிர் கொண்டுள் ளது. 7 போட்டிகளில் தோல் வியே காணாத அணியாக களமிறங்கியுள்ள நியூசிலாந்து அணி உலக கோப்பை யை வெல் லும் ‘பேவரைட்’ அணியாகவும் கணிக்கப்பட்டுள்ளது.வலுவான தென் ஆப்பிரிக்க அணியும் முதல் முறையாக அரையிறுதியில் வென்று இறுதிப்போட்டிக்குள் நுழையும் முனைப்பில் உள்ளது. தென்னாப்பிரிக்க அணியில் ஸ்விங் பவுலரான கெய்ல் அப்போட் நீக்கப்பட்டு, அதிவேக பந்து வீச்சாளரான வெர்னான் பிலாண்டர் சேர்க்கப்பட்டார்.
டாஸ் வென்ற தென் ஆப்பிரிக்க கேப்டன் ஏபி டிவில்லியர்ஸ் பேட்டிங்கைத் தேர்வு செய்தார். ஹாஷிம் ஆம்லா, குவிண்டன் டிகாக் ஆகியோர் துவக்க பேட்ஸ்மேன்களாக களமிறங்கினர். டிரெண்ட் பவுல்ட்டின் அதிவேக அதிரடி பந்து வீச்சில் தென் ஆப்பிரிக்காவின் துவக் கம் சரிந்தது. ஆம்லா, டிகாக் ஆகியோர் ரன் குவிக்க வேண்டும் என்ற நோக்கத்தில் நியூசிலாந்து பவுலர்களின் பந்துகளை வேகமாக அடிக்க முயன்று ஆட்டமிழந்தனர். நியூசிலாந்து பந்து வீச்சாளர் டிரெண்ட் பவுல்ட்டின் துல்லிய பந்து வீச்சில் முதலில் சிக்கியவர் ஹாஷிம் ஆம்லா. 10 ரன்கள் எடுத்திருந்த ஆம்லா, பவுல்ட் வீசிய பந்தை அடிக்க முயன்ற போது, பந்து பேட்டில் படாமல் ஸ்டம்புகளை தகர்த்தது.
பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட குவிண்டன் டிகாக்கும் ஏமாற்றினார். 14 ரன்கள் எடுத்த அவர் பவுல்ட் பந்தை அடிக்க முயன்று சவுத்தியிடம் கேட்ச் கொடுத்தார்.மூன்றாவது விக்கெட்டு க்கு டூபிளெஸ்சிஸ்-ரஸ்ஸோ ஜோடி வெளுத்து வாங்கியது. அதிரடியாக விளையாடிய ரஸ்ஸோ 1 சிக்சர் அடித்தார். அவர் 39 ரன்கள் எடுத்திருந்த நிலையில் ஆண்டர்சன் பந்தை அடிக்க முயன்றார். ஆனால், தன்னை தாண்டிச் செல்ல முயன்ற பந்தை குப்தில் எழும்பி ஒரு கையால் அபாரமாக பிடித்து ஆட்டமிழக்கச் செய்தார். இதன் பின்னர் டூபிளெஸ்சிஸ்-கேப்டன் ஏபி டிவில்லியஸ் ஜோடி சேர்ந்தனர். இருவரும் நியூசிலாந்து பந்து வீச்சை வெளுத்து வாங்கினர். குறிப்பாக ஏபி டிவில்லியர் அதிவேகமாக ரன்களைச் சேர்த்தார். டூபிளெஸ்சிஸ் 85 பந்துகளில் அரை சதம் அடித்தார்.
இதன் பின்னர் அவரும் தென் ஆப்பிரிக்க பவுலர்களின் பந்துகளை பவுண்டரிக்கு விளாசுவதில் ஆர்வம் காட்டினார். இதனால் தென் ஆப்பிரிக்காவின் ரன் எடுக்கும் வேகம் அதிகரித்தது. இந்நிலையில், தென் ஆப்பிரிக்கா 32 பந்துகளில் அரை சதம் (1 சிக்சர், 7 பவுண்டரி) விளாசினார். நான்காவது விக்கெட்டுக்கு டூபிளெஸ்சிஸ்-டிவில்லியர்ஸ் ஜோடி 71 பந்துகளில் 100 ரன்களை விளாசியது. தென் ஆப்பிரிக்கா 38 ஓவர்களில் 3 விக்கெட் இழப்புக்கு 216 ரன்கள் எடுத்திருந்த நிலையில் மழை குறுக்கிட்டது. இதனால் ஆட்டம் நிறுத்தப்பட்டது. அப்போது டூபிளெஸ்சில் 82 ரன்களுடனும், ஏபி டிவில்லியர்ஸ் 60 ரன்களுடனும் ஆட்டமிழக்காமல் ஆடிக் கொண்டிருந்தனர்.