பைக் மீது பஸ் மோதல் : கணவன்,மனைவி பலி
கும்பகோணம்: தஞ்சை மாவட்டம் கும்பகோணம் மேலக்காவேரி புதுத்தெருவைச் சேர்ந்தவர் ஆசிக்உசேன் (56). இவரது மனைவி பஜ்ருனிஷா(54). இருவரும் காட்டுமன்னார்கோவிலில் உள்ள மகள் வீட்டுக்கு சென்றுவிட்டு, பைக்கில் நேற்று மாலை கும்பகோணம் நோக்கி வந்து கொண்டிருந்தனர்.கும்பகோணம் சென்னை சாலைய¤ல் கள்ளப்புலியூர் என்ற இடத்தில் வந்தபோது, எதிரே கும்பகோணத்திலிருந்து திட்டக்குடி நோக்கி சென்ற தனியார் பஸ், பைக் மீது மோதியது. இதில் பஜ்ருனிஷா அதே இடத்தில் பலியானார். உயிருக்கு போராடிய ஆசக்உசேனை உடனடியாக கும்பகோணம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு வந்தனர். ஆனால் அவரும் வரும் வழியிலே இறந்தார். தனியார் பஸ் டிரைவர் அங்கிருந்து தப்பி ஓடிவிட்டாரஇது குறித்து கும்பகோணம் தாலுகா போலீசார் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனர்.