அல்லு அர்ஜுன் பட விழா: போலீசில் புகார்
அல்லு அர்ஜுன், சமந்தா நடிக்கும் தெலுங்கு படம் ‘சன் ஆப் சத்யமூர்த்தி' . திரிவிக்ரம் ஸ்ரீனிவாஸ் டைரக்டு செய்கிறார். இப்படத்தின் ஆடியோ விழா ஐதராபாத்தில் உள்ள ஒரு ஓட்டலில் கடந்த 15ம் தேதி நடந்தது. முன்னதாக விழா ஏற்பாடு செய்தவர்கள் இதற்கான டிக்கெட்டுகளை விற்றனர். 2 ஆயிரம் பேர் அமர்ந்து பார்க்கும் இடத்திற்கு அதைவிட அதிகமானவர்களுக்கு பாஸ் விற்றதாக தெரிகிறது. நிகழ்ச்சி நாளன்று ஏராளமானோர் இடம் கிடைக்காமல் அரங்கிற்கு வெளியே நிற்க வேண்டி இருந்தது. இதில் கடுப்பான ரசிகர்கள் ஐதராபாத் போலீசில் புகார் செய்தனர். சீட் இருப்பதாக சொல்லி ஏமாற்றி டிக்கெட் விற்கப்பட்டதாக புகார் கூறப்பட்டிருந்தது. இதுபற்றி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.