அனுஷ்கா சர்மாவுக்கு கோஹ்லி டுவிட்டரில் வாழ்த்து
பாலிவுட்டின் தற்போதைய திரில்லர் படமான என்எச்-10 படத்தில், இந்தியாவின் நட்சத்திர பேட்ஸ்மேன் விராட் கோஹ்லியின், கேர்ள் பிரண்டான அனுஷ்கா சர்மா முக்கியமான கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். என்எச்-10 படத்தை பார்த்த விராட் கோஹ்லி, டுவிட்டரில் அனுஷ்கா சர்மாவுக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார். அதில், என்எச்-10 திரைப்படம் நன்றாக உள்ளது. குறிப்பாக அனுஷ்கா சர்மாவின் நடிப்பு மிக பிரமாதம். இதனால் பெருமிதம் அடைகிறேன் என கூறியுள்ளார்.