Untitled Document
Tamil Month Rasi Palan Maasi 2013
2015
18
Mar
இலங்கையின் துவக்க விக்கெட்டுகள் சரிவு

tamil news, tamil news paper, tamil newspaper, tamil evening news paper

சிட்னி: உலககோப்பை கிரிக்கெட் போட்டி ஆஸ்திரேலியா, நியூசிலாந்து நாட்டில் நடந்து வருகிறது. லீக் போட்டியின் முடிவில் ஏ பிரிவில் இருந்து நியூசிலாந்து, ஆஸ்திரேலியா, இலங்கை, வங்காளதேசம் அணிகளும், பி- பிரிவில் இருந்து இந்தியா, தென் ஆப்பிரிக்கா, பாகிஸ் தான், வெஸ்ட்இண்டீஸ் அணிகளும் கால்இறுதிக்கு தகுதி பெற்றன.இதன் முதல் கால்இறுதி போட்டி ஆஸ்திரேலியாவின் சிட்னி நகரில் இந்திய நேரப்படி காலை 9 மணிக்கு தொடங்கியது. இதில் டாஸ் வென்ற இலங்கை கேப்டன் மேத்யூஸ் பேட்டிங்கை தேர்வு செய்தார். இலங்கை அணியில் ஜனித் பெரேரா, தில்ஷன், சங்ககரா, ஜெயவர்த்தனே, மேத்யூஸ், திரிமன்னே, திசரா பெரேரா, குலசேகரா, கவுசல், சுஷ்மந்தசமீரா, மலிங்கா ஆகி யோரும்,  தென் ஆப்பிரிக்கா ஹசிம் அம்லா,  குயின்டன் டி காக், பாப் டுபிளிஸ்சிஸ், ரிலீ ரோசவ், டிவில்லியர்ஸ், டேவிட் மில்லர்,  டுமினி,  ஸ்டெயின், கைல் அப்போட், மோர்னே மோர்கல், இம்ரான் தாஹிர் ஆகியோர் இடம்பெற்றுள்ளனர்.

ஆட்டத்தின் தொடக்கத்திலேயே இலங்கை அணிக்குஅதிர்ச்சி காத்திருந்தது. இரண்டாவது ஓவரின் 4வது பந்தில் குசால்பெரேரா 3 ரன்னில் ஆட்டம் இழந்தார். அவரின் விக்கெட்டை அப்போட் வீழ்த்தினார். இதில் இருந்து மீள்வதற்குள் ஸ்டெ யின் வீசிய 5வது ஓவரில் முதல் பந்தில் தில்சான் ரன் எதுவும் எடுக்காத நிலையில் டுபிளசிஸ்சிடம் கேட்ச் கொடுத்து வெளியேறினார். இதனால் இலங்கை அணி தடுமாறியது. சங்ககராவும் திரிமன்னேவும் அணியை சரிவில் இருந்து மீட்க போ ராடினர். 14 ஓவரில் இலங்கை அணி 2 விக்கெட் இழப்பிற்கு 48 ரன் எடுத்திருந்தது.

மேலும் சில
கருத்துகளை தெரிவிக்க

முதல் நபராக கருத்தை பதிவு செய்யுங்கள்!!

உங்கள் கருத்துகளை தெரிவிக்க
உங்கள் பெயர்
நகரம்
மின்அஞ்சல்
உங்கள் கருத்து
(Press Ctrl+g or click this   to toggle between English and Tamil)
 

 
Tamil, Tamil News,Tamil News paper, Tamil Newspaper, Tamil daily news paper, Tamil daily newspaper, cinema,



Follow Me
Health Corner: Current Health News, latest medical news, health news, medical news, medical dictionary, most popular news, hospital, diets, drugs, dental care, bird flu, cancer, mens health, womens health, mental health, health articles, diabetes, medical conditions, health animation, video, Free Online Medical journals, alternative medicine - Dinakaran
 
Advertisement
Advertisement