திருவள்ளூரில் தேசிய ஊரக குடிநீர், சுகாதார விழிப்புணர்வு பேரணி
திருவள்ளூர்: திருவள்ளூரில் தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரியத்தின் சார்பில் தேசிய ஊரக குடிநீர், சுகாதார விழிப்புணர்வுப் பேரணி நடைபெற்றது.திருவள்ளூர் கலைச்சங்கம் மைதானத்தில் துவங்கிய பேரணியை மாவட்ட கலெக்டர் வீரராகவராவ் துவக்கி வைத்தார். தேரடி, குளக்கரை வழியாக சென்ற பேரணி மீண்டும் மைதானத்தை வந்தடைந்தது. இதில் கலந்துகொண்ட மாணவர்கள், தரமான குடிநீர் குறித்து பொது மக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் துண்டு பிரசுரங்களை வழங்கியபடி சென்றனர். பேரணியில் ஊராட்சிகளின் உதவி இயக்குநர் லட்சுமணன், தமிழ்நாடு குடிநீர் வடிகால் வாரிய செயற்பொறியாளர் ரவிச்சந்திரன், ஒன்றிய குழுத் தலைவர்கள் புட்லூர் சந்திரசேகர், தட்சணாமூர்த்தி உட்பட பலர் கலந்து கொண்டனர்.