திருவள்ளூர்: திருவள்ளூர் தொகுதியில் பாமக வெற்றி நிச்சயம் குறித்த பொறுப்பாளர்கள் கலந்தாய்வு கூட்டம் மணவாளநகரில் நடைபெற்றது. கூட்டத்திற்கு மாநில துணை தலைவர் வ.பாலயோகி தலைமை வகித்தார். மாவட்ட செயலாளர் நா.வெங்கடேசன் வரவேற்றார். மாநில நிர்வாகிகள் இ.தினேஷ்குமார், எஸ்.ஐ.செல்வம் முன்னிலை வகித்தனர்.கூட்டத்தில் மாநில தலைவர் ஜி.கே.மணி, துணை பொது செயலாளர் கோ.ரவிராஜ், அமைப்பு செயலாளர் செல்வகுமார் ஆகியோர் கலந்துகொண்டு பேசினர்.
இதில், மாநிலத் தலைவர் ஜி.கே.மணி பேசுகையில், ‘தமிழகம் முழுவதும் உள்ள மின் நிலையங்களில் அடிக்கடி பாதிப்பு என கூற¤, மின் உற்பத்தி நிறுத்தப்படுகிறது. இது திட்டமிட்ட சதி. இதை தடுத்து நிறுத்த மாநில அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். தற்போது கடுமையான வறட்சியால் மின் தட்டுப்பாடு ஏற்படும் அபாயம் உள்ளது' என்றார். கூட்டத்தில், ஒன்றிய, நகர நிர்வாகிகள் கேசவன், சுரேஷ், விஜயகுமார், வாசுதேவன், பக்தன், கண்ணன், குமார் உட்பட அனைத்து அணி நிர்வாகிகளும் கலந்துகொண்டனர். ஒன்றிய செயலாளர் மோ.விஜயராகவன் நன்றி கூறினார்.