கெஜ்ரிவாலுக்கு நீதிமன்றம் கண்டனம்
புதுடெல்லி: அவதூறு வழக்கில் ஆஜராகாத முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு டெல்லி நீதிமன்றம் கண்டனம் தெரிவித்துள்ளது. டெல்லியில் கடந்த 2013ம் ஆண்டு சட்டப்பேரவை தேர்தலில், ஆம் ஆத்மி கட்சி சார்பில் போட்டியிட வாய்ப்பு தருவதாக கூறி, தன்னை கெஜ்ரிவால் ஏமாற்றி விட்டதாக சுரேந்தர் குமார் சர்மா என்பவர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். இந்த வழக்கு தொடர்பாக, மெட்ரோபாலிட்டன் மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் ஆஜராகுமாறு கெஜ்ரிவால், கட்சியின் மூத்த தலைவர்களான மணீஷ் சிசோடியா, யோகேந்திர யாதவ் ஆகியோருக்கு ஏற்கனவே உத்தரவிடப்பட்டிருந்தது.மூவரும் ஆஜராகாததற்கு கடும் கண்டத்தை தெரிவித்த நீதிபதி, இன்று மதியம் 2 மணிக்குள் கெஜ்ரிவால் உள்ளிட்ட மூவரும் ஆஜராக வேண்டுமென உத்தரவிட்டார்.